புதன், 31 ஜனவரி, 2018

சித்தமருத்துவம் மீட்பு வழிவழியாக மரபுவழி ஆவணப்படுத்த படிப்பாக்க கோரிக்கை

aathi tamil aathi1956@gmail.com

21/10/17
பெறுநர்: எனக்கு
தமிழ்நாட்டில் மரபுவழி கடத்தப்பட்ட கட்டிடக்கலை இருக்கலாம். கடல்பயண
அறிவு இருக்கலாம்.வேளாண்மை தொழில் அறிவு இருக்கலாம். ஆனால் ஈராயிரம்
வருடத்திற்கு மேலான பழங்குடிகளின் மரபுவழி மருத்துவ கலை இருக்காது என
நம்பும் அரைவேக்காட்டு அறிவாளிகளை புறந்தள்ளுங்கள்..
உண்மையிலேயே தமிழ்நாட்டு அரசு செய்ய வேண்டியது..
1) சித்த மருத்துவம், புத்த மருத்துவம் என பெயர் சூட்டுவதை ஒழித்து,
தமிழர் மருத்துவம் என பெயரை மாற்ற வேண்டும். இல்லையென்றால் இன்னும் சில
வருடங்களில் சித்த மருத்துவம் இந்திய மருத்துவமாக விழுங்கப்படும்.
2) தமிழர் மருத்துவம் முழுதும் தமிழ் மொழியிலேயே இருக்க சட்டம் இயற்ற
வேண்டும். அதன் படிப்பில் தமிழ்நாட்டவருக்
கே, தமிழ் மொழி 12 ஆண்டுகள் பயின்றவருக்கே இடம் தரப்பட வேண்டும்.
இல்லையெனில் ஆங்கிலப்படுத்தி தமிழரை தள்ளி இந்தியர் புகுந்து கொள்வர்.
3) தமிழர் மருத்துவ முறைகள் அனைத்தும் தமிழர் குழு அமைத்து, மருத்துவ
மூலக்கூறுகளை ஆய்வு முறையில் கண்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும்.
4) ஆவணப்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட தமிழர் மருத்துவ மூலக்கூறுகள்
தமிழ்நாட்டு அரசுக்கே காப்புரிமை வாங்கப்பட வேண்டும்.
எப்படி சீன மருத்துவ முறை ஆய்வு முறையில் ஆவணப்படுத்தப்பட்டதோ
அதேமுறையில் தமிழர் மருத்துவம் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவையே
காலத்தின் தேவை..
- Mathi Vanan

மருத்துவம் ஆயுர்வேதம் ஆயுள்வேதம் மெய்யியல் மூலிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக