சனி, 25 மார்ச், 2017

அகநானூறு அரிய செய்திகள் பரிசம் வரதட்சணை குடவோலை திருப்பதி முருகன் சங்ககால கண்ணாடி மழை

aathi tamil aathi1956@gmail.com

23/3/16
பெறுநர்: எனக்கு
இலக்கியம் பல அரிய செய்திகள் kalappal.blogspot.com/2015/06/24-30_88.html?m=0

அகநானூறு – அரிய செய்தி -24 - 30

  அகநானூறு – அரிய செய்தி -24                    
கண்ணாடி
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியிற் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும்....
                                               அந்தியிளங்கீரனார், அகநா.71 : 13 – 15
இகழ்ச்சியற இயற்றிய உருவங்காணும் கண்ணாடியின் அகத்தே ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கினாற்போல் சிறிது சிறிதாகக் குறைந்து வந்து என் வலிமை மாய்தல் ....

  அகநானூறு – அரிய செய்தி -25                     

பாம்பு மணி உமிழும்
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் ......
 எருமை வெளியனார் மகனார் கடலனார், அகநா.72: 14, 15
அச்சம் தரும் நல்லபாம்பு மேய்தற்குச் செல்ல ஒளியுண்டாக உமிழ்ந்து வைத்த மணியாகிய விளக்கில் ........
  அகநானூறு – அரிய செய்தி -26                     

குடவோலை
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்
        மருதனிளநாகனார், அகநா. 77: 7,8
கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும், அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவையிற்றை வெளியே ஈர்த்தெடுத்தல் போல.( ஊராண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின் கட் போட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர்முன் குடத்தின்மேலிட்ட இலச்சினையைக்கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென்ன முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும்.பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.-நாட்டார்)
(
  அகநானூறு – அரிய செய்தி -27                   

வலமாகஎழ- மழை பொழிதல்
மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை
                                     மதுரை எழுத்தாளன்,அகநா.84 : 1- 5
மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -  உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே. மழை – அறிவியல் நோக்கு - ஆய்க

அகநானூறு – அரிய செய்தி -28                   

85 – மணநாள் வேங்கை மலர்85,133
நன்னாள் பூத்த நாகிள வேங்கை
         காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்அகநா.85: 10
நல்ல நாள் காலையில்  பூத்த மிக இளைய வேங்கை மரத்தின்
வேங்கை பூக்கும் காலம் மணநாள் ஆகலின் நன்னாள் பூத்த என்றாள் என்லுமாம்.மிளை – ஒருநாடு. இதல் – இருவகைப் பறவை




  அகநானூறு – அரிய செய்தி -29                   
திருமண நிகழ்ச்சி  - 86,136
இப்பாடல்களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று – நச்கனையிருள் அகன்றகாலை என்பதனாற் ( அந்நாளிலே மிக்க இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில்முற்பக்கம் (பூர்வபக்கம்என்பது பெற்றாம்கோள் என்றது ஈண்டுத் தீய கோள்களைஉரோகணி என்பதனை வருவித்துவிழுப்புகழ் நாளாவது உரோகணி திங்களை அடைந்த நாள் என்னலுமாம் . உரோகணியும் திங்களும் கூடிய நாள் கலியாணத்திற்குச் சிறந்ததென்பது ,                ‘திங்கட் சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்து ……… வதுவை மண்ணிய மகளிர்(அகம்.136) எனவும்வானூர் மதியம் சகடனைய வானத்துச் சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” எனச் சிலம்புமங்கல.50-53.வருதலானும் அறியப்படும்கலியாணம் எல்லாரும் புகுதற்கு உரியதாகலின்பொது எனப்பட்டது.நெல்லொடு தயங்க என்றமையால் நெல்லும் சொரிந்தமை பெற்றாம்.( மருதம்வதுவை மணமாவது – குளிப்பாட்டல்கோடிக்கலிங்கம் – புதுப் புடைவை. –நாட்டார்மேலும் காண்கஅகம் 136.”வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில்-
அகநானூறு – அரிய செய்தி -30
                                                               வரதட்சணை
பெருங் கடல் முழக்கிற்றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிழை விலையே
                      மதுரை மருதனிள நாகனார்அகநா.90: 10-14
தலைவன் தலைவியைப் பொன் அணிந்து வரைதல் வழக்காதலின் அரிவை பாசிழை விலை என்றாள்உறுமெனக் கொள்ளுநர் அல்லர் என்றமையால்,பொருள் மிகக் கொடுக்கவேண்டுமெனத் தலைவியை அருமை பாராட்டியவாறு.

இவள் தந்தைமார்அரிவையாய இவளது பசிய அணிகட்கு விலையாகவீரம் செறிந்த  கோசர்கள் வாழும் புது வருவாயையுடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும் அமையும் எனக் கொள்வார் அல்லர். –நெய்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக