வியாழன், 15 ஆகஸ்ட், 2019

பிரபாகரன் ராஜீவ் கொலை கேள்விக்கு மழுப்பல் பதில் புன்னகை பாலசிங்கம்

aathi1956 aathi1956@gmail.com

புத., 27 ஜூன், 2018, முற்பகல் 10:36
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
ஒரு இனத்தின் தலைமைகள் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்:
முதல்முறையாக தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் அனைவரையைம் ஒரே இடத்தில் சந்திக்கிறார்...
அந்த சந்திப்பில் இந்தியா மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கைத் துறையை சேர்ந்தவர்கள் சிலர் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்ப முயற்சிக்கிறார்கள். தலைவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும், இயக்கத்தின் அதிகாரப்பூர்வ சர்வதேச பேச்சாளராகவும் இருக்கும் அண்ணன் ஆன்றன் பாலசிங்கம் தவிர்த்து வருகிறார்...
மீண்டும் மீண்டும் அந்த பத்திரிக்கையாளர் குரலை எழுப்ப,
அந்தப் பத்திரிக்கையாளரிடம் அண்ணன் ஆன்றன் பாலசிங்கம்
"எத்தனை முறைதான் இந்தக் கேள்வியைக் கேட்பீர்கள்??? சரி, கேளுங்கள்" என்று சொல்கிறார்...
அந்தப் பத்திரிக்கையாளர்,
"ராசீவ் கொலைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டுகிறதே, உங்கள் பதில் என்ன?"
என்று கேட்கிறார்...
அந்தக் கேள்வியை அந்த பத்திரிக்கையாளர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, தலைவரின் முகத்தில் புன்னகை ஓடுகிறது...
கேள்வி முடிந்தவுடன், மிகவும் அமைதியாக, தெளிவாக,
"அந்த துன்பியல் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதைப்பற்றி இப்போது பேச நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுடன் இணக்கமான நட்புறவை வைத்துக்கொள்ள விரும்புகிறோம்"
என்று சொல்லி முடித்தார்...
இந்தப் பதிலை சொல்ல முடிந்தால், அந்த பதிலின் பல பரிமாண அர்த்தங்களை புரிந்துகொள்ள முடிந்தால்,
நீங்களும் மக்களுக்கான அரசியல் தலைவர்களில் ஒருவராக உங்களுக்கு தகுதி இருக்கிறது....
25 ஜூன், PM 10:26

படுகொலை இராசீவு காந்தி புலிகள் பேட்டி நேர்காணல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக