திங்கள், 3 டிசம்பர், 2018

போராட்டச் செய்திகள் வாட்சப் எனது

aathi1956 aathi1956@gmail.com

மே 23, புத., பிற்பகல் 8:01
பெறுநர்: நான்
[19:37] ஆதி பேரொளி: தூத்துக்குடி போராட்டச் செய்திகள்

* தூத்துக்குடி படுகொலை நிகழ்வில் பலி 13 ஆக உயர்வு

*இறந்தவரில் இருவர் மாணவர், மூவர் பெண்கள்

* 'நடிக்காதேடா எந்திரிடா' என கடைசியாக இறந்த மாணவர் கார்த்திக் சடலத்தை மிரட்டிய போலீசார்

* ஏற்கனவே திட்டமிட்டு வரவழைக்கப்பட்ட கமாண்டோ படை எச்சரிக்கை செய்யாமல் நேரடியாக களமிறங்கி குறிபார்த்து முக்கியமானோரைச் சுட்டனர்.
வீடியோ ஆதாரம் புதியதலைமுறை தொலைக்காட்சியில் வெளியானது.

* ஆலையை மூடாமல் சடலத்தை வாங்காமாட்டோம் என இறந்தோரின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம்

* தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்
தற்போது (மாலை 7மணி) அண்ணாநகர் பகுதியில் தடியடி நடந்துவருகிறது

* நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இணையம் துண்டிக்கப்பட்டது

* அப்பகுதிகளில் இணையம் பயன்படுத்த ultrasurf (beta) எனும் app ஐ தரவிறக்கிக் கொள்ளலாம்

* துணைராணுவம் தமிழகம் நோக்கி கிளம்பிவிட்டதாகத் தகவல்

* அனில் அகர்வால் வீட்டின் முன் லண்டன் தமிழர்கள் ஆர்பபாட்டம்

* அனில் அகர்வால் மகனை லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள் முன்று பேர் பிடித்து நன்கு அடித்து உதைத்ததாக தகவல்

* ஆலை விரிவாக்கம் நிறுத்தம்.
நீதிமன்ற உத்ததரவு வெறும் கண்துடைப்பு என குற்றச்சாட்டு.
ஆலையை மூடுவதே தீர்வு என மக்கள் முடிவு

* திருநெல்வேலி தாழையூத்தில் செல்போன் டவர் மீது ஏறி தனிநபர் போராட்டம்.
தூத்துக்குடி படுகொலைக்கு எதிரான கோசம்

* சீமான் வேல்முருகன் ஆகியோர் தூத்துக்குடியில் நுழையத் தடை


ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
---------------

aathi1956 aathi1956@gmail.com

மே 23, புத., பிற்பகல் 8:03
பெறுநர்: நான்

[22/5, 14:22] ஆதி பேரொளி: தூத்துக்குடி போராட்டச் செய்திகள்

தூத்துக்குடியில் இன்று நடந்த போரில் மார்பில் குண்டு வாங்கி வீழ்ந்த முதல் மாவீரர் உசிலம்பட்டி  ஜெயராமன்

பலி எண்ணிக்கை இதுவரை 4.

வெறிபிடித்த ஏவல்துறையின் வன்முறை அராஜகம் தொடர்கிறது.

பொதுமக்களுக்கு பலத்த சேதம்.

தூத்துக்குடி நகரம் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில்.
--------

போராட்டச் செய்திகள் வாட்சப் பரப்பியது எனது தூத்துக்குடி ஸ்டெர்லைட்


aathi1956 aathi1956@gmail.com

பெறுநர்: நான்

[24/5, 14:55] ஆதி பேரொளி: போராட்டச் செய்திகள்

22.05.2018 மதியம் ஒரு மணி

* தூத்துக்குடியில் வீடுவீடாக சென்று இளைஞர்களைத் தூக்கிச் செல்கிறது போலீஸ்
தடுத்தவர்களை பெண்கள், முதியொர், குழந்தைகள் எனக்கூடப் பாராமல் சரமாரி அடி.

* தூத்துக்குடி மருத்துவமனையில் 26 சடலங்கள்.
இதுவரை 200 பேர் வரை மாயம்.

* இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட பலி எண்ணிக்கை 14.

* கலெக்டர் அலுவலகத்திற்குள் வருமாறு கையசைத்து காவல்துறையே.
அதை நம்பி உள்ளே போன போராட்டக்குழு தலைவரை உடனடியாக சுட்டுக்கொன்றுவிட்டு மக்களை நோக்கி சுட்டனர்.
இவ்வாறே மனிதவேட்டை தொடங்கியது.

* 1947 க்கு பிறகு துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உயிரிழந்த்து இதுவே முதன்முறை.

* 3 பெண்கள், 3 மாணவர்கள், ஒரு தமிழகவாழ் ஈழத்தமிழர் என 14 மரணங்கள் தமிழக வரலாற்றில் அழிக்கமுடியாத சம்பவம்

* சடலங்களை எடுத்துச் செல்லுமாறு கூறி போலீசார் கொலை மிரட்டல்.
உறவினர்கள் பலர் கைது மற்றும் சிறைவைப்பில் சித்திரவதை.

* ஸ்டெர்லைட்டுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பெரிய பெரிய ஜெனரேட்டர்களில் மின்னுற்பத்தி செய்து ஸ்டெர்லைட் தொடர்ந்து எப்போதும் போல் இயங்குகிறது.
ஏற்கனவே தேவையான எரிபொருட்களை வைத்துள்ளதாக தகவல்.

* மருத்துவமனைக்கு வந்த கமலகாசனை வெளியேறும்படி பெண்கள் சூழ்ந்து நின்று கூச்சல்.
உடன்வந்தவர்கள் சமாதானம் செய்தபின் அவசர்அவசரமாக பார்த்துவிட்டு கமல் வெளியேறினார்.

* ஸ்டாலின் வந்த கார் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது.
திமுக குண்டர்கள் உதவியால் அருகிலுள்ள ஒருவருக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினார்.
ஆலைக்கு அனுமதி கொடுத்ததே திமுக தான் என்று மக்கள் குமுறல்.

* இரண்டு காவலர்களை வெட்டிக் கொன்றதாக வதந்தி.
வெளிவந்த படங்கள் போலியான கட்டுக்களுடன் போலீசாரே எடுத்து பரப்பியது.
எந்த காவலரும் காயமடையவில்லை என தூத்துக்குடி போராட்ட முகநூல் பக்கங்கள் அறிவிப்பு.

* தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இணையமும் அலைபேசியும் இயங்கவில்லை.
என்ன நடக்கிறது என்று அறியமுடியாதபடி தகவல்தொடர்பு துண்டிப்பு.
பத்திரிக்கை டிவி என யாருமே உள்ளே நுழையவில்லை.

* அனில் அகர்வால் உருவ பொம்மையை எரித்த நாம்தமிழர் நிர்வாகி அரி அகிலன் மீது 11 வழக்குகள்

* நேற்று மாலை மருத்துவமனை சென்று ஆறுதல் கூறினார் சீமான்.
தடையை மீறி நுழைந்ததற்காக சீமான் மீது மேலும் ஒரு வழக்கு.

* சந்தீப் நந்தூரி ( இவரும் தெலுங்கர்) தூத்துக்குடி கலெக்டராக நியமனம்.
ஏற்கனவே கந்து வட்டி தீக்குளிப்புக்கு காரணமானவர்.
144 தடை போட்டு ராம ரதயாத்திரை நடத்தவிட்டவர்.
செல்லூர் ராஜுவுடன் தெர்மாகோல் விட்டவர்.

* நான் வானத்தை நோக்கியே சுட்டேன். பிறர் சதியில் வீழ்ந்துவிட்டேன்.
- என துப்பாக்கியுடன் வீடியோவில் வந்தவர் கதறல்.
அவரது முகநூலையும் பிள்ளைகள் படத்தையும் சமூகவலைகளில் வெளியிட்டதால் அச்சம் என்று பதறல்

* கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை நோக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டனர்.
குமரியிலும் இணையம் துண்டிப்பு

* உலகத் தமிழர்கள் இணைய பரப்புரையால் வேதாந்தா பங்குகள் தொடர்ந்து சரிகின்றன.

* கிரிஜா வைத்தியநாதன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பவுள்ளதாகத் தகவல்.

* கிளிநொச்சியில் ஈழத்தமிழர்கள் திரண்டு தூத்துக்குடிக்கு ஆதரவாக அடையாளப் போராட்டம்.

* சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறி திடீர் சாலைமறியல் போராட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக