திங்கள், 3 டிசம்பர், 2018

உலக அளவில் 20 மாசடைந்த நகரங்கள் 14 இந்தியா

aathi1956 <aathi1956@gmail.com>
மே 14, திங்., பிற்பகல் 6:34
பெறுநர்: நான்

Veeraa VK
உலகில் அதிகம் மாசடைந்த 20 நகரங்களில் 14 இந்தியாவை சேர்ந்தவை.
# உலக_சுகாதார_மையம் வெளியிட்ட அறிக்கையில் 14 இந்திய நகரங்கள் காற்று மாசுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பெருகி வரும் வாகன பயன்பாடு, தொழில்மயமாதல், நகரமயமாதல் போன்ற பல காரணிகளால் காற்று மாசுபாடு முன்பில்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதிலும், மெட்ரோ நகரங்களின் நிலை மிக மோசமாக மாறிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்ததின் விளைவால் குழந்தைகள் கூட பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியது.
இந்தியாவில் டெல்லி, வாரணாசி, ஃபரிதாபாத், கயா, பாட்னா, லக்னோ, ஆக்ரா, ஸ்ரீநகர், முசாஃபர்பூர், ஜெய்ப்பூர், பட்டியாலா, கான்பூர், ஜோத்பூர், குர்கோவன் ஆகிய 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 2016-ம் ஆண்டில் பி.எம்10 அளவீட்டின்படி எடுக்கப்பட்ட முதல் 20 நகரங்களின் பட்டியலிலும் இந்தியாவை சேர்ந்த 13 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
உலகில் 10-ல் 9 பேர் சுகாதாரமற்ற மாசடைந்த காற்றை சுவாசித்து வருகின்றனர் என்று அதிர்ச்சி தகவலையும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. டெல்லி மட்டும் இந்தியாவின் மாசடைந்த நகரமாக சித்தரித்து வந்த வேளையில், உலக சுகாதார மையத்தின் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றது காற்று மாசுபாட்டில் இந்தியர்களின் அலட்சியத்தை எடுத்துரைக்கிறது. உலக சுகாதார மையத்தின் அறிக்கை, எதிர்காலத்தில் இந்தியாவின் அனைத்து நகரங்களும் மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற நகரங்களாக மாறப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணியாகும்.
WHO அறிக்கையில், " உலகளவில் காற்று மாசுபாட்டால் ஆண்டிற்கு 7 மில்லியன் மக்கள் இதய நோய்கள், நுரையீரல் #புற்றுநோய் , மூச்சுத் திணறல் சம்பந்தப்பட்ட நோய்கள், நிமோனியா உள்ளிட்ட நோய் பாதிப்பால் இறந்துள்ளனர் ". மேலும், காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய 90 சதவீத மரணங்கள் வளரும் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலேயே உயிரிழப்புகள் அதிகம் நிகழ்கின்றன.
வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்களில் பயிர்கள் எரிப்பது, அனல் மின்நிலையங்கள், வாகன போக்குவரத்து போன்றவற்றில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் சல்பர், நைட்ரேட், கார்பன் உள்ளிட்ட நச்சுகள் அதிகரித்து காற்றை மாசுபடுத்துகின்றன. பி.எம்2.5 அளவீடு என்பது காற்றில் கலந்துள்ள சல்பர், நைட்ரேட், கார்பன் போன்றவற்றை குறிக்கிறது. இவை உடலுக்கு பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
வேகமாக #நகரமயமாக்கல் பூமியில் மனிதன் வாழும் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துக் கொண்டே வருகிறது. சொந்த ஊர் திரும்புதல் காலத்தின் கட்டாயம்; ஊர் திரும்பி தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதே நாம் வாழ சிறந்த வழி.
தமிழகம் விதிவிலக்காக இருக்க, தமிழகத்தையும் மாசுபடுத்த ஐம்பது புதிய அனல் மின் நிலையங்கள் வர இருக்கிறது. இதன் பிறகாவது அரசு மாசுபாட்டை கருத்தில் கொண்டு காற்று மாசு ஏற்படாதவாறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
# தமிழர்_ஆய்வுக்_கூடம்
Tamil Research Institute (Tamilri)
http://www.youtube.com/c/TamilRI
https://www.facebook.com/TeamTamilRI
http://www.tamilri.com/
9 நிமிடங்களுக்கு
நகரமயமாக்கல் மாசு காற்று கார்ப்பரேட் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக