திங்கள், 3 டிசம்பர், 2018

நீட் தொடக்கத்திலேயே மாநிலங்கள் எதிர்ப்பு

aathi1956 aathi1956@gmail.com

மே 9, புத., முற்பகல் 10:12
பெறுநர்: நான்
நீட்டை எதிர்த்தவரே பிரதமராக வந்தாலும், தங்கள் திட்டம் அல்லது யாருடைய திட்டமோ நிறைவேற, ஒரு குழு மேலே இருந்து கருமமே கண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது!

நீட் குறித்த சட்டப்பூர்வமான தெளிவான பார்வை
Kalyanakumar Somasundaram
Tamil translation by Arunachalam Sivakumar

"நீட் தேர்வை பற்றி தெரியாமல் முழுமையாக இருப்பதை விட, அரைகுறையாக தெரிந்திருப்பதே ஆபத்தானது".

நீட் தேர்வு என்பது பாஜக சுயமாக கண்டுபிடித்து உள்ளே நுழைத்தது அல்ல. இது காங்கிரஸ் காலத்திலேயே திரு.குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதார துறை மந்திரியாக இருந்த பொழுது, இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதே!

நீட் நுழைவு தேர்வு என்பது பாராளுமன்ற மூலம் நிறைவேற்றப்பட்ட சட்டம் அல்ல என்பதால், அறிமுக நிலையிலேயே பல மாநிலங்கள் நீட் நுழைவுத் தேர்வை ஏற்காமல் உச்சநீதிமன்றம் சென்றன. அப்படி உச்சநீதிமன்றம் சென்ற மாநிலங்களில் அப்பொழுது மோடி முதல்வராக இருந்த குஜராத்தும் அடக்கம்.

2013ல் இந்த வழக்குகளை விசாரித்த ஜஸ்டிஸ் அல்தாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நபர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த நீட் தேர்வுக்கு தடை விதித்தது. அம்மூன்று கொண்ட அமர்வில் இருந்த மற்ற இரு நீதிபதிகள் ஜஸ்டிஸ் விக்ரம்ஜித் சென் & ஜஸ்டிஸ் அனில் தவே.

மூவரில் ஜஸ்டிஸ் அல்தாமஸ் & ஜஸ்டிஸ் விக்ரம்ஜித் நீட் தேர்வை ஏற்க மறுக்க, ஜஸ்டிஸ் அனில் தவே மட்டுமே நீட்டை ஆதரித்தார். 2:1 கணக்கின் அடிப்படையில் அப்பொழுது நீட் அபாயம் நீங்கியது.

நீட் தேர்வை நிராகரிப்பதற்கான காரணங்களாக ஜஸ்டிஸ் அல்தாமஸ் & ஜஸ்டிஸ் விக்ரம்ஜித் தெரிவித்தவை:

1) இந்திய மருத்துவ கவுன்சில் என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு மருத்துவ பாடத்திட்டங்கள் வடிவமைக்கவும், மருத்துவ படிப்பிற்கான கல்லூரிகளை ஆய்வு செய்து அனுமதிப்பதற்கும் உரிமை பெற்ற அமைப்பு மட்டுமே. மருத்துவ கல்லூரியில் நுழையும் மாணவர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் உரிமை அதற்கு கிடையாது.

2) இந்திய மருத்துவ கவுன்சிலோ அல்லது வேறு எந்த மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமோ, எந்தவொரு மாநிலத்தில் நடக்கும் கல்லூரி நுழைவையும் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றதல்ல. ஏனெனில் ஒவ்வொரு மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளும் அந்தந்த மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுபவை. அதற்கான உரிமையை இந்திய அரசியல் சாசன சட்டம் எல்லா மாநிலங்களுக்கும் தந்திருக்கிறது. அப்படி தலையிட நினைப்பது ஒரு மாநிலத்தின் கல்வி உரிமையிலும் தலையிடுவதாகும். அது இந்திய கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும்.

3) வழக்கின் போது இந்திய மருத்துவ கவுன்சிலை நோக்கி நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும்,

(அ) இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தனித்த பாடத்திட்டங்களை கொண்டிருக்கும் போது, ஒரே பொதுத்தேர்வு முறை எப்படி பொருந்தும்? இந்தியா முழுமைக்குமான பள்ளி பாடத்திட்டமே மருத்துவ படிப்பிற்கானதற்காக மட்டுமே என்று இந்திய மருத்துவ கவுன்சில் மாற்றி அமைக்கப்போகிறதா?

இ.ம.க தந்த பதில்: இல்லை

(ஆ) இந்தியா முழுமைக்குமான ஒரு நுழைவுத்தேர்வை நடத்தும் நிர்வாக கட்டமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில் வைத்திருக்கிறதா?

இ.ம.க தந்த பதில்: எங்களிடம் இல்லை. ஆனால் நாங்கள் சிபிஸ்சி நிர்வாகத்தை வைத்து நடத்திக்கொள்வோம்.

(இ) இந்த நாட்டில் ICSE போன்று பல்வேறு பாடத்திட்டங்களை நிர்வகிக்கும் மத்திய அரசு நிறுவனங்கள் இருக்கும் போது, இ.ம.க ஏன் சிபிஸ்சி நிர்வாகத்தை வைத்து நுழைவுத்தேர்வு நடத்திக்கொள்வோம் என்று சொல்கிறது?
இ.ம.க தந்த பதில்: பதிலில்லை

~~~~~~~~
இப்படியாக 2013ல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பக்கம் நீட்டுக்கு எதிர்ப்பாக இருக்க, காங்கிரஸ் அரசு காலத்தில் இயங்கிய 92வது பாராளுமன்ற நிலைக்குழுவும் இந்திய முழுமைக்குமான ஒரே பொதுத்தேர்வு என்பதில் கலந்துக்கொள்வதா வேண்டாமா என்பதை அந்தந்த மாநிலங்கள் சுயமாக முடிவு செய்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்தது. இந்த இரு காரணங்களாலும் ஏற்கனவே தேர்தல் கால நெருக்கடியில் இருந்த காங்கிரஸ் அரசு ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை கைவிட்டுவிட்டது.

2014ல் பாஜக பதவிக்கு வருகிறது. மீண்டும் நீட் நுழைவு தேர்வு விவகாரத்தை எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்தை அணுகி ஒரு மாரு சீராய்வு மனு போடுகிறது.

இதில் ஒரு நகைமுரண் என்ன தெரியுமா?

2013ல் நீட்டை நிராகரித்த மூன்று பேர் அமர்வில் ஆதரித்தவரான ஒரே ஒருவரான ஜஸ்டிஸ் அனில் தவே தலைமையிலான புதிய அமர்வுக்கு வழக்கு வருகிறது.

பாரப்பட்சமற்ற நீதி பரிபாலனத்தை உறுதிப்படுத்த, உச்சநீதிமன்ற மரபுகளின் படி முதல் அமர்வில் பணியாற்றிய நீதிபதிகள் அவர்கள் முன்னர் தீர்ப்பு வழங்கிய வழக்கின் மறுசீராய்வு மனு விசாரணைக்கு நீதிபதிகளாக நியமிக்கப்படமாட்டார்கள். ஆனால் இவ்வழக்கில் அந்த வினோதம் நடந்து, நீட்டை ஆதரித்த அனில் தவே அவர்களின் அமர்விற்கே மறுசீராய்வு மனுவும் விசாரணைக்கு வருகிறது.

இவ்வழக்கை மறுசீராய்வுக்கு உட்படுத்தும் முன்னர் 2014ல் ஆட்சியை பிடித்த பாஜக, மருத்துவக்கல்விக்கான ஒட்டுமொத்த நிர்வாக உரிமையை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அளித்து பாராளுமன்றத்தில் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றுகிறது.

கல்வி மாநிலரசு & மத்தியரசக்கு உட்பட்ட பொதுப்பட்டியலில் உள்ளதால், மாநிலங்கள் அவைக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல், மக்களவையில் தனக்கு உள்ள அதீத பெரும்பான்மையை பயன்படுத்தி இச்சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டது.

திராவிட கட்சிகள் மட்டும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மருத்துவம் படித்த மருத்துவர்களும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

அதற்கான காரணம்,

1) இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற கட்டமைப்பு இருக்கிறது.

2) மருத்துவம் தொடர்பான உயர்ப்பட்ட மேற்படிப்புகள் படிக்க இந்தியாவிலேயே அதிகமான இடங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது, மொத்தம் 250 இடங்கள்.
மத்திய பிரதேசத்திலோ உத்திர பிரதேசத்திலோ 2 இடங்கள் மட்டுமே உள்ளன.

இந்திய போன்ற பல மாநிலங்கள் கொண்ட பெரிய நாட்டில், ஒட்டுமொத்த மாநிலங்களிலும் கொண்டுள்ள உயர்ப்பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்களின் கூட்டுத்தொகையை விட, ஒற்றை மாநிலமான தமிழ்நாடு வைத்திருக்கும் 250 என்ற எண்ணிக்கை பெரிது என்றால், அந்த உயர்ப்பட்ட மேற்படிப்பிற்கான உரிமையை பெறுவது எவ்வளவு கடினம் என்று புரிகிறது அல்லவா?

ஒரு உயர்ப்பட்ட மேற்படிப்பு மருத்துவரை உருவாக்க, அதே உயர்ப்பட்ட மேற்படிப்பை படித்து முடித்த மூன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேவை என்பது தான் இதில் உள்ள கடினமான தடைக்கல். மேலும் உயர்ப்பட்ட மேற்படிப்பு என்பது மருத்துவத்துறையில் (PhD) ஆராய்ச்சி படிப்பிற்கே இணையானது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை மருத்துவ உயர்கல்வியில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50% நிர்வாகரீதியிலான இடஒதுக்கீடு அமலில் இருந்தது. அப்படியான இடஒதுக்கீடு பெற்று மருத்துவ மேல் படிப்பு படிக்கும் MBBS மருத்துவர்கள், அந்த இடஒதுக்கீட்டை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை போடுவார்கள். அந்த ஒப்பந்தத்தின் படி நிர்வாக இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ உயர்படிப்பு படித்த மருத்துவர்கள் தங்கள் பணி ஓய்வுக்காலம் வரை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதாகவும், அப்படி பணியாற்ற முடியாமல் இடையில் வெளியேறினால் அவர்கள் தமிழக அரசிற்கு ரூ.35 லட்சம் இழப்பீடு அளிக்க ஒப்புக்கொள்வார்கள்.

இப்படியான தன் திட்டத்தின் மூலம் மருத்துவர்களை உயர் படிப்பு படிக்க வைத்து தான் தமிழ்நாடு அரசு தன் சுகாதாரத்துறையை சிறப்பாக கட்டமைத்து, ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் ஆரமப சுகாதார நிலையமும் ஒரு உயர்ப்பட்ட மேற்படிப்பு படித்து முடித்த மருத்துவரை கொண்டிருக்குமாறு வடிவமைத்திருக்கிறது. அப்படி வடிவமைத்த காரணத்தால் தான் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாடு எப்படிப்பட்ட ஒரு உயர்ந்த, உன்னத மருத்துவ கட்டைமைப்பை கொண்டிருக்கிறது என்று புரிகிறது அல்லவா?

இந்நிலையில் 2014ல் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மருத்துவ படிப்பை நிர்வகிக்கும் உரிமையை பெற்ற இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு புதிய ஒழுங்குமுறையை கொண்டுவந்து, தமிழ்நாட்டில் அதுகாறும் நிலவி வந்த நிர்வாகரீதியிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, மருத்துவக்கல்விக்கான உயர்ப்பட்ட மேற்படிப்பு படிக்க எந்த மாநிலத்தை சேர்ந்தவரானாலும் தமிழ்நாட்டுக்கு வந்து படித்துவிட்டு தங்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றுவிடலாம் என்றும், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணி ஓய்வுக்காலம் வரை பணியாற்ற தேவையில்லை என்றும் மாற்றிவிட்டது.
அதாவது தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு உருவாக்கி வைத்துள்ள மருத்துவ கல்லூரி கட்டமைப்பில் வெளிமாநில மாணவர்கள் வந்து சொகுசாக படித்துவிட்டு தங்கள் சொந்த மாநிலத்திற்கு ஓடிவிடலாம்.
இம்மாநிலத்தின் ஒவ்வொரு மருத்துவரும், கல்வியாளரும் நீட்டை எதிர்ப்பதற்கான காரணம் இது தான்,

"நாளை தீடிரென இந்திய மருத்துவ கவுன்சில் இளங்கலை மருத்துவப் படிப்பான MBBS படிப்பிற்கு கூட அந்தந்த மாநில மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநில மாணவர்கள் தான் படிக்க வேண்டும் துன்று இருப்பதை மாற்றி எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் நீட் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு உருவாக்கி வைத்துள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்கலாம் என்று மாற்றிவிட்டால் அது தமிழகத்திற்கு பெரும் கேடு விளைவிப்பதாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது."
தமிழகத்தில் நீட்டுக்கு பலத்த எதிர்ப்பு இருப்பதற்கான காரணமே, தமிழ்நாடு அரசியல்வாதிகள் பலர் தனியார் மருத்துவக் கல்லூரி வைத்திருப்பவர்களாக இருப்பதே என்றும் இன்னும் கூட பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டுள்ளனர். அது உண்மையல்ல.

உண்மை என்ன தெரியுமா?

தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய, மோடியின் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட மசோதா தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல்வாதியின் தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தாது.

நீட் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதில் உறுதியாக இருங்கள்! தமிழ்நாட்டை விட்டு நீட்டை ஒழிக்காமல் விடுவதில்லை என்று தீர்க்கமாக முடிவெடுங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக