வியாழன், 6 ஜூலை, 2017

கி.ஆ.பெ.விசுவநாதம் திராவிடம் தோற்கடித்த முத்தமிழ் காவலர்

aathi tamil aathi1956@gmail.com

18/9/14
பெறுநர்: எனக்கு
திராவிடத்தால் வீழ்ந்தோம்
தமிழர் கழகத்தை - திராவிடக் கழகமாக்கிய சதியும்
முத்தமிழ்க் காவலரின் தடுப்பு முயற்சிகளும்.
-----------------------------------------------
1944ஆம் ஆண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.
அவர்களின் வரலாற்றில்
மட்டுமின்றி தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய
ஆண்டாகும்.
பிராமணர் ஆதிக்க எதிர்ப்பு
ஆம். அடுத்த சில ஆண்டுகளில்
வெள்ளையராட்சி வெளியேறவிருந்தது.
பிராமணரல்லாதார் அரசியல் கட்சியாக
நீதிக்கட்சி பிறந்ததேனும், அது சென்னைத்
தலை மாகாணத்தில் வெள்ளையரின் கீழ் 17 ஆண்டுகள்
தொடர்ந்து ஆட்சியில் இருந்ததேனும், தமிழ்நாட்டைத்
தவிர சென்னை மாகாணத்திலிருந்த ஆந்திர - கன்னட -
மலையாளப் பகுதிகளில் பிராமணரல்லாதார்
இயக்கத்தையோ அல்லது பிராமணராதிக்கத்தைத் தகர்க்கும்
நடவடிக்கைகளையோ அது உருப்படியாக
முன்னெடுக்கவில்லை.
இதனால், தமிழ்ப் பகுதியின் நலனுக்கெதிராகத்
தமிழ்நாட்டுப் பிராமணர்கள் மட்டுமின்றி, ஏனையப்
பகுதிப் பிராமணர்களும் கைகோர்த்து நிற்கும்
நிலை எழுந்தது.
தனித்தமிழ் நாட்டுத் தாகம்.
வெள்ளையர் வெளியேறி இந்தியா விடுதலை பெற்றால்,
அது பிராமணராதிக்கத்தின் வாய்ப்பட்டு,
அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் என்ற
பயமும் எழுந்தது.
எனவே, வெள்ளையராட்சி வெளியேறும் நிலை வருகையில்
தமிழ்நாட்டு விடுதலையைத் தனித்துப்
பெறுவதே நலமுடையதாக இருக்கும் என்ற
கருத்து சுயமரியாதை இயக்கத்தில் இருந்த
தமிழர்களிடம் மேலோங்கியிருந்தது.
தேர்தல் தோல்வி
அதற்கு வழி செய்யும் வகையில் நீதிக்கட்சியின்
பெயரை மாற்றுவதும், அதைத் தமிழர் கழகமாக
ஆக்குவதும் துணை செய்யும் என்று அவர்கள்
எண்ணினார்கள்.
அதற்கும் மேலாக சுயராச்சியக் கட்சி என்ற பெயரில்
தேர்தலில் போட்டியிட்ட காங்கிரசிடம் தோற்றுப்போன
நீதிக்கட்சியைத் தூக்கி நிறுத்த உதவும் என்றும்
அவர்கள் நம்பினாரக்ள்.
சீந்துவாரற்ற நிலை
ஏனெனில், தோற்றுப்போய் ஆட்சியை இழந்த
பிறகு தமிழ்நாட்டைத் தவிர, சென்னைத்
தலை மாகாணத்தின் ஏனைய பகுதிகளான ஆந்திராவிலோ,
கருநாடகாவிலோ,
மலையாளத்திலோ நீதிக்கட்சி சீந்துவாரற்றுப்
போயிற்று.
தமிழரல்லாத நீதிக்கட்சித் தலைவர்கள் என்போரில்கூட
சென்னையில் குடியிருந்தவர்களைத் தவிர மற்றவர்கள்
தாம் நீதிக்கட்சியைத் சேர்ந்தவர் என்பதை வெளியில்
காட்டிக்கொள்ளவே முன்வரவில்லை.
ஜின்னா - அம்பேத்கார் இடித்துரை
ஆகவே, நீதிக்கட்சியைத் தமிழர் கழகம் என்று பெயர்
மாற்றுவதன்மூலம்,
1.இழந்த மக்கள் செல்வாக்கை மீண்டும் பெறலாம்.
2.தமிழ்நாட்டு விடுதலை வெள்ளையராட்சியி
டமிருந்து நேரடியாகக் கிடைக்கவும் வழிவகுக்கும்
என்ற நம்பிக்கையிலேயே அந்த ஆண்டு சேலத்தில நீதிக்
கட்சி மாநாடு கூடுவதை சுயமரியாதை இயக்கத்தவரும்,
அதன் ஆதரவாளர்களும் ஆவலோடு எதிர்பார்த்தனர்.
முத்தமிழக் காவலர் அதில் முன்னின்றார்.
ஆனால், பெரியார் ஈ,வெ,ராவின் சிந்தனை வேறாக
இருந்தது. அவர் திராவிடர் கழகம் என்று பெயர்
மாற்றம் செய்யவேண்டும் என்ற கருத்துடன் அன்றைய முஸ்லீம்
லீக் தலைவரும் பாக்கிஸ்தான் பிரிவினைக்
கோரிக்கையாளருமான முகம்மது அலி ஜின்னா,
தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவர்
சட்டமேதை அம்பேத்கார் ஆகியோரைச்
சந்தித்து ஆதரவு கோரியபோது, தமிழ்நாட்டில் மட்டும்
கட்சி நடத்த விரும்பும் நீங்கள் அதற்கேற்பப் பெயர்
மாற்றம் செய்ய வேண்டுமேயயாழிய மற்றவர்களையும்
இணைக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்ய
விரும்புவது சரியல்ல என்றே அவர்கள்
இடித்துரைத்திருக்கின்றனர். இதைப் பெரியாருக்கும்
மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்ட சண்டே அப்சர்வர்
பாலசுப்ரமணியம் அவர்களே வெளிப்படுத்தியுள்ளார்.
நாயக்கரை மாற்றிய நாடுகள் வாதம்.
எனவே, 1944இல் சேலத்தில் பெரியார் தலைமையில்
நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்
காலை நிகழ்ச்சியில் அதன் பெயர் தமிழர் கழகம்
என்று மாற்றப்பட்டு, ஊடகங்களுக்கு அறிவிப்பும்
கொடுக்கப்பட்டது. முத்தமிழ்க் காவலர் போன்றவர்களின்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
ஆனால், உணவு இடைவேளையில் தலைவர்கள் தொண்டர்கள்
அனைவருக்கும் சமபந்தி போடப்பட்டு, எல்லோரும்
சாப்பிட உட்காருகின்றனர்.
அப்போது பெரியாருக்கு இருபுறமும் ஒருபுறம்
டர்பிடோ ஜனார்த்தனம் என்ற தெலுங்கரும் (இவர்,
ஒரு தமிழச்சியை மணந்து தமிழ்நாட்டில்தான்
வாழ்ந்து மறைந்தார்). மறுபுறம் சி.பி.சின்னராஜ் என்ற
தெலுங்கரும் (இவர் சி.பி.சிற்றரசு என்னும் பெயரில்
பின்னர் திமுக பேச்சாளராக இருந்து,
அது ஆட்சிக்கு வந்ததும் தமிழக மேலவைத் தலைவராக
இருந்து மறைந்தவர், ஆந்திராவில் அல்ல) "நாங்கள்
தெலுங்கு பலிஜ நாயுடுகள். நீங்கள் கன்னட பலிஜ
நாயுடு. நாம் எல்லாம் கூடி தமிழர் கழகமாகச்
செயல்பட்டு, தமிழ்நாடு விடுதலையையும்
பெற்றுவிட்டால், அப்புறம் தமிழர்கள் நம்மை வெளியேற்ற
மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே,
நம்மையும் இணைப்பதாகத் திராவிடர் கழகம்
என்றே பெயர் மாற்றம் செய்வதுதான் சரியாக இருக்கும்"
என்று ஏற்கனவே பெரியார் மனதில் இருந்ததைக்
கிளறி விட்டனர்.
காஞ்சியைக் கை காட்டினார்.
தமிழர் தலைவர் என்ற பட்டத்தை விருப்போடு ஏற்றுக்
கொண்டிருந்த பெரியார் என்ன சொல்லியிருக்க வேண்டும்?
"என்னைவிட யாரப்பா தமிழன்?" என்று கூறி,
அவர்களை அடக்கியிருக்க வேண்டும். அப்படிச்
செய்திருந்தால் தமிழ்நாடு வெள்ளையாட்சியிட
மிருந்து நேரடியாகவே விடுதலை பெற்றிருக்கும்.
ஆனால், அவர் என்ன சொன்னார் தெரியுமா? "தமிழர் கழகம்
என்ற பெயர் மாற்றம் ஒருமனதாக நிறைவேறி விட்டது.
இனி அதைத் திராவிடர் கழகமாக மாற்றி, இந்த
முட்டாள்கள் கூட்டத்தை ஏற்கச் செய்ய என்னால்
முடியாது. அதற்கு காஞ்சிபுரத்தானைப் போய்ப்
பிடியுங்கள். அவர் பேசினால் தான் மகுடி முன்
நாகம்போல் இக்கூட்டம் அதை ஏற்றுத் தலையாட்டும்"
என்று கூறியிருக்கிறார். தமிழர் தலைவர்
தமிழர்களை எப்படி எடைபோட்டிருக்கிறார் பாருங்கள்!
அண்ணாத்துரை தீர்மானம்
அப்போது அண்ணாத்துரை அவர்கள்,
சேலத்துக்கு வந்திருந்தாலும், மனத்தாங்கல் காரணமாக
அம்மாநாட்டில் பங்கு பெறாமல் ஒரு விடுதியில்
தங்கியிருந்தார். அவரைப்போய் இவர்கள் பார்த்ததும்,
அவரும் ஒப்புக்கொண்டு மாநாட்டுக்கு வந்து, பிற்பகல்
நிகழ்ச்சியில் 4 மணி நேரம் பேசி, தமிழர் கழகம்
என்பதைத் திராவிடர் கழகமாக மாற்ற எல்லாரையும்
ஒப்புக்கொள்ளச் செய்திருக்கிறார். அவர் கொண்டு வந்த
தீர்மானத்தின் அடிப்படையிலேயே மாலை மாநாட்டில்
திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றத் தீர்மானம்
நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
முத்தமிழக் காவலர் கி.ஆ.பெ.வி., நாவலர் சோமசுந்தர
பாரதியார், தனித்தமிழ்க் காவலர் அண்ணல்
தங்கோ முதலானவர்கள் அதை ஏற்க மறுத்து, தாங்கள்
காலைத் தீர்மானத்தையே பற்றி நிற்பதாக
அறிவித்துவிட்டு வெளியேறினார்கள். தமிழர்
கழகத்தைக் கட்டியயழுப்ப முழு மூச்சோடு செயல்படத்
தொடங்கினர்.
தமிழர் கழகமும், தமிழர் நாடு ஏடும்.
அதற்காக முத்தமிழ்க் காவலர் தமிழர் நாடு என்ற
ஏட்டை தொடங்கி, மாத இதழாகவும், வார இதழாகவும்
நடத்தினார். மளமளவென்று தமிழர் கழகம் வளரத்
தொடங்கியது.
தமிழ்நாட்டில் மிட்டா மிராசுகளாகவும்,
பட்டா மணியங்களாகவும், ஆலை அதிபர்களாகவும்,
நாயக்கராட்சியின் விழுதுகளாகவும் விளங்கிய
தெலுங்கர்கள் விடுவார்களா?
கி.ஆ.பெ.வி.யின் நாணயம்
அவர்கள் திராவிடர் கழகத்தின்
முழக்கங்களை முன்றுத்தி, தமிழர்
கழகத்தை இயங்கவிடாமல் கலவரத்தைத் தூண்டிவிட்டனர்.
நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக
இருந்து அவர்களால் மதிக்கப் பெற்ற தமக்கே இந்தக்
கதி என்றால், சாதாரணத் தமிழர் கழகத் தொண்டர்கள்
எந்தக் கதிக்கு ஆளாவார்களோ? என்று சிந்தித்த
கி.ஆ.பெ.வி. "கடை விரித்தேன் கொள்வாரில்லை,
கட்டிக்கொண்டேன்"
என்று அறிக்கைவிட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டார்.
அப்போது அவர் நடத்தி வந்த தமிழர்
நாடு ஏட்டுக்கு சந்தாதாரர்கள் மட்டுமே 1,700 பேர்
இருந்தார்கள் என்றால், அதைக் காசு கொடுத்து வாங்கிப்
படித்தவர்கள் எவ்வளவு பேர் இருந்திருப்பார்கள்!
தமிழர் கழகத்தில் எவ்வளவு பேர் இருந்திருப்பார்கள்
என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இருந்தும், அந்த 1,700 சந்தாதாரர்களுக்கும்
அவர்களுக்கு இதழ்கள் அனுப்பியது போக எஞ்சிய 7
மாதச் சந்தாத் தொகையை, தன் சொந்தச் செலவில்
திருப்பியனுப்பிவிட்டார் என்றால், அவருடைய
பொது வாழ்க்கை நாணயம் எவ்வளவு உயர்ந்தது!
வேறு யாரும் அப்படிச் செய்யவில்லை.
கட்சி அரசியலுக்கு மட்டுமே முழுக்கு
எனினும், கட்சி அரசியலுக்குத்தான் அவர் முழுக்குப்
போட்டாரேயயாழிய பொது வாழ்க்கைக்கு முழுக்குப்
போடவில்லை. தமிழ்மொழி மாநாடுகள், தமிழ் மருத்துவ
மாநாடுகள், தமிழிசை மாநாடுகள், தமிழர்
உரிமை மாநாடுகள், கூட்டங்கள் என்று அவர் ஓய்வின்றிப்
பங்கு கொண்டார். நூல்களை எழுதிக் குவித்தார்.
எனவேதான் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம்
அவருக்கு முத்தமிழ்க் காவலர் என்ற பட்டம் வழங்கிச்
சிறப்பித்தது.
இந்தி எதிர்ப்பு எரிமலை
1937இல் திருச்சியில் இந்தியை எதிர்த்து அவர்
நடத்திய தமிழர் மாநாடு, தமிழ்நாட்டின்
மொழிப்போருக்கு உயிர் கொடுத்தது என்று சொல்ல
வேண்டும். அதையயாட்டி 12 மாவட்டங்களில், 480
நாட்களில் 314 ஊர்களுக்குச் சென்று, 617
இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில், குறிப்பாகத்
தூத்துக்குடியில் ஒரே நாளில் 7 கூட்டங்களில் அவர்
ஆற்றிய உரை தமிழகத்தையே எரிமலையாக்கியது.
அந்த எரிமலையை வெடிக்கச்செய்வது போல 1965
சனவரியில் 9 எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து,
திருச்சியில் அவர் நடத்திய
இந்தி எதிர்ப்பு மாநாடுதான் மக்களிடம்
மனமாற்றத்தை உண்டாக்கி, தமிழகத்தில்
ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது என்பதைச் சொல்லத்
தேவையில்லை.
பேசாமை - உண்ணாமை நோன்பு
அந்த சனவரி 26இல் (அரசியல்
சட்டப்படி இந்தி ஆட்சிமொழியாகிய நாள்)
குண்டடிபட்டும, தடியடிபட்டும், சென்னை கூவம்
ஆற்றில் குதித்தும் 27 பேர்
உயிரிழந்தது கி.ஆ.பெ.வியை மிகவும்
உலுக்கிவிட்டது. இதனை நினைவு கூர்ந்து உள்ளம்
வருந்திய அவர் ஆங்கில மாதத்தின் ஒவ்வொரு 26ஆம்
நாளிலும் உண்ணாமலும், பேசாமலும் இருந்து, வாழ்நாள்
இறுதிவரை நோன்பிருந்தார்.
உலகத்தமிழ் மாநாடு - துணைத்தலைவர்
ஆகவேதான் 1944இல் சேலம் மாநாட்டில் மாறுபட
நடந்து கொண்டாலும், 1967இல் ஆட்சிக்கு வந்த அண்ணா,
தான் முதலமைச்சராக இருந்து 1968இல் நடத்திய
இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டிற்கு முத்தமிழ்க
காவலரைத் துணைத் தலைவராக்கினார். சென்னைக்
கடற்கரையில் தமிழக அரசு நிறுவிய ஒன்பது தமிழ்ச்
சான்றோர் சிலைகளில் திருவள்ளுவர்
சிலையை கி.ஆ.பெ.வியைக் கொண்டே திறக்கும்படிச்
செய்தார்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றே எப்போதும் எண்ணிக்
கிடந்ததால்தான் 1958இல் நடந்த
தமது மணிவிழாவின்போது 49 பேரைக் கொண்ட தமிழ்ப்
புலவர் குழுவை ஏற்படுத்தி, அது இன்றளவும்
இயங்கிவர வழி செய்தார். கி.ஆ.பெ.வி. (மதுரையில்
இருந்த கடைச் சங்கத்தில் 49 புலவர்கள்
வீற்றிருந்து தமிழ்
வளர்த்ததை இது நினைவு கூர்வதாகும்).
வெறுப்பின் வெளிப்பாடு
தமிழ்நாட்டில் மட்டுமன்றி, அந்தமான், மலேசியா,
சிங்கப்பூர், இலங்கை, பிரான்சு என்று கடல்
கடந்து சென்றும் தமிழ்த்தேசிய
எழுச்சிக்கு வழிவகுத்த பெருமை முத்தமிழ்க்
காவலருக்கு உண்டு. அதனால்தான் வாழ்நாள் முழுவதும்
இந்தியை எதிர்த்த அவர், ஆங்கில ஆதிக்கத்தால் தமிழ்
அழிவதைப் பொறுக்க முடியாமல் இரு மொழித்
திட்டத்திற்கு முன்பிருந்த மும்மொழித் திட்டத்தில்
தமிழும் கட்டாயம் என்றிருந்ததை மனதில் கொண்டு,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தம்
இறுதிக் காலத்தில் "மீண்டும் மும்மொழித் திட்டத்தைக்
கொண்டு வந்தாவது தமிழைக் காப்பாற்றுங்கள்"
என்று வெறுத்துப் போய் அறிக்கை விட்டார்.
நம் கடமை
அந்த வெறுப்பினாலோ என்னவோ 1994 டிசம்பர் 19ஆம்
நாள் அவர் தம் பூத உடலை நீத்துப்
புகழுடம்பு எய்தினார். 1944லேயே அவர் கனவுகண்ட
தமிழ்த் தேசிய வெற்றி தமிழ்நாட்டு விடுதலையைப்
பெற்றெடுக்க உழைப்பதே முத்தமிழக் காவலருக்கு நாம்
செய்யும் கைம்மாறாகும்.

Kathir Nilavan 
அருகோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக