|
19/10/17
| |||
Palani Deepan
தமிழன் ஆள வேண்டும். ஏன்?
“தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும்” இது தமிழ்த்தேசியத்தின் முதன்மைக் கோட்பாடு.
”ஓர் இலக்கியம் எம்மொழியில் படைக்கப்பட்டதோ, அதே மொழியில் படித்தால்தான்
இலக்கிய இன்பம் முழுமையாகக் கிடைக்கும்” தாகூர்.
சரியா...?
இந்த இரண்டுக்குமான ஒரு சான்றினை திருவள்ளுவன் தருகிறான்.
“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”
(அதிகாரம் 104 உழவு, பாடல் எண் 1039)
“நிலத்திற்கு உரியவன் அடிக்கடி சென்று தனது நிலத்தை கவனிக்காவிட்டால்,
தனது மனைவியைப் போல அது கோபித்துக் கொண்டு எந்தவித பயனையும்
உரியவனுக்குத் தராது” என்பது பொருள்.
இதில் ”கிழவன்” என்கிற சொல்லாட்சியை உற்று கவனிக்க வேண்டும்.
இந்தக் குறளை வேறு எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் இந்தக் ”கிழவன்”
என்கிற சொல்லை அதன் உரிய பொருளில் மொழிபெயர்க்கவே முடியாது. இக்குறளை
தமிழ்க் கற்று, தமிழிலேயே படித்தால்தான் சுவைக்க முடியம். இதைத்தான்
தாகூர் குறிப்பிடுகிறார்.
தமிழ்த்தேசியக் கோட்பாட்டிற்கு வருவோம்.
திருவள்ளுவன் ஆழ்ந்து சிந்தித்து ”கிழவன்” என்கிற சொல்லை இங்கு
ஆள்கிறான். இந்த இடத்தில் வள்ளுவன் ”உழவன்” என்கிற சொல்லை
ஆண்டிருந்தாலும் இலக்கணம் தவறாது. அதிகாரமே ”உழவு” என்கிற அதிகாரந்தான்.
ஆனால் ”கிழவன்” என்கிற சொல்லை தேர்ந்தெடுத்து ஆள்கிறான்.
ஆம் ”கிழவன்” என்பதற்கு தமிழில் உரியோன், கணவன், தலைவன், மருத நில தலைவன்
என்கிற இத்தனை பொருள்கள் உண்டு.
ஆம். நிலத்தை தனது வேலையாட்களை வைத்தும் அதற்கு உரியவன் பயிர் செய்யலாம்.
ஆனால் அதனை உரிய முறையில் சென்று கவனித்து வருதல் அதன் உரிமையாளனுக்கு
முதற்கடமையாகும். கிழமை எனில் கடமை என்கிற பொருளும் உண்டு.
அவ்வாறு நிலத்திற்கு உரியவன் அந்த நிலத்தின் மீது, ஆளுமை
செய்யவில்லையெனில் அந்த நிலம் என்னாகும்? நாம் கற்பனை செய்து கொள்ள
வேண்யடிதுதான்.பலவகையிலும் பாழாய் போகும்.
ஆனால் சுருக்கமாக குறள், ஒருவனது மனைவியைப் போல ஊடல் கொண்டு பயன் தராது என்கிறது.
இங்கே இன்னொன்று நுட்பமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. ஒருவன் தனது
மனைவி மீது வேறு ஒருவன் உரிமைகொண்டால் எத்தனை கோபம் கொள்வான்...? அந்தக்
கோபம் தனது நிலத்தை வேறு ஒருவன் உரிமை கொண்டாலும் உருவாகும் என்பது
குறிப்பு.
சரி.
இந்தக் குறள் நடைமுறைக்கு உகந்ததா...?
உகந்ததுதான்.
கடந்த அறுநூறு ஆண்டுகாலமாக தமிழகததை தமிழன் ஆளவில்லை. ஆதலாலால் இந்த
தமிழனுக்கு உரிமையுள்ள இந்த தமிழ் நிலம் என்னவானது....?
தமிழன் முறையாக தனது ஆட்சியை செலுத்தியபோது, நான்கு வகையாக நிலத்தை
பிரித்து நீர்வளமும், இயற்கை வளங்களும் கொஞ்ச கொஞ்ச நிலங்களும் தனது நிலை
மாறாது வாரி வாரி வழங்கியது. பசுமைத் தாயகமாக திகழ்ந்தது.
அந்நியன் ஆட்சிக்கு இந்த தமிழ் மண் போன பிறகு,
அதே தமிழ் நிலமானது ஊடல் கொண்டு,
”மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி அல்ல...
குவாரியானது.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லையல்ல
தொழிற்சாலையானது.
வயலும் வயல்சார்ந்த இடமும்
மருதம் அல்ல... மனைகளானது.
கடலும் கடல்சார்ந்த இடமும்
நெய்தல் அல்ல அமிலக் கழிவுகளானது...”
இப்போது திரும்பக் குறளைப் படியுங்கள்.
“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”
ஆம்.
தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும்.
இந்தக் கோட்பாட்டைத்தான் இந்தக் குறள் நேரிடையாகவும் மறைமுகமாகவும்
தமிழனுக்கு வற்புறுத்துகிறது.
விவசாயம் வேளாண்மை குறள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக