சனி, 27 ஜனவரி, 2018

1500கள் இருண்ட மதவெறி ஐரோப்பா போன்று ஹிந்தியா இன்று

aathi tamil aathi1956@gmail.com

20/10/17
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
1500 ஆம் ஆண்டைய இருண்ட கிருத்துவ ஐரோப்பாவே இன்றைய இருண்ட இந்துத்துவ இந்தியா..
1500 களில் ஐரோப்பா எப்படி இருந்தது?
அது ஸ்பெய்ன், பிரான்சு, ஜெர்மனி என மொழிவழி தேசிய இன உரிமை நாடுகளாய்
இல்லை. மொத்த கிருத்துவ ஐரோப்பாவாக இருந்தது.
ஸ்பெயினியன், ஜெர்மானியன் என்ற உணர்வை சொல்லாதே, எல்லாம் கிருத்தவன்
என்று சொல் என ரோம் கிருத்துவ சபையால் ஆளப்பட்டது.
ஆங்கிலம், ஸ்பெயின், பிரென்சு, ஜெர்மானிய மொழிகள் வெறும் வட்டார மொழிகள்
என்றும், லத்தீன் புனித மொழி என்றும் பரப்பப்பட்டது.
கல்வி, அறிவியல், வழிபாட்டில் ஐரோப்பிய மொழிகள் தள்ளப்பட்டு லத்தீனே
திணிக்கப்பட்டது.
ஐரோப்பா முழுதும் நிலங்கள், அரசுகள் ரோம் கிருத்துவ சபையின்
கட்டுப்பாடில் வைத்து அரசுகள் கிருத்துவ போப்பால், பாதிரிகளால்
ஆளப்பட்டது.
அரசை விட ரோம் கிருத்துவ சபை மேலானது, போப் மேலானவர் என பரப்பப்பட்டு
எதிர்க்கும் அரசுகள் ஏனைய அரசுகளால் ஒடுக்கப்பட்டது.
கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவிலே கிருத்துவ போப்பே தரகர் எனப்பட்டு
ஐரோப்பிய மக்கள் மீது ரோமும், கிருத்துவமும் ஆதிக்கம் செலுத்தி ஐரோப்பிய
மொழி தேசிய இனங்கள் என்ற ஒன்றே இல்லை என சொல்லப்பட்டது. எதிர்ப்பவன்
கிருத்துவ ஐரோப்பாவின் தேசத்துரோகி என சொல்லப்பட்டு பல லட்சக்கணக்கானோர்
கொல்லப்பட்டனர்.
இறுதியில் மொழிவழி தேசிய இனங்களாய் மக்கள் திரண்டபின் ரோம் கிருத்துவ சபை
ஆதிக்கம் அழிக்கப்பட்டு, பாதிரிகள் விரட்டப்பட்டு, ரோம் பிடுங்கிய
நிலங்கள் கைப்பற்றப்பட்டு, ஒவ்வொரு ஐரோப்பிய மொழி இனமும், தன் மொழியை
தூக்கிப்பிடித்து தனக்கான நாட்டை உருவாக்கி விடுதலை பெற்றது.
ஆனால் இன்றும் இந்தியாவிலோ..
தேசிய மொழி இனம் என சொல்பவன் தேச விரோதி..
எல்லாரும் இந்து..
சமசுகிருதமே தேவ மொழி..அதன் வடிவான இந்தியே ராஜ பாஷா..
நிலங்கள் வளங்கள் அதிகாரங்கள் இந்து பேரால் மடங்களுக்கும் பிராமணர்களுக்கு
ம் சொந்தம்..
மொழி உரிமை கோரி எதிர்க்கும் இனங்கள் மீது இந்துத்துவ ராணுவ தாக்குதல்..
இந்துத்துவ இருண்ட இந்தியா ஒழிந்து தேசிய இனங்கள் தனக்கான நாடுகளை
பெறவேண்டுமானால்..
முதலில் எல்லாம் இந்து என்னும் பிராமணர்களின் போலி மதம் உடைக்கப்பட வேண்டும்.
இந்துத்துவ பௌத்த என எவ்வடிவிலும் சாமியார்கள் ஒழிக்கப்படவேண்டும்.
தமிழ் மொழியை தூக்கி பிடித்து இனமாக திரளவேண்டும்.

தேசியவாதம் மதவாதம் தேசியம் உலகஇனங்கள் இனம் கிறித்துவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக