திங்கள், 3 டிசம்பர், 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டித்து தமிழகம் வேலைநிறுத்தம் திருப்பூர் முன்னிலை

aathi1956 aathi1956@gmail.com

மே 27, ஞாயி., முற்பகல் 10:41
பெறுநர்: நான்
தென்றல் இப்ராகிம்
ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கே ஆட்டம் கண்டது தமிழக பொருளாதாரம்...
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் 2,000 ஆயிரம்பின்னாலாட
ை நிறுவனங்களும், அதை சார்ந்த பிரிண்டிங், டையிங், காம்பாக்டிங் உள்ளிட்ட நிறுவனங்களும் இயங்கவில்லை. மேலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்பணிக்கு செல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதே போல் அனுப்பபாளையம் பாத்திர தொழிலாளர்களும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் திருப்பூர் மாவட்டத்தில்அனைத்து பகுதிகளிலும் 20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிரு
ந்தன.
இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கே இவ்வளவு ஆட்டம் கண்டுள்ளது தமிழக பொருளாதாரம்.. அதுவும் இந்த ஒரு ஊரில் மட்டும் 200 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக