வியாழன், 25 ஜனவரி, 2018

ஒரே பாரதம் தமிழை நீக்கியது நடுவணரசு

aathi tamil aathi1956@gmail.com

18/10/17
பெறுநர்: எனக்கு
ast updated : 13:50 (14/10/2017)
தமிழ் மொழியை மட்டும் தவிர்த்துள்ள மத்திய அரசின் இணையதளம்..!
0 0 0
SHARES
மத்திய அரசின் ஒரே பாரதம் (http://ekbharat.gov.in/) என்ற இணையதளத்தில்
தமிழ் மொழிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஏக்பாரத் (ஒரே
இந்தியா) என்ற இணையதளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளத்தில்
இந்தியாவின் கலாசாரக் கூறுகள் குறித்தும் மொழிகள் குறித்தும்
விளக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதன்
நோக்கம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணையத்தின் முகம்
முகப்பு பக்கத்தில் ஐந்து படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் படங்களில்,
இந்திய கலாசாரங்கள், விளையாட்டுகள் என விளக்கப் படங்கள் உள்ளன. அதில்,
"ஏக் பாரத் ஷ்ரெஸ்தா பாரத்" (ek bhart shreshtha bharat) என்று ஆங்கிலம்
உள்பட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும்
எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழிக்கு மட்டும் இடம்
அளிக்கப்படவில்லை. தமிழ் மொழியில் அந்த வாசகம் குறிப்பிடப்படவில்லை.
மத்திய அரசின் ஒரு இணையத்தில் தமிழ் மொழி விடுபட்டிருப்பது பெரும்
அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/india/105004-central-government-website-skipped-tamil-language.html

ஹிந்தியா ஹிந்தி தமிழ்மொழி புறக்கணிப்பு வலை இணையம் மொழியுரிமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக