aathi1956 <aathi1956@gmail.com> மே 7, திங்., முற்பகல் 11:30 பெறுநர்: நான் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் யாருமே நீட் எழுத வெளி மாநிலம் செல்லவில்லை என்று கூறப்படுவது தவறு. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 39 மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 மாணவர்கள் கர்நாடகா மைசூருக்கும், 1 மாணவர் பெங்களூருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மாணவர்கள் திருவனந்தபுரத்திற்கும், ராமநாதபுரத்தில் இருந்து 1 மாணவர் எர்ணாகுளத்திற்கும், திருவாரூரில் இருந்து 2 மாணவர்கள் கொல்லத்திற்கும், திருநெல்வேலியில் இருந்து 5 மாணவர்கள் எர்ணாகுளம், திருவனந்தபுரத்திற்கும், திருச்சிராப்பள்ளியில் இருந்து 17 மாணவர்கள் திருவனந்தபுரத்திற்கும் செல்கின்றனர் (source: பள்ளிக் கல்வித்துறை) தமிழகத்தில் மொத்தம் 5800 மாணவர்கள் பிற மாநிலங்களில் தேர்வெழுதச் செல்கின்றனர். இதில் 5371 மாணவர்கள் எர்ணாகுளம் மையத்திலும், 129 மாணவர்கள் கொல்லம் மையத்திலும் தேர்வு எழுதுகின்றனர். தர்மபுரி, ஓசூர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 190 மாணவர்கள் கர்நாடகாவுக்கும், சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி 110 மாணவர்கள் ஆந்திராவுக்கும் தேர்வெழுதச் செல்கின்றனர். ராஜஸ்தான் மற்றும் சிக்கிமுக்குச் செல்லும் மாணவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று அவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு மையம் தேர்வு செய்யப்பட்டு அங்கு தேர்வெழுதச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் உண்மையை கண்டுபிடிக்க உயர் மட்டக் குழு அமைக்க வேண்டும். தவறு செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும். இதை நீதிமன்றம் எடுத்துச் சென்று நீட் தேர்வை ஒழித்தால் நன்றி. தராசு சியாம் சண்முகம் |
திங்கள், 3 டிசம்பர், 2018
39 அரசு பள்ளி மாணவர் வெளிமாநிலம் நீட் எழுதினர் பட்டியல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக