திங்கள், 3 டிசம்பர், 2018

தமிழகம் தனிநாடு மிகமுன்னேறும் அமர்த்தியா சென்

aathi1956 aathi1956@gmail.com

மே 14, திங்., பிற்பகல் 4:02
பெறுநர்: நான்
இந்தி பேசாத தென் மாநிலங்களின் தயவால், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தயவால் உலக ஏழ்மை குறியீட்டு தரவரிசையில் (global poverty rank) இந்தியா முன்னேறியிருக்கிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் பட்டியலில் 56 ஆம் ரேங்க்கில் இருந்த இந்திய ஒன்றியம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மிக சிறப்பான செயல்பாட்டால் 26 ஆம்  இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

இவ்வளவு இயற்கை வள சுரண்டல்களுக்கு பின்னேயும், ஆரிய-திராவிட கூட்டு கொள்ளைக்கு பின்னரும், இந்துத்துவ வல்லாதிக்கவாதிகள் நமது அரசியலையும், சட்ட சபையையும் முடக்கிய பின்னரும்...

தமிழ்நாடு ஒட்டு மொத்த தேசத்தையும் தனி ஒரு மாநிலமாக நின்று இழுத்து வந்திருக்கிறது (செய்தி கீழே).

இதைத்தான் பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற நிபுணர் அமர்த்தியா சென் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி மேற்கத்திய நாடுகளுக்கு இணையானது.

தமிழ்நாடு தனிநாடாக இருக்கும் பட்சத்தில் முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் வல்லமை கொண்டது என தனது 'An Uncertain Glory: India and its Contradictions' என்ற நூலில் தெரிவித்துள்ளார்.

தனி நாடாக சென்று என்ன செய்வோம்? இவ்ளோ பெரிய இந்தியாவில் இருந்தே இப்படி இருக்கிறோம், பிரிந்தால் என்ன ஆகும்? ஆற்றில் நீர் வருமா? சோறு கிடைக்குமா என விதண்டாவாதம் பேசும் அறிவுக்குருடர்களுக்கு.

நமது இன்றைய அத்துணை பொருளாதார துயருக்கும் காரணம் நாம் (மட்டுமே) அல்லர். நமது உழைப்பை சுரண்டி திண்பதோடு, கைமாறாக  மீண்டும் மீண்டும் நமக்கும் நமது மண்ணுக்கும் படு பாதக செயல்களை செய்து வரும் இந்திய ஒன்றியமே..

#TNExit

ஹிந்தியா தனித்தமிழ்நாடு பொருளாதாரம் சுரண்டல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக