|
22/10/17
| |||
வேண்டியதில்லை.
இன்னொரு ‘யோக்கிய வரலாற்றை’ பார்க்கலாம்.
1951-லேயே, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை பெரியார்
தான் பெற்றுக் கொடுத்தார். முதன் முதலாக அவர்தான், அதற்கென்று ஒரு
மாநாட்டை திருச்சியில் நடத்தினார் என்ற சம்பவத்தைச் சொல்கிறார்கள்.
அப்போது என்ன நடந்தது.? செண்பகம் துரைராஜன் என்ற பிராமணப் பெண்மணி
மருத்துவத்திற்கு விண்ணப்பித்தார். கிடைக்கவில்லை. அப்போது ObC-களுக்கு
அரசு ஒதுக்கீடு இருந்தது. . (இந்த OBC இட ஒதுக்கீட்டைக்கூட காங்கிரஸ்
கட்சியின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் கொண்டு வந்தது.)
“அதனால் தான் எனக்கு இடம் கிடைக்கவில்லை. SC-ST களுக்கான இட ஒதுக்கீடு
என்பது அரசியல் சாசன சட்ட அங்கீகாரம் பெற்றது. ஆனால் ObC களுக்கான இட
ஒதுக்கீடு அப்படியான, ‘அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றதல்ல” என்று உயர்
நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கு உச்சநீதி மன்றமும்
செல்கிறது. ObC களுக்கான இட ஒதுக்கீடு முறையானதல்ல என ரத்துச் செய்கிறது
நீதி மன்றம்
அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் இதற்கு
எதிராக குரல் எழுப்புகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் குமாரசாமி ராஜா
முதல்வர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெருந்தலைவர் காமராஜர்
இருந்தார். பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா மற்ற
தம்பிகளோடு பிரிந்து போய்விட்டார். ஆக அப்போது பெரியாருடையது அவ்வளவு
பெரிய இயக்கமும் இல்லை.
ஆனாலும் திருச்சியில் இட ஒதுக்கீட்டு சட்டம் வேண்டி மாநாட்டை
நடத்துகிறார். அது ஒரு கருத்துருவாக்கம். வரவேற்க கூடிய ஒன்று.
மறுப்பதற்கில்லை.
அந்த நேரத்தில் (தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. குமாரசாமி ராஜா முதல்வர்)
தமிர்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராஜர், ‘பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்ற வேண்டும். அப்படி செய்தால்
கட்சிக்கும் மதிப்புயரும் என்று நேருவிடம் சொல்கிறார். அதற்கு வடநாட்டு
காங்கிரஸ் தலைவர்கள், ‘நான்சென்ஸ்’ என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆனாலும் நேரு காமராஜரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார். தமிழகத்தில் ஆளும்
கட்சி, மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவர் காமராஜர், ‘நாங்கள் தான் காரணம்’
என்று எங்கேயும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. ஆனால்
பெரியாரிஸ்ட்டுகள் ‘வரலாறே’ எழுதிவிட்டார்கள்.! தாங்கள் தான் காரணம்
என்று. (பெரியரும் போராடினார். பெரியார் மட்டுமே அல்ல)
பெரியார் கொள்கைகள் எட்டாத உ.பி.யில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
பெண் மாயாவதி முதல்வராக இருந்தார். ஒடிசா மாநிலத்தில் ஒரு எஸ்.டி.
முதல்வராக இருந்தார்.
ஆனால் சமூக நீதிக்காக போராடிய இந்த பெரியார் மண்ணில் மட்டும் அது
சாத்தியப்படாமல், சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பெரியார் மண்ணில்?, ஆறாவது முறையாகவும் கருணாநிதி தான் மீண்டும்
முல்வராக அமர வேண்டும் என்ற விதத்தில்தான் சமூக நீதி இருக்கிறது.
ஒரே ஒரு முறை திருமாவளவனோ, அதியமானோ அல்லது தங்கள் கட்சிக்குள் இருக்கும்
ஒரு ஒடுக்கப்பட்டவரை முதல்வராக உட்கார வைக்க வேண்டும் என இவர்களுக்குத்
தோன்றாது. பதவி நாற்காலி என்றாலே பெரியாரிசத்தை ‘தனக்குத் தானே அடகு
வைத்துக் கொள்வார்கள். ”மூளை சுளுக்கு’ வந்துவிடும்.
தமிழ அரசின் உச்ச பதவி என்பது தலைமைச் செயலாளர்,- டி.ஜி.பி. என்பதுதான்.
ஐம்பதாண்டு கால திராவிடர்களின் வரலாற்றில் எத்தனை முறை அந்த பதவியில்
தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு
என்று வேண்டாம். தகுதி, சீனியாரிட்டி எல்லாம் இருந்தும் தவிர்க்கப்
பட்டவர்கள் எத்தனை பேர்?.
எல்லா சேரிகளிலும், எல்லா தலைவர்களின் சிலைகளும் இருக்கின்றது. எங்காவது
ஒரு ஊர்த்தெருவிற்குள் ஒரு அம்பேத்கார் சிலையாவது வைத்ததுண்டா?
செருப்படியும், சாணியடியும் அம்பேத்கர் சிலைக்கு மட்டுமே தான் நடந்து
கொண்டிருக்கிறது. இதுதான் பெரியாரின் சமூக நீதி பேசிய திராவிடர்களின்
ஆட்சி.
ஆண்டு தோறும் நடக்கும் தமிழர் திருநாள் தைப் பொங்கலின் போது பெரியார்
திடல் ‘பெனிஃபிட்-கம்பெனி’ காரர்கள் மட்டும், “திராவிட பொங்கல்” என்று
விழா வைப்பார்கள். அரை நூற்றாண்டாகி விட்டது, கர்நாடகத்திலும்,
ஆந்திராவிலும், கேரளாவிலும் இவர்களின் ‘திராவிடப் பொங்கல்’ பொங்குவதே
இல்லை. காரணம் அங்கு ஏமாளிகள் கிடையாது.
பெரியாரின் கொள்கையையும், போராட்டத்தையும் பெரியார் காலத்திலேயே அவரது
தம்பிகள் அடகு வைத்துவிட்டார்கள். இப்போது, அன்று ‘திராவிடம்
பேசியவர்கள்’, அப்படி பேசி ‘அதிகாரத்தைப் பிடித்தவர்கள்’ செய்தது என்ன
என்று பார்த்தால் ‘வெங்காயமாக’தான் இருக்கிறது. உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாமல்….
கடைசியாக ஒன்று;- சமூக நீதியை பேசாத, ‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு
மரகதம் சந்திரசேகர், தியாகி கக்கன், இளையபெருமாள் என மூன்று
தாழ்த்தப்பட்ட நிர்வாகிகளை கட்சியின் தலைவர்களாக போட்டிருக்கிறது தலைமை.
அட, பாரதிய ஜனதா கட்சிகூட தமிழ்நாட்டிற்கு தலைவராக டாக்டர் கிருபாநிதி
என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகியை தலைவர் பதவியில்
அமர்த்தியிருக்கிறது.
ஆனால் அரைநூற்றாண்டுக்கும் மேலாக சமூகநீதியை பேசிய திராவிட கட்சிகளில்?
திராவிடர் கழகம் என்ற பெரியார் திடல் மடம் ஃபெனிபிட் கம்பெனியில்
கி.வீரமணிக்கு அடுத்து அவரது மகனுக்கு மணிமகுடம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணா, அவருக்கடுத்து கருணாநிதியே தலைமை.
அவருக்குப் பின் மகன் ஸ்டாலின் மகுடம் சூட்டிக்கொள்ள காத்திருக்கிறார்.
அ.தி.மு.க.வில் சொல்லவே வேண்டாம். எம்.ஜி.ஆர். பிறகு ஜெயலலிதா, அவர்
இறந்த பிறகுகூட கட்சி தலைமை பதவிக்கு ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமிக்க மனம்
வரவில்லை.
தேசிய முற்போக்கு திராவிடர் கட்சி விஜயகாந்த் பற்றி சொல்லவே வேண்டாம்.
அதிகம் வேண்டாம்,இவர்கள் யாருமே, ஒரு பொருளாளர் பதவியையாவது அந்த
சமூகத்திற்கு கொடுக்க முன்வரவில்லை
இதுதான் பெரியாரிய கொள்கைகளை தூக்கி பிடித்து வளர்ந்த திராவிட கட்சிகளின் லட்சணம்.
- பா. ஏகலைவன்
லைன்ஸ் மீடியா
21-10-17
ஈ.வே.ரா ஈவேரா இட ஒதுக்கீடு தலித்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக