|
மே 21, திங்., முற்பகல் 10:13
| |||
கூர்ங்கோட்டவர்
ஓதம் அறிதல் காட்சி 3
வெப்பம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கிருந்து காற்று குழுமையான இடத்திற்குப் போகும். நீருக்கே நிலத்தை விட வெப்பத்தை அதிகம் உள்ளிழுக்கும் ஆற்றலும் இழக்கும் ஆற்றலும் இருக்கிறது.
காலை வேலைகளில் கடல் நிலத்தை விட வெப்பமாய் இருக்கும். அதனால் நிலத்தில் உள்ள குழுமையைப் போக்க கடலில் இருந்து வரும் காற்று கடல் காற்று ஆகும்.
மாலை தாண்டியவுடன் கடல் நிலத்தை விட குழுமையாய் இருக்கும். அதனால் கடலில் உள்ள குழுமையைப் போக்க நிலத்தில் இருந்து கடலுக்குச் செல்லும் காற்று கழிக்காற்று ஆகும்.
அதிகாலையில் சூரியன் எழுந்து சில நாழிகைகளில் (இந்நேர இடைவேளை நிலத்தின் அமைப்பு பொறுத்து அளவு மாறும்) கடற்காற்றும் கழிக்காற்றும் ஒன்றை ஒன்று அழுத்தி சிறிய சுழல் உருவாகும்.
அதே போல் மாலையில் சூரியன் மறைந்து சில நாழிகைகளில் (இந்நேர இடைவேளை நிலத்தின் அமைப்பு பொறுத்து அளவு மாறும்) கடற்காற்றும் கழிக்காற்றும் ஒன்றை ஒன்று அழுத்தி சிறிய சுழல் உருவாகும்.
அந்த சுழலில் எந்தக்காற்று மேல் இருக்கும் எது கீழ் இருக்கும் என்பதையே வரைபடம் விளக்குகிறது.
இக்கதையில் நடக்கும் போர்க்காட்சிகளில் இப்படத்தைப் புரிந்து கொள்ளுதலும் முக்கியம்.

14 ஜனவரி 2014 · பொது
கூர்ங்கோட்டவர்
7.6 தொடர்ச்சி
______________________________ _______________

_____________
வணிகன் : உயிரைக் காப்பாற்றியவர்க
ளுக்கு உதவாமலா? நிச்சயம் செய்கிறோம்.
கொற்றன் : கலத்துக்கு இருவர் என 12 பேர் இக்கலத்துக்குள் உடன் வர வேண்டும். சில விதிமுறைகளை தலைவர் விதிப்பார். அதன்படி சென்றால் நாம் யாரும் தாக்கப்படாமல் தமிழகம் போகலாம்.
வணிகன்: இது தயாராகிக் கொண்டிருக்கும் கலம் என்பதால் இங்கேயே அனைத்துக் கலன்களின் முக்கிய ஏவலாளர்களும் உள்ளார்கள். மற்றவை நங்கூரம் போட்டு நிறுத்தி மட்டுமே வைத்திருக்கின்றனர். நான் உடனே அனைவரையும் அழைக்கிறேன்.
வணிகன் அவசரம் புரிந்து கொண்டு "கடம்பர்களிடம் இருந்து நம்மைக் காத்தவருக்கு ஒரு ஆபத்து. அனைத்து கலனின் ஏவலாளர்களும் உடன் வரவும்" என்று வெளிப்படையாகவே அறிவித்தான்.
அனைவரும் உயர்ந்தவனை பார்க்கும் ஆவலுடனே உடன் வந்தனர். சிலருக்கு கடம்பர்களிடம் இருந்து தன் பெற்றோர்களை காப்பாற்றியவனை பற்றி கேட்டுள்ளனரே தவிர பார்த்ததில்லை. அனைவரும் ஆவலுடன் கூடினர். உயர்ந்தவன் செய்து காட்ட கொற்றன் அவன் ஏவல்களை எல்லாம் உரக்கக் கூறினான்.
“தற்போது நம்மிடம் நேரமில்லை தயாரான கலங்களை உடன் கிளம்புவது நல்லது. தமிழ் வணிகர்களை 2 ஆண்டுகளாக துன்பப்படுத்திய ஒருவன் உங்களின் உயிர் காத்தவனை கொல்ல முயல்கிறான். எங்களுக்கு உதவுவதால் அவனின் படையாலும் அதில் இருந்து தப்பினால் கடம்பர் படையாலும் நாம் தாக்கப்படலாம். நான் கூறுவதை ஒருமுறை கூர்ந்து கேட்டு செயலாற்றுங்கள். சகிம்ஞைகள் செய்வதற்கு கூம்பின் மேல்பகுதிக்கு சிலரை விளக்குகளோடு ஏறிக் கொள்ளச் சொல்லுங்கள். கூம்பின் மேல்பகுதிக்கு நீரை கொண்டு செல்வதற்கு சில கருவிகளையும் பொருத்துங்கள். கலங்களை நான்கு வரிகளாக பிரித்து முதலில் ஒரு தலைமைக் கலத்தையும் அடுத்து ஒன்று இரண்டு இரண்டு என்று ஐந்து கலங்களை முக்கோண வடிவில் வரச் சொல்லுங்கள். இடையில் எக்கலம் தடைபட்டு நின்றாலும் அடுத்த கலங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும். பாய்மரங்களை கொண்டு வர நம் வணிகர்கள் சிலர் சென்றிருக்கின்றனர். அவர்கள் எப்பக்கத்தில் இருந்து வேண்டுமானாலும் கலம் ஏறலாம். நாவாயின் பாய்மரங்கள் எல்லாம் புணையிலேயே இருக்க வேண்டும். கலத்திற்கான பாய்களை மட்டும் கூம்பேற்றுங்கள்.(6) கலத்துக்கு ஒரு ஏவலாள் மட்டும் அந்தந்த கலத்துக்கு செல்லுங்கள் மற்றவர்கள் இக்கலத்திலேயே இருங்கள் தேவைப்படும் போது உங்கள் கலங்களுக்கு போகலாம். நாம் வங்கக்கடலை நெருங்கியவுடன் நான் மற்றவற்றைக் கூறுகிறேன். இக்கனத்தில் இருந்தே செயலாற்றத் தொடங்குங்கள்.”
ஏவலாளர்கள் அனைவரும் தத்தமது கலங்களுக்கு சென்றனர். கரும் பாய்களை தலைவன் கூறிய படி புணைகளில் வைத்து தலைமைக் கலத்துக்கு அனுப்பினர். கூம்பின் மீது ஏறத்தயாராகும் போது காவிதியும் தலைமை வணிகனும் மற்றும் சிலரும் கலத்திற்கூறிய பாய்களோடு வந்து கலங்களை உடன் கிளப்பச் சொன்னார்கள். கலங்கள் அனைத்தும் உடன் கிளம்பின. சில நாட்களில் வங்கக்கடலின் கங்கைக் கழிமுகம் அருகில் தமிழர் கலங்கள் வந்தன. கொற்றனும் இவ்வளவு நாள் நம்மை மௌரியக் கலங்கள் பின் தொடரவில்லையே என்று ஏவலாளர்களிடம் கேட்கலானான்.
ஏவலாளன்: “அவர்களுக்கு நாம் கூட்டு சேர்ந்தது தெரிந்திருக்கும். நம்மை ஒன்றாகப் பகைத்தால் தமிழ் வேந்தர் கோவத்துக்கு ஆளாகலாம். இருதரப்பு வணிகமும் பாதிக்கப்படலாம். அதனால் போலி விபத்து நடத்தி நம்மை மறைமுகமாகவே தாக்கத் திட்டமிட்டு இருப்பர். எதிரிகளின் கலங்களை கழிமுகத்தில் பலமுறை போலி விபத்தில் அழித்திருக்கின்றனர்.”
கொற்றன்: ஆம். நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது புரிந்தது. சற்று பின் திரும்பிப் பாருங்கள். இரண்டு பெருங்கலங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஏவலாள்: மற்றவர்கள் போலவே நாமும் அழிய வேண்டியது தான்.
கொற்றன் தலைவனை பார்த்தான். தலைவன் ஓரத்தில் இருக்கும் ஒரு பெருந்துறை நகரத்தை காட்டினான்.
கொற்றன்: நம் கலங்களை பெருந்துறை நோக்கித் திருப்புங்கள். இவர்கள் நம்மை தாக்க நினைத்திருந்தால் இவர்கள் கலத்தின் வேகத்திற்கு நம்மை நேற்றே தாக்கத் தொடங்கி இருப்பார்கள். நம்மை கழிமுகத்தில் போலி விபத்து ஏற்படுத்தி அழிக்க நினைத்ததாகவே தெரிகிறது.
ஏவலாள்: பெருந்துறையில் இருந்து எப்படி மீள்வது?
கொற்றன் ஏவலாளனை பார்த்து மெலிதாக நகைத்தான். "அதுக்குத்தான் இருக்கவே இருக்கே கலத்தை மூடுமளவு உள்ள கரும்பாய்கள்."
தலைமைக் கலம் பெருந்துறைக்கு செல்வதைப் பார்த்துவிட்டு மற்ற கலங்களும் பெருந்துறைக்கு வந்தன. மௌரியரின் பெருங்கலங்கள் இரண்டும் பெருந்துறையின் வெளிப்பகுதியிலேயே நங்கூரமிட்டு நின்று விட்டன.
கொற்றன் கூறிய படியே இரவானதும் 12 புணைகளில் ஒவ்வொன்றிலும் இருவரை ஏற்றி அவற்றை கரும்பாய்கள் கொண்டு மூடச் செய்துவிட்டான். அவற்றை ஆற்றின் போக்கிலேயே போகச் சொல்லி கழிமுகத்தின் இரு பக்கங்களையும் நோட்டமிட்டுவிட்டு மட்டும் திரும்பி வருமாறும் அனுப்பிவிட்டான். அனைத்து ஏவலாளர்களுக்கும் வேறு சில கட்டளைகளையும் விதித்தான்.(7?) இரவின் இருள் காரணமாகவும் கரும்பாய்களால் புணைகள் மூடப்பட்டிருந்ததாலும் புணைகள் பெருந்துறைவிட்ட
ு வெளியேறியதை மௌரியர் கலங்கள் கவனிக்கவில்லை. அவர்களும் புணையில் சென்று நோட்டமிட்டுவிட்
டு கழிமுகத்தில் வெளிப்புற முன்துறைகளில் 2 கடம்பர் கலங்கள் நிற்பதாகவும் தீ அணைக்கும் கருவிகள் அனைத்து இடத்திலும் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
தலைவன் வேண்டுமென்றே கலங்களில் ஏதாவது பழுது ஏற்படுத்திவிட்ட
ு நாளை அதை சாக்காக வைத்து மாலையே இங்கிருந்து கிளம்பலாம் என்றான். மௌரியர் கலங்களும் இவர்கள் எப்போதானாலும் வெளிவந்து தானே ஆக வேண்டும் என்று திமிரோடு இருந்தனர். மாலை வரையிலும் கலங்கள் வெறுமனே நின்றுவிட்டு 1 நாழிகை கழித்து திடீரென தமிழர் கலங்கள் கிளம்பின. திடுக்கிட்ட மௌரியர் சற்று நிதானித்துவிட்டு அந்த ஆறு கலங்களையும் கழிமுகத்தில் வைத்து அழித்தொழிக்க பின் தொடர்ந்தார்கள்.
மாலை தொடங்கிய நேரம் என்பதால் இன்னும் கடல்காற்று.(8) மட்டும் வீசிக்கொண்டிருந்தது. கழிமுகம் நெருங்கின தமிழர்களின் ஆறு கலங்களும்... அதுவரைக்கும் நங்கூரம் இட்டிருந்த கடம்பரின் இரு கலங்களும் கடற்காற்றையும் கழி ஓதத்தையும் பயன்படுத்தி கழிமுகத்தில் உட்புகுந்தன. தமிழர்களின் கலங்கள் கழி ஓதமாக இருந்ததால் மெதுவாகவே முன்னேற முடிந்தது. நான்கு யானைகள் நடுவில் ஆறு பூனைகள் மாட்டிக்கொண்டது போல் நினைத்தார்கள் மௌரியர்கள். திடீரென 22 பேர் கழிமுகத்தின் பகுதி உட்பகுதி மரங்களின் மேல் இருந்து தீ தோய்த்த வில்களை கடம்பர் கலங்களின் பாய்க்கூம்புகளின் மேல் பகுதியில் விடலாயினர். கடம்பர்கள் தீ அணைக்கும் கருவிகள் அனைத்தையும் கீழேயே பொருத்தி இருந்ததால் அவர்களால் மேலிருந்து பெருகி வந்த தீயை அணைக்க முடியவில்லை. கடம்பர் கலங்களுக்கு இடையே இருந்த வெளியை பயன்படுத்தி தமிழர் கலங்களும் பின் தொடர்ந்த மௌரியர் கலங்களும் கழிமுகத்தை நோக்கி விரைந்து செல்ல ஆரம்பித்தன. மேலும் தீ விற்கள் கடம்பர் கலங்களை தாக்கிக் கொன்டே இருந்தன. கடம்பர் அனைவரும் கலன்களில் இருந்து குதித்தார்கள்.
கடம்பர் கலங்கள் எரிந்ததை பார்த்ததும் கூம்பின் உச்சிப்பகுதிக்க
ு மௌரியர்கள் நீருடன் ஏறினார்கள். திடீரென கடற்காற்றும் கழிக்காற்றும் மோதி விண்ணில் ஒரு சுழல் உருவாகும் நேரம் நெருங்கியது. சரியாக சுழல் உருவான நேரம் பார்த்து மூன்று நிலைப் பாய்மரங்களில் கீழ் இரண்டு நிலை பாய்களையும் அனைத்து தமிழர் கலங்களும் கீழிறக்கின. மௌரியர்களுக்கு அவர்களின் செய்கை புரியவில்லை. முதல் பாய்மர நிலை மட்டும் கழிக்காற்றால் முன் அழுத்தப்படும் நிலையில் இருந்தது. மற்ற இரண்டு கீழ் பாய்மர நிலைகளையும் கடற்காற்றுச் சுழல் பின் தள்ளியது. திடீரென தமிழர் தங்கள் கலங்களில் உள்ள கீழிரண்டு நிலைப் பாய்களையும் தீயிட ஆரம்பித்தனர். மௌரியர்களுக்கு அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என அறியும் முன்பே ஐந்து பின் கலங்களில் இருந்தும் பாய்களை பிணைத்திருக்கும் கயிறுகளை வெட்டினார்கள். கடற்காற்றுச் சுழலால் வெட்டி விடப்பட 10 பாய்களும் தீயைப் பிடித்துக்கொண்டு மௌரியர் கலங்களை நோக்கி பாய ஆரம்பித்தன. மௌரியர் களங்களில் நெருப்புப் பாய்த் துண்டுகள் சில பரவ ஆரம்பித்தன. மேல் இருந்த வீரர்கள் நீரை பாய்ச்சி நெருப்புப் பாய்கள் மூடிய இடங்களில் நீரை விலாசினர். பாய்மரக்கூம்புகள் பத்தி எறிந்ததால் அவர்களும் பாய்களின் கயறுகளை வெட்டி பாய்களை கடலில் எறியப் போனார்கள். கழி ஓதமும் மௌரியர்களை முன்னேற விடாமல் தடுத்தது. திடீரென சுழல்வட்டம் முடிந்து கடலை நோக்கி முழுக்காற்றின் வேகமும் திரும்பியது. தமிழர் கலங்கள் முதல் நிலை பாய்மரத்தை விரித்து வேகமாக கழிமுகம் நோக்கி முன்னேற ஆரம்பித்தன. ஒவ்வொரு பாயின் நான்கு முனைகளிலும் எண்ணை குடுவைகள் கட்டப்பட்டிருந்
ததால் நாவாயில் மோதிய கலங்களின் பாய்கள் குடுவைகளை நாவாயின் மீது உடைத்து எண்ணையை பீய்ச்சி அடித்திருந்தது. அதனால் தீ இரு நாவாய்களிலும் வேகமாகப் பரவிவிட்டது. மௌரியர் கலங்களில் வெளியிலும் குதிக்க முடியாமல் உள்ளும் இருக்கவும் முடியாமல் பலர் தீயில் கருகி இறந்தார்கள். இன்னும் சிலர் ஆற்றின் ஓட்டத்திலும் கழி ஓத ஏற்றத்திலும் உண்டான சுழலில் விழுந்து மாண்டார்கள். கலங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி எறிந்து சாம்பலானது. தப்பிப் பிழைத்தோரால் பிந்துசாரனுக்கு செய்திகள் தூதனுப்பப்பட்டது.
வெற்றிக் கூச்சலில் தமிழர் கலங்கள் ஆர்ப்பரித்தன. இரவில் ஒற்றறியச் சென்று மரங்களில் இருந்து தாக்கிய வீரர்களும் கழிமுகத்தின் வெளியில் இருந்த முன்துறைகளில் நிறுத்தியிருந்த புணைகளில் ஏறி கலத்துக்கு வந்தனர். தலைமைக் கலனில் ஏறிய இருவரும் கொற்றனும் தலைவனும் கூடியிருந்த இடத்துக்கு வேகமாக ஓடி வந்தார்கள்.
ஏவலாள்: தலைவரே. நாங்கள் ஒற்றறியச் சென்று தங்கி இருந்த போது மேலும் சிலவற்றைக் கண்டோம். நம்மை தாக்கியவர்கள் கடம்பரும் மௌரியரும் மட்டும் அல்ல.
தலைவன் அவனை கூர்ந்து பார்த்தான்.
ஏவலாள்: அவற்றில் நூற்றுவ வடுகர், கோசர், வட சிங்களர், குடச்சேரர் படை வீரர்களையும் பார்த்தேன். நம்மைத் தாக்குவதற்கு ஏன் இத்தனைப் படைகள்?
இன்னொருவன்: அதுமட்டும் இல்லை. மௌரியர்களின் ஐந்து படைகளையுமே தமிழகம் நோக்கி அனுப்பிவிட்டனர். வழியில் உள்ள அனைத்து நாடுகளையும் வெல்லும் அளவுக்கு வலிமையுடையதாய் இருக்கிறதாம் அவர்களின் அப்படை பலம். அவர்களின் ஐந்து படைகளில் நான்கு எளிதாக தமிழகம் சென்று விடும். ஆனால் மிகவும் கொடூரமான முறையில் போரிடும் சக்கர வியூகத் தேர்ப்படை மட்டும் வேங்கடமலை, உலக இடைக்கழி வடக்கே நிறுத்தப்படுமாம். ஒருவேளை ஆபத்து நேர்ந்தால் மட்டுமே அவை தமிழகத்துக்கு உட்செல்ல திட்டமாம். மௌரியர்களின் சக்கர வியூகத் தேர்ப்படை முறை மிகவும் ஆபத்தானது. பறந்தலைப் போர்களில் மற்ற படைகளுக்கு அவை பெரும் அரணாய் இருக்கும். ஒட்டு மொத்த தமிழக அரசர்களின் படைபலமும் சேர்த்தாலும் அவற்றுக்கு ஈடு கொடுப்பது கடினம். எனக்கென்னவோ தமிழகம் பெருமழிவைச் சந்திக்கும் எனத் தோன்றுகிறது.
ஏவலாள்: வடுகர், கோசர், குடச்சேரர்களின் துணையோடே மௌரியர் இருப்பதால் எளிதில் சோழர்களை வெற்றிக்கொள்வர். பாண்டியர்களின் நிலையையோ கேட்க வேண்டாம். ஏற்கனவே சோழ சேரரோடு நடந்த பெரும்போர்களில் தோற்றுவிட்டனர். பஞ்சவரில் ஒருவருக்கு ஒருவர் போரிட்டுக் கொள்கின்றனர். பாண்டிய நாடு எழவே இனி பல நூற்றாண்டுகள் பிடிக்கும். மற்ற சேரர்களும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் போல் தோன்றுகிறது. தேயத்துத் தமிழ்ச் சங்கத் தலைமையோ தற்போது சேரனிடத்தில். இனி சேரன் மேற்கில் இருந்து வரும் வணிகத்தை பாண்டிய சோழ நாட்டுகளுக்கு வராதவாறு செய்யலாம். தென்னிலங்கை பாண்டியர்களும்(9) உதவிக்கு சிங்களத்தை தாண்டியே வர வேண்டும். தமிழகத்தை வென்ற மௌரியன் அது மட்டும் போதும் எனப்போய் விடுவானா. கண்டிப்பாக தென்னீழத் தமிழரும் நாகத்தீவின் தமிழரும் முழுமையாக அழிக்கப்படுவர். இனி என்ன தான் செய்வது? தமிழரைக் காப்பாற்ற இனி அந்த சேயோனும் கொற்றவையும் தான் இறங்கி வர வேண்டும்.
கொற்றன்: மௌரியர் படை அனுப்பியது இப்போதுதான் தெரியும். இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இதுக்கே இப்படி அதிர்ச்சி ஆனால் எப்படி? சோழனும் சேரனால் கொல்லப்பட்டுவிட்டான். முக்குடிச் சோழ இள வேந்தர்களும் குடச் சேரருக்கு அஞ்சி காடுகளில் மறைந்து வாழ்கின்றனர்.
கலனில் உள்ள அனைவரும் திகைத்தனர்.
ஒருவன்: இதை ஏன் முன்னரே சொல்லவில்லை? சொல்லி இருந்தால் மௌரியர்களை எதிர்த்திருக்கவ
ே வேண்டாமே. பேசாமல் சேரனிடம் தஞ்சமடைந்து நாம் அடிமை வாழ்வு வாழ்வது தான் இனி ஒரே வழி.
திடீரென தலைவன் உரக்க நகைத்தான். கலனில் உள்ள அனைவரும் அவன் சத்தமிட்டு இதுவரை பார்த்ததில்லை. எல்லாம் கையாலே செய்து காட்டுவானே அன்றி சத்தம் ஏதும் போடமாட்டான். திடீரென அவனின் பேய் போன்ற சிரிப்பு அனைவரையும் பயம் கொள்ளச் செய்தது. பக்கத்துக் கலன்களில் உள்ளவர்கள் கூட அஞ்சினார்கள்.
ஒருவன்: இவர் என்ன இப்படி நகைக்கிறார்? ஏதும் பித்துப்பிடித்த
ுவிட்டதா? மௌரியரின் படைபலத்தை கேட்டவுடன் பயந்து மூலை குழம்பிவிட்டதோ?
மீண்டும் அவனைப் பார்த்து தலைவன் மீண்டும் உரக்க நகைத்தான்.
கொற்றன்: நகைக்காமல் பின்னால் என்ன செய்வார்? கோழை போல் பேசாதே. அடிமையாய் நாம் தமிழ்த்துரோகியிடம் மண்டியிடுவதை விட அவனிடம் போரிட்டு மடிவதே மேல். தவிர தேயத்துத் தமிழ்ச் சங்கத் தலைவன் தற்போது சேரனல்ல. இங்கு இப்படி நகைப்பவரும் வணிகர் மட்டும் அல்ல. தேயத்துத் தமிழ்ச் சங்க சிறப்பு ஒற்றர் படைத் தலைவர். நானும் ஒற்றனே.
ஒருவன்: என்ன சங்கத்து ஒற்றரா? எந்த நாட்டு ஒற்றர்? சேரன் துரோகி ஆகிவிட்டான். சோழன் கொல்லப்பட்டு விட்டான். ஐவர் நாடெங்கும் உள் நாட்டுக்குழப்பம். தேயத்துத் தமிழ்ச் சங்கத் தலைவனும் சேரனில்லை. பின்னர் சங்கம் ஏது? சங்கத்து ஒற்றர் ஏது? இது எதிலும் மெய்யிருப்பதாகத் தெரியவில்லையே.
தலைவன் மீண்டும் உரக்க நகைத்தான். கடலெங்கும் பரவிக்கேட்பது போல் அதிர்ந்தது அவனின் பேய்ச்சிரிப்பு. தன் தலைப்பாகையைச் சுழற்றி பின்னங் கழுத்தில் இருந்த முடியை விளக்கிக் காட்டினான். கழுத்தில் அவன் எந்த கூட்டத்தின் ஒற்றன் என்பதைக் காட்டும் சின்னம் அங்கிருந்தது. மீண்டும் பெருமிதத்தோடு தொடர்ந்து நகைத்தான்.
கிளர்ப்பாய்ச் சின்னத்தை (7.6.3?) பார்த்து அனைவரும் வியந்தனர்.
7.6 தொடர்ச்சி
______________________________

12 பிப்ரவரி 2014 ·
தென்காசி சுப்பிரமணியன்
கடல் ஆறு கலக்கும் இடம் காற்று துறைமுகம் செயல்படும் முறை
|
மே 21, திங்., முற்பகல் 10:33
| |||
கூர்ங்கோட்டவர்
ஓதம் அறிதல் காட்சி இரண்டு
1. இந்த படத்திலும் மூன்று விடயங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவை. முன்துறையில் உள்ள கலம் நங்கூரம் மாட்டி கூம்பிறக்கி நிறுத்தப்பட்டுள
்ளது. அதன்காரணம் கடல் ஓதத்தின் போது கடலின் நீர் ஆற்றின் வெளிவர முயலும். மேலும் இப்படத்தில் காட்டப்படும் காட்சியின் போது கரைக்காற்று வீசுவதால் அக்காற்றும் கலத்தை மீப்பாயோடு ஆற்றின் வெளித் தள்ளும். ஆற்றின் நீரோட்டமும் கலத்தை வெளித்தள்ள முயலும். இந்த நிலையில் கடலிலிருந்து ஆற்றுக்கு வருவது கடினமானது. இதனால் முன்துறையில் உள்ள கலம் நங்கூரமிட்டு கூம்போடு மீப்பாய் இறக்கி நிறுத்தப்பட்டுள்ளது.
2. பெருந்துறையில் இருந்து வெளியேறும் கலம் கழிமுகத்தில் இருந்து கடலுக்கு வருகிறது. அப்போது கூம்போடு மீப்பாய் ஏற்றப்பட்டிருப்பதால் கரைக்காற்று கலத்தை கடலுக்குத் தள்ளும். மேலும் கடல் ஓதத்தின் போது கடல் மட்டம் தாழ்ந்து கொண்டே வருவதால் கடல் ஓதம் தொடங்கிய நேரத்திலேயே கலத்தை வெளிக்கொணர வேண்டும். அது கீழுள்ள காரணத்தால் விரைவாக செய்யவியலும்.
3. காட்சி ஒன்றில் கலத்தை ஆற்றோட்டம் எதிர்க்கும். ஆனால் இப்போது ஆற்றோட்டப் போக்கிலேயே கலமும் செல்வதால் ஆற்றோட்டமும் கரைக்காற்றும் கடல் ஓதமும் மூன்றும் ஒன்று சேர்ந்து கலத்தை எளிதாக பாறைகளில் மோதாமல் கடலுக்கு கொண்டுவந்துவிடும்.
மொழிபெயர்ப்பைக் காணவும்
12 அக்டோபர் 2013

அறிவியல் கப்பல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக