|
16/10/17
| |||
முல்லைப்பெரியாறு மாதிரி வடிவம்
https://m.facebook.com/photo. php?fbid=1830177617001933&id= 100000291368655&set=a. 391230754229967.95656. 100000291368655&refid=17&_ft_= top_level_post_id. 1499558086804208%3Atl_objid. 1499558086804208%3Athid. 337556833004345% 3A306061129499414%3A2%3A0% 3A1509519599%3A- 1380112135957172879&__tn__= EHH-R
G Durai Mohanaraju
"முல்லைப் பெரியாறு" அணை விவகாரத்தில் பலருக்கு
சரியான புரிதலே இல்லை.கேரளாக்காரன் நமக்கு தண்ணீர்
தர மாட்டேங்குறான் என்றளவில் முல்லைப் பெரியாறு
விவகாரத்தை சுருக்கிக் கொள்கின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை என்றால் என்ன?
எதற்காக அந்த அணையைக் கட்டிய கர்னல் ஜான்
பென்னிகுவிக்கிற்கு தமிழர்கள் தங்கள்
காலமெல்லாம் கடன்பட்டுள்ளார்கள் என
இவ்வளவு மரியாதை தர வேண்டும்?
முல்லை என்ற ஆறு தமிழ்நாட்டில் மேற்குத்
தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உருவாகி,கேரள
மலைப்பகுதிகளில் ஓடி,வைகையுடன் சேர்ந்து கடலில்
சேர்கிறது.கேரளாவில் சொல்லிக்
கொள்ளுமளவிற்கு பெரிய அளவில்
விவசாயம் எதுவும் நடப்பதில்லை.ஆனால் தமிழ்நாட்டில்
அப்படியல்ல.விவசாயம் தான்,விவசாயம்
மட்டுந்தான் பிரதான தொழில்.அதிலும் இன்றைய
தேனி,மதுரை,திண்டுக்கல்,
இராமநாதபுரம்,விருதுநகர் என ஐந்து மாவட்டங்களின்
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் முல்லை ஆற்றின்
தண்ணீரை மட்டுமே தான் நம்பியுள்ளன.
ஒரு காலத்தில் இந்த முல்லை ஆற்றின் தண்ணீர்
தமிழகத்திற்கு வராமல்,கேரளா வழியே கடலிலே
சென்று சேர்ந்து கொண்டிருந்தது.இதனால்
மேற்சொன்ன அந்த ஐந்து மாவட்டங்களிலும்
பஞ்சம் தலைவிரித்தாடியது.தலைவிரித்தாடி ய பஞ்சத்திற்கு
ஜடை பின்னி,பூ வைக்க இராமநாதபுர சமஸ்தானம்
சார்பிலும்,அதன் பின் வந்த அன்றைய பிரிட்டீஷ் அரசு
சார்பிலும் எத்தனையோ முயற்சிகளை செய்து
பார்த்தது.எதுவும் பலன் தரவில்லை.அதில் ஒரு முயற்சியாக
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஓடும் முல்லை
ஆற்றின் தண்ணீரை அப்படியே கிழக்குப் பக்கமாகத்
திருப்பினால் என்ன என்ற யோசனையும் வைக்கப்பட்டது.
ஓரளவிற்கு சாத்தியப்படும் போலத் தெரிந்த
யோசனைதான்.ஆனால் நடக்குமா? என்ற சந்தேகம்
பலமாக எழுந்தது.
1789 ஆம் ஆண்டு இராமநாதபுர மன்னர்
முத்துராமலிங்க சேதுபதியின் ஆணைப்படி,மேற்கு நோக்கி பாயும்
முல்லைப் பெரியாறு ஆற்றை,கிழக்கு நோக்கித் திருப்பி அதை
வைகையுடன் சேர்க்கும் திட்டத்தை செயற்படுத்த மந்திரி
முத்துஇருளப்ப பிள்ளை ஆய்வுகளைச் செய்தார்.பலமுனை
ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் அது செலவு மிகுந்த
திட்டம் எனவும்,அந்த அடர்ந்த காட்டில் அந்தத் திட்டத்தை
சாத்தியப்படுத்துவது நடக்காத காரியம் என்றும்
சொல்லி திட்டத்திற்கு மங்களம் பாடப்பட்டது.
அதன் பின்னும் எத்தனையோ திட்டங்கள்,முயற்சிகள்...எதுவு ம்
கைகூடவில்லை.கிட்டத்தட்ட திட்டத்தைக் கைவிட்டு விடலாம்
என்ற நிலையில்,ஒரு பிரிட்டீஷ் அதிகாரி
பொறியாளர் ஒருவரது பெயரை பரிந்துரைத்தார்.
"அவரா?"
"அவரையா?"
"இந்தத் திட்டத்திற்கா?"
"அவருக்கு இதில் முன் அனுபவம் இல்லையே?"
"அட..அவர் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்ற
ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு அதன்
தலைவராக ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக்
கொண்டிருக்கிறார்.அவரைப் போய் இந்தத் திட்டத்தை
செயல்படுத்த சொல்வதா?" வெட்டி
வேலை,வீண் செலவு..."
என்று ஏகப்பட்ட குரல்கள் எழுந்தன.எனினும் பலமணி நேர
ஆழ்ந்த யோசனைக்குப் பின்னர் அந்த பொறியாளரையே
இந்தத் திட்டத்தை செயல்படுத்தச்
சொல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
காரணம்,ஒரு செயலை அவரிடம் தந்துவிட்டால்
போதும்.அதை எப்பாடுபட்டாவது முடித்துவிடுவார் என்ற
நல்லெண்ணம் அந்தப் பொறியாளரைக்
குறித்து அனைவருக்கும் இருந்தது.எனவே அவரைத்
தேர்ந்துதெடுத்து,அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில்,
"ஜான் பென்னிக்குவிக்" என்று எழுதப்பட்டிருந்தது.
சேப்பாக்கத்தில் தற்போது இருக்கும் கிரிக்கெட்
மைதானத்தில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக்
கொண்டிருந்த பென்னிகுவிக்கின் கைகளில்
அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது.அந்த சேப்பாக்கம்
கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியவரும் அவர்
தான்.கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தவர்,உடனே தேனி
மலைப்பகுதிகளுக்குக் கிளம்பிச் சென்றார்.ஆய்வுகளை
மேற்கொண்டார்.
1895 அக்டோபர் 11 ஆம் தேதியன்று அப்போதைய சென்னை
மாகாண கவர்னர் வென்லாக் முன்னிலையில்,ஜா
ன் பென்னிகுவிக் தலைமையில் அன்றைய பிரிட்டீஷ்
இராணுவத்தின் பொறியியல் பிரிவு அணைக் கட்டும்
பணியைத் தொடங்கியது.
அடர்ந்த காடு-விஷப் பூச்சிகள்-காட்டு விலங்குகள்-திடீர்
திடீரென மாறும் வானிலை-இடி மின்னலுடன் கூடிய
மழை என பலவிதமான சவால்களுக்கு இடையில் அணை
கட்டுமானப்பணிகள் தொடங்கின.மூன்று
ஆண்டுகள் அயராது உழைத்து பாதி அணை கட்டிய நிலையில்
ஒரு பெருவெள்ளம் வந்து அணையை உடைத்துப்
போட்டது.உடைந்த பகுதிகளை சரிசெய்ய மழைக்காலம்
முடியும் வரையில் காத்திருந்து,சேதங்களை சரி செய்கையில்
அணை கட்டுமானத்தை யானைகள் கூட்டம் வந்து உடைத்துப்
போட்டது.செலவுகள் மேல் செலவுகள் இழுக்க இனி
அணையைக் கட்ட தங்களிடம் பணம் இல்லையென
பிரிட்டீஷ் அரசு கைவிரித்து விட்டது.பென்னிகுவிக்
எவ்வளவோ பேசிப் பார்த்தும் பலன் இல்லை.
எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்தே தீர
வேண்டும் என்ற எண்ணம் கொண்ட
பென்னிகுவிக் தன் சொந்த நாடான
அயர்லாந்திற்குச் சென்று தனக்கு
சொந்தமான அத்துனை சொத்துக்களையும்
விற்று ஒரு லட்சம் பவுண்டுகள் பணத்துடன் தமிழ்நாட்டுக்கு
வந்தார்.
அணை கட்டும் பணிகள் மீண்டும் வேகமெடுத்தது.பெ
ன்னிகுவிக் தன் சொந்த பணத்தைப் போட்டு அணையை
கட்டுகையில் நாமும் நம்மாலான உழைப்பைத் தருவோம் என
அவரது குழுவும் உழைத்தது.
இதோ இந்தப் புகைப்படத்தில் வலது ஓரத்தில் பிங்க் கலரில்
தெரிகிறதா? அது தான் முல்லைப் பெரியாறு
அணை.
ஆற்றில் வரும் தண்ணீரைத் தேக்கி
வைப்பதற்காக,பொதுவாக பெரும்பாலான
அணைகள் ஆற்றின் போக்கில் தான் கட்டப்பட்டிருக்
கும்.ஆனால் முல்லைப் பெரியாறு அணைதான்,மேற்குத்
திசையில் கேரளா நோக்கி பாயும்,ஆற்றின் போக்கைத் தடுத்து,அதை
கிழக்கு திசைக்குத் திருப்பி,தமிழ்நாட்டில் பாய்வதற்காக
கட்டப்பட்டது.
இப்போது மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.அந்த பிங்க்
நிற முல்லைப் பெரியாறு அணை மட்டும் அங்கே
இல்லாவிட்டால்,மொத்த தண்ணீரும் மேற்காக
கேரளாவில் ஓடி கடலில் கலந்து விடும்.அணை இருப்பதால்
அதன் தண்ணீர் தமிழ்நாடு நோக்கி வருகிறது.அந்த தண்ணீர்
வரும் திசையில் தான் தேக்கடியும் இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை மட்டும்
இல்லையென்றால்,தங்களிடம் பணம்
இல்லையென்று கைவரித்த பிரிட்டீஷ் அரசைப்
போலவே,பென்னிகுவிக்கும் அம்போவென பாதியில்
விட்டுச் சென்றிருந்தால்,தமிழ்நாட்டின் தேனி,மதுரை,தின்
டுக்கல், இராமநாதபுரம்,விருதுநகர் என ஐந்து
மாவட்டங்களும் மக்கள் வாழ வகையில்லாத
பாலைவனமாகவே மாறிப் போயிருக்கும்.
தமிழ்நாட்டின் வளத்தை தனியொரு மனிதாக
கர்னல் ஜான் பென்னிக்குவிக் கட்டிக் காத்துக்
கொடுத்துள்ளார்.அதுவும் தனக்கு துளியும்
தொடர்பில்லாத மக்களுக்காக....
எதற்காக உங்களது சொந்தப் பணத்தைப் போட்டு
அணையைக் கட்டினீர்கள்? என ஜான் பென்னிகுவிக்கிடம்
கேட்ட போது,அவர் சொன்னார்,
"நான் இந்த மண்ணில் பிறப்பது ஒரு முறை தான்.என்
வாழ்நாளில் நல்ல காரியங்களைச் செய்யவே
விரும்புகிறேன்.ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான் இங்கே
பிறப்பேனோ என்று எனக்கு தெரியாது....."
இப்படியான ஒரு வரலாற்றைக் கொண்ட முல்லைப்
பெரியாறு அணையை இந்த காலாண்டு விடுமைறையில்
கடந்த வாரம் என் மகனை அழைத்துச் சென்று
காண்பித்து விளக்கினேன்.வரலாற்றைப்
பொறுமையாக கேட்டவன்,கடைசியில் கேட்டான்,
"பென்னிகுவிக்குக்கு அப்புறம் இண்டியாவை ரூல்
பண்ணுன இண்டியன் பொலிடிஷியன்ஸ்
யாராவது,மக்களுக்காக அவங்க சொந்த
பணத்தை போட்டு,எதையாவது கட்டியிருக்காங்களா?...."
3 அக்டோபர்
https://m.facebook.com/photo.
G Durai Mohanaraju
"முல்லைப் பெரியாறு" அணை விவகாரத்தில் பலருக்கு
சரியான புரிதலே இல்லை.கேரளாக்காரன் நமக்கு தண்ணீர்
தர மாட்டேங்குறான் என்றளவில் முல்லைப் பெரியாறு
விவகாரத்தை சுருக்கிக் கொள்கின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை என்றால் என்ன?
எதற்காக அந்த அணையைக் கட்டிய கர்னல் ஜான்
பென்னிகுவிக்கிற்கு தமிழர்கள் தங்கள்
காலமெல்லாம் கடன்பட்டுள்ளார்கள் என
இவ்வளவு மரியாதை தர வேண்டும்?
முல்லை என்ற ஆறு தமிழ்நாட்டில் மேற்குத்
தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உருவாகி,கேரள
மலைப்பகுதிகளில் ஓடி,வைகையுடன் சேர்ந்து கடலில்
சேர்கிறது.கேரளாவில் சொல்லிக்
கொள்ளுமளவிற்கு பெரிய அளவில்
விவசாயம் எதுவும் நடப்பதில்லை.ஆனால் தமிழ்நாட்டில்
அப்படியல்ல.விவசாயம் தான்,விவசாயம்
மட்டுந்தான் பிரதான தொழில்.அதிலும் இன்றைய
தேனி,மதுரை,திண்டுக்கல்,
இராமநாதபுரம்,விருதுநகர் என ஐந்து மாவட்டங்களின்
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் முல்லை ஆற்றின்
தண்ணீரை மட்டுமே தான் நம்பியுள்ளன.
ஒரு காலத்தில் இந்த முல்லை ஆற்றின் தண்ணீர்
தமிழகத்திற்கு வராமல்,கேரளா வழியே கடலிலே
சென்று சேர்ந்து கொண்டிருந்தது.இதனால்
மேற்சொன்ன அந்த ஐந்து மாவட்டங்களிலும்
பஞ்சம் தலைவிரித்தாடியது.தலைவிரித்தாடி
ஜடை பின்னி,பூ வைக்க இராமநாதபுர சமஸ்தானம்
சார்பிலும்,அதன் பின் வந்த அன்றைய பிரிட்டீஷ் அரசு
சார்பிலும் எத்தனையோ முயற்சிகளை செய்து
பார்த்தது.எதுவும் பலன் தரவில்லை.அதில் ஒரு முயற்சியாக
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஓடும் முல்லை
ஆற்றின் தண்ணீரை அப்படியே கிழக்குப் பக்கமாகத்
திருப்பினால் என்ன என்ற யோசனையும் வைக்கப்பட்டது.
ஓரளவிற்கு சாத்தியப்படும் போலத் தெரிந்த
யோசனைதான்.ஆனால் நடக்குமா? என்ற சந்தேகம்
பலமாக எழுந்தது.
1789 ஆம் ஆண்டு இராமநாதபுர மன்னர்
முத்துராமலிங்க சேதுபதியின் ஆணைப்படி,மேற்கு நோக்கி பாயும்
முல்லைப் பெரியாறு ஆற்றை,கிழக்கு நோக்கித் திருப்பி அதை
வைகையுடன் சேர்க்கும் திட்டத்தை செயற்படுத்த மந்திரி
முத்துஇருளப்ப பிள்ளை ஆய்வுகளைச் செய்தார்.பலமுனை
ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் அது செலவு மிகுந்த
திட்டம் எனவும்,அந்த அடர்ந்த காட்டில் அந்தத் திட்டத்தை
சாத்தியப்படுத்துவது நடக்காத காரியம் என்றும்
சொல்லி திட்டத்திற்கு மங்களம் பாடப்பட்டது.
அதன் பின்னும் எத்தனையோ திட்டங்கள்,முயற்சிகள்...எதுவு
கைகூடவில்லை.கிட்டத்தட்ட திட்டத்தைக் கைவிட்டு விடலாம்
என்ற நிலையில்,ஒரு பிரிட்டீஷ் அதிகாரி
பொறியாளர் ஒருவரது பெயரை பரிந்துரைத்தார்.
"அவரா?"
"அவரையா?"
"இந்தத் திட்டத்திற்கா?"
"அவருக்கு இதில் முன் அனுபவம் இல்லையே?"
"அட..அவர் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்ற
ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு அதன்
தலைவராக ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக்
கொண்டிருக்கிறார்.அவரைப் போய் இந்தத் திட்டத்தை
செயல்படுத்த சொல்வதா?" வெட்டி
வேலை,வீண் செலவு..."
என்று ஏகப்பட்ட குரல்கள் எழுந்தன.எனினும் பலமணி நேர
ஆழ்ந்த யோசனைக்குப் பின்னர் அந்த பொறியாளரையே
இந்தத் திட்டத்தை செயல்படுத்தச்
சொல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
காரணம்,ஒரு செயலை அவரிடம் தந்துவிட்டால்
போதும்.அதை எப்பாடுபட்டாவது முடித்துவிடுவார் என்ற
நல்லெண்ணம் அந்தப் பொறியாளரைக்
குறித்து அனைவருக்கும் இருந்தது.எனவே அவரைத்
தேர்ந்துதெடுத்து,அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில்,
"ஜான் பென்னிக்குவிக்" என்று எழுதப்பட்டிருந்தது.
சேப்பாக்கத்தில் தற்போது இருக்கும் கிரிக்கெட்
மைதானத்தில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக்
கொண்டிருந்த பென்னிகுவிக்கின் கைகளில்
அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது.அந்த சேப்பாக்கம்
கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியவரும் அவர்
தான்.கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தவர்,உடனே தேனி
மலைப்பகுதிகளுக்குக் கிளம்பிச் சென்றார்.ஆய்வுகளை
மேற்கொண்டார்.
1895 அக்டோபர் 11 ஆம் தேதியன்று அப்போதைய சென்னை
மாகாண கவர்னர் வென்லாக் முன்னிலையில்,ஜா
ன் பென்னிகுவிக் தலைமையில் அன்றைய பிரிட்டீஷ்
இராணுவத்தின் பொறியியல் பிரிவு அணைக் கட்டும்
பணியைத் தொடங்கியது.
அடர்ந்த காடு-விஷப் பூச்சிகள்-காட்டு விலங்குகள்-திடீர்
திடீரென மாறும் வானிலை-இடி மின்னலுடன் கூடிய
மழை என பலவிதமான சவால்களுக்கு இடையில் அணை
கட்டுமானப்பணிகள் தொடங்கின.மூன்று
ஆண்டுகள் அயராது உழைத்து பாதி அணை கட்டிய நிலையில்
ஒரு பெருவெள்ளம் வந்து அணையை உடைத்துப்
போட்டது.உடைந்த பகுதிகளை சரிசெய்ய மழைக்காலம்
முடியும் வரையில் காத்திருந்து,சேதங்களை சரி செய்கையில்
அணை கட்டுமானத்தை யானைகள் கூட்டம் வந்து உடைத்துப்
போட்டது.செலவுகள் மேல் செலவுகள் இழுக்க இனி
அணையைக் கட்ட தங்களிடம் பணம் இல்லையென
பிரிட்டீஷ் அரசு கைவிரித்து விட்டது.பென்னிகுவிக்
எவ்வளவோ பேசிப் பார்த்தும் பலன் இல்லை.
எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்தே தீர
வேண்டும் என்ற எண்ணம் கொண்ட
பென்னிகுவிக் தன் சொந்த நாடான
அயர்லாந்திற்குச் சென்று தனக்கு
சொந்தமான அத்துனை சொத்துக்களையும்
விற்று ஒரு லட்சம் பவுண்டுகள் பணத்துடன் தமிழ்நாட்டுக்கு
வந்தார்.
அணை கட்டும் பணிகள் மீண்டும் வேகமெடுத்தது.பெ
ன்னிகுவிக் தன் சொந்த பணத்தைப் போட்டு அணையை
கட்டுகையில் நாமும் நம்மாலான உழைப்பைத் தருவோம் என
அவரது குழுவும் உழைத்தது.
இதோ இந்தப் புகைப்படத்தில் வலது ஓரத்தில் பிங்க் கலரில்
தெரிகிறதா? அது தான் முல்லைப் பெரியாறு
அணை.
ஆற்றில் வரும் தண்ணீரைத் தேக்கி
வைப்பதற்காக,பொதுவாக பெரும்பாலான
அணைகள் ஆற்றின் போக்கில் தான் கட்டப்பட்டிருக்
கும்.ஆனால் முல்லைப் பெரியாறு அணைதான்,மேற்குத்
திசையில் கேரளா நோக்கி பாயும்,ஆற்றின் போக்கைத் தடுத்து,அதை
கிழக்கு திசைக்குத் திருப்பி,தமிழ்நாட்டில் பாய்வதற்காக
கட்டப்பட்டது.
இப்போது மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.அந்த பிங்க்
நிற முல்லைப் பெரியாறு அணை மட்டும் அங்கே
இல்லாவிட்டால்,மொத்த தண்ணீரும் மேற்காக
கேரளாவில் ஓடி கடலில் கலந்து விடும்.அணை இருப்பதால்
அதன் தண்ணீர் தமிழ்நாடு நோக்கி வருகிறது.அந்த தண்ணீர்
வரும் திசையில் தான் தேக்கடியும் இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை மட்டும்
இல்லையென்றால்,தங்களிடம் பணம்
இல்லையென்று கைவரித்த பிரிட்டீஷ் அரசைப்
போலவே,பென்னிகுவிக்கும் அம்போவென பாதியில்
விட்டுச் சென்றிருந்தால்,தமிழ்நாட்டின் தேனி,மதுரை,தின்
டுக்கல், இராமநாதபுரம்,விருதுநகர் என ஐந்து
மாவட்டங்களும் மக்கள் வாழ வகையில்லாத
பாலைவனமாகவே மாறிப் போயிருக்கும்.
தமிழ்நாட்டின் வளத்தை தனியொரு மனிதாக
கர்னல் ஜான் பென்னிக்குவிக் கட்டிக் காத்துக்
கொடுத்துள்ளார்.அதுவும் தனக்கு துளியும்
தொடர்பில்லாத மக்களுக்காக....
எதற்காக உங்களது சொந்தப் பணத்தைப் போட்டு
அணையைக் கட்டினீர்கள்? என ஜான் பென்னிகுவிக்கிடம்
கேட்ட போது,அவர் சொன்னார்,
"நான் இந்த மண்ணில் பிறப்பது ஒரு முறை தான்.என்
வாழ்நாளில் நல்ல காரியங்களைச் செய்யவே
விரும்புகிறேன்.ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான் இங்கே
பிறப்பேனோ என்று எனக்கு தெரியாது....."
இப்படியான ஒரு வரலாற்றைக் கொண்ட முல்லைப்
பெரியாறு அணையை இந்த காலாண்டு விடுமைறையில்
கடந்த வாரம் என் மகனை அழைத்துச் சென்று
காண்பித்து விளக்கினேன்.வரலாற்றைப்
பொறுமையாக கேட்டவன்,கடைசியில் கேட்டான்,
"பென்னிகுவிக்குக்கு அப்புறம் இண்டியாவை ரூல்
பண்ணுன இண்டியன் பொலிடிஷியன்ஸ்
யாராவது,மக்களுக்காக அவங்க சொந்த
பணத்தை போட்டு,எதையாவது கட்டியிருக்காங்களா?...."
3 அக்டோபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக