செவ்வாய், 30 ஜனவரி, 2018

ராஜேந்திர சோழன் படையெடுப்பு ஆண்டு தெலுங்கர் எமன் பட்டம்

aathi tamil aathi1956@gmail.com

21/10/17
பெறுநர்: எனக்கு
கார்த்திகேயன் பாண்டியர் மதுரை , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
இராசேந்திர சோழன்:
ஆட்சிக்காலம் கி.பி. 1012 - கி.பி. 1044
கி.பி 1002 : சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரில்
இராஜேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர்
வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.
கி.பி. 1018 :ஈழத்தின் மீதான படையெடுப்பில் சிங்கள பட்டத்து அரசன், அரசி,
இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள
அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு
சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா
வம்சமும்" கூறுகிறது.
கி.பி. 1018 : பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான
கலகங்களை அடக்கினான்
கி.பி 1019: வங்கதேசத்து பால அரசை வென்று கங்கை வரை சென்றதாகவும்,
தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு
எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம்
அறியமுடிகிறது
கி.பி. 1021: கீழைச் சாளுக்கிய(ஆந்திர , தெலுங்கான பகுதிகளில்)
பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை அடக்கி தெலுங்கு குல
காலன் என்ற பட்டப்பெயரை சூட்டிக்கொண்டான்
கி.பி. 1025: அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்;
பெண்ணை , மலாயா, கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ்
படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான்.
நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற
செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்.

தெலுங்குகுலகாலன் சோழர் கங்கை கடாரம் கடல் பேரரசு


கோலார் போர் போர்க்குற்றம் பட்டம் படுகொலை சாளுக்கியர் கங்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக