திங்கள், 3 டிசம்பர், 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஐநா அதிகாரி வருத்தம்


aathi1956 aathi1956@gmail.com

மே 28, திங்., பிற்பகல் 3:05
பெறுநர்: நான்
கொச்சி,
தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் (ஸ்டெர்லைட்இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்) கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வந்தன. ஆனால் அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என கூறி வந்தனர். இதனை தொடர்ந்து ஆலையைமூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் 100வது நாளன்று பெரிய அளவில் பேரணியாக நடத்தப்பட்டது. இதில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஐ.நா. சபையின் சுற்று சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்ம், வன்முறை போராட்டத்தில் 13 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியானதற்கு தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்பொழுது, இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன்.
போராட்டம் வன்முறையாக மாறாமல் இருக்கும் என நம்பினேன்.
பலியோனோருக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இது நடந்திருக்க வேண்டாம்.
போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும். போலீசாரும் தனது வலிமையை பயன்படுத்த கூடாது. இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வுகள் கிடைக்கும் என நம்பிக்கை கொள்கிறேன். திட்டங்களை அமல்படுத்தும் முன் மக்களிடம் பேச வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு சுற்று சூழல் பாதுகாப்பு தேவையானது என்றும் அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.
 
படுகொலை ஐக்கிய நாடுகள் சபை ஸ்டெர்லைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக