செவ்வாய், 21 மார்ச், 2017

பாண்டியர் இசுலாமியர் அமைச்சர் மரைக்காயர் சீனா மாலிக்காபூர்

aathi tamil aathi1956@gmail.com

22/8/16
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்
போர்த்டுக்கேயர் இந்தியாவில் பெரும்பகுதியை எல்லாம் பிடிக்கவில்லை.
அதனால் இது இந்திய விடுதலைப் போராட்டமாக கருதப்படமாட்டாது.
ஆனால் மரைக்காயர் பற்றி சிலத் தகவல்கள்.
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் அவையில் ஜமாலுதீன் மரைக்காயர்
மற்றும் தைக்குத்தீன் மரைக்காயர் தளபதிகள் ஆவர்.
அதில் ஜமாலுதீன் மரைக்காயர் தான் பாண்டியன் சார்பில் சீனவேந்தனிடம் தூது சென்றான்.
தைக்குத்தீன் மரைக்காயர் மரைக்காயர் பட்டினத்தை ஆணடான். இவர்கள் இருவரும்
சகோதரர்கள்.
சில இந்துத்துவாக்கள் பரப்பிவிட்ட போலி வரலாறு ஒன்றுண்டு. அது என்ன
என்றால் மாலிக்காபூர் படை எடுப்பின் போது தமிழ் இசுலாமியரான மரைக்காயர்
மாலிக்காபூருக்கு உதவினர் என்று. அது தவறாகும். குலசேகர பாண்டியனின்
மகன்கள் சுந்தரபாண்டியன்/வீரபாண்டியன் ஒரு அணியிலும் குலசேகர பாண்டியனின்
கடைசி மனைவியின் மகன் இராஜராஜன் சுந்தரனும் போரிட்டார்கள். அப்போது
இராஜராஜன் சுந்தரன் தில்லி சுல்தான்களை தமிழகம் அழைத்து வந்தான். அந்த
இராஜராஜன் சுந்தரன் படையில் தான் தமிழக இசுலாமியர் ஆதரவு தெரிவித்தனர்.
அதை இந்துத்துதுவாக்கள் திரித்தெழுதினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக