திங்கள், 3 டிசம்பர், 2018

தூத்துக்குடி போராட்டம் வழக்கறிஞர் மகத்தான பங்கு

aathi1956 aathi1956@gmail.com

மே 27, ஞாயி., முற்பகல் 10:33
பெறுநர்: நான்

Krishna Muthukumarappan கலைச்செல்வம் சண்முகம் மற்றும் Ambalarajan Nalladurai உடன் உள்ளார்.
இந்த வேளையில் # தூத்துக்குடி_வழ
க்கறிஞர்_சங்கத்தின் பணி மகத்தானது! 1) 3 நாட்களில் 200க்கும் மேற்பட்டோரை சொந்த ஜாமினில் விடுவிக்கவைத்துள்ளனர். 2) சித்ரவதைகளை தலையிட்டு தடுத்து.. 3) சிறைப்பட்டவர்களை பார் தனது செலவிலேயே வண்டிவைத்து அழைத்து வந்து கையோடு உறவினரிடம் ஒப்படைத்துவருகி
ன்றனர்..
4) ஞாயிற்றுக்கிழமையிலும் கோர்ட் செயல்படுகிறது.. 5) சட்டப் பணிகள் உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.. 6)மருத்துவ மனைகளில் உள்ளவர்க்கு உதவி... மேலும்... நீதித்துறை நடுவர்களுடன் இணைந்து 7) மருத்துவ சிகிச்சை அளித்த பின்பே ரிமாண்ட் கோரிக்கையை பரிசீலனைக்கே எடுத்துக் கொண்டனர்.
8 ) குற்றம்சாட்டப்பட்டவரின் உடைமைகளையும் காயங்கள் சித் ரவதைகளை அக்குவேர் ஆணிவேராக பதிவு செய்துகொண்டனர். 9) குண்டடி, படுகாயம் அடைந்தவர்களை மருத்துவ மனைக்கே சென்று நடுவருடன் அறிக்கை எடுத்துக் கொண்டுள்ளனர்.
10) நள்ளிரவு, அதிகாலை என நேரம் பாராமல் வழக்கறிஞர்களும் நடுவர்களும் உழைத்து வருகின்றனர். 11) நடுவர்களையே நேரடியாகவே காவல் அதிகாரகள் மிரட்டி வருவது மிகவும் குறிப்பிடத்தக்கது. எதற்கும் அடிபணியாமல் சட்ட விதிகளை சரியாக கடைபிடித்து வருகின்றது தூத்துக்குடி நீதிமன்றம்.
12) பலியான 13 குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றனர் அங்குள்ள முற்போக்கு வழக்கறிஞர்கள்.
22 நிமிடங்கள் · பொது

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நிவாரணம் வழக்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக