திங்கள், 3 டிசம்பர், 2018

ஸ்டெர்லைட் ஏன் மூடப்பட வேண்டும் ஆர்சனிக் கழிவு புற்றுநோய் மண்ணழிப்பு

aathi1956 aathi1956@gmail.com

மே 30, புத., முற்பகல் 9:29
பெறுநர்: நான்
Technically explained about what’s happening inside the #Sterlite
நன்றி Mohamed Ashik

#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..?

நமக்கு வாய்த்த தகுதியற்ற அறிவுகெட்ட முட்டாள்கள் அல்லது எல்லாம் தெரிஞ்ச மக்கள் விரோத கொடூர கயவர்களான பணவெறி அரசியல்வாதிகள்... 'ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்தவன் நீதான்... அடிக்கல் நாட்டியவள் நீதான்... திறந்து வச்சவன் நீதான்... ' என்றெல்லாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். இதனால் ஒரு பயனும் மக்களுக்கு இல்லை.

ஆகவே, பிரச்சனையின் ஆணிவேர் பற்றி பேசுவோம். ஸ்டெர்லைட்டில் இரண்டே இரண்டு விஷயங்கள் இல்லை என்றால் மகாராஷ்டிரா மக்கள் ஆதரவே அன்று ஸ்டெர்லைட்டுக்கு கிடைத்திருக்கும். ஆனால்... அந்த 2 விஷயத்தில்தான்... அனைவரையும் ஸ்டெர்லைட் ஏமாற்றியதால்... எதிர்ப்பு வலுவடைகிறது. அவை என்ன..?

அந்த 2 முக்கிய அம்சங்கள்:
1-சல்ஃபர்-டை-ஆக்ஸைடு (SO2)
2-அர்செனிக் (As)

SO2 ஓர் ஆபத்தான நச்சுவாயு. காற்றில் 10 லட்சத்தில் 5 பங்குக்கு மேலே என்ற அளவில் இவ்வாயு காற்றில் கலந்து இருந்தால் அக்காற்று மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்த அளவில் இவ்வாயு மூச்சுத்திணறல், நுரையீரல் நோய், குமட்டல், வாந்தி, தோல் எரிச்சல், கண் எரிச்சல் ஆகியனவும் அதிகளவில் எனில் இறப்புக்கும் வழிவகுக்கும்.

As அதிபயங்கரமான நச்சுத்தனிமம். நிலம் & நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு காரணம். 10 கோடியில் 1 பங்குக்கு மேலே என்ற அளவில் இத்தனிமம் நீரில் / நிலத்தில் கலந்து இருந்தால் அந்த நீரும் நிலமும் மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்நிலையில் மாசுபட்ட நிலத்தடி நீரை உட்கொண்டால் சிறுநீரக மண்டலம் உட்பட பல இடங்களில் கேன்சர் வரும். அந்த நிலத்தில் வளரும் தாவங்களிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அந்த தாவரங்களை உட்கொள்ளும் போதும் செரிமான மண்டலத்தில் கேன்சர் வரும்.

ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை உற்பத்தி பொருள் காப்பர்(Cu). தாமிரம்.

காப்பர் உற்பத்தி செய்யும்போது, அதன் தாதுப்பொருளில் உள்ள கந்தகம் எரிந்து நிறைய  நிறையை SO2 கழிவாக வெளியாகிறது. இந்த நச்சுவாயுவை அப்படியே வானில் வெளியாக்கினால் மரணம் என்பதால், காப்பர் ஸ்மல்டர் ஆலைகளில் அவற்றுக்கு எவ்விதத்திலும் பயனற்ற சல்பியூரிக் ஆசிட் (கந்தக அமிலம்) உற்பத்தி பிளாண்ட் ஒன்றை ஓட்டியாக வேண்டும். இதில்... அந்த கந்தக ஆக்ஸைடை (SO2) கேட்டலிஸ்ட் மூலம் SO3 ஆக்கி, HSO3 ஆக்கி, H2SO4 என்ற கந்தக அமிலமாக மாற்றப்படுகிறது.

ஸ்டர்லைட்டில் ஒரு நாளைக்கு சுமார் 3300 டன் என்ற மிதமிஞ்சி உற்பத்தியாகும் இந்த அமிலத்தை அதே அளவுக்கு வாங்குவோர் இல்லாததால்... அதை ஸ்டோர் பண்ணி வைக்க டேங்கில் இடம் இயலாதபோது... அப்படியே வாய்க்காலில் எல்லாம் திறந்து விட முடியாதே. அமிலம் ஆயிற்றே. என்ன செய்யலாம்..?பக்கத்தில், உள்ள ஸ்பிக் கந்தகஅமில உற்பத்தியை நிறுத்த சொல்லிவிட்டு... இலவசமாகவே லாரி டேங்கர்கள் மூலம் கொண்டு போயி தரலாம். (நான் அங்கே பணியாற்றிய வருஷங்களில் அப்படித்தான் டேங்கர்களில் ஆசிட் கொண்டு வந்து தந்தார்கள். எங்கள் சல்பியுரிக் ஆசிட் பிலாண்டை ஷட் டவுன் பண்ணி நிறுத்திட்டு அவங்க ஆசிடை வாங்கி எங்களின்  டேங்குகளில் சேமித்துக்கொண்டோம்.)

சரி, ஸ்பிக்கிலும் இலவசமாக தந்து அவர்களின் டாங்கிகளும் நிரம்பி விட்டது. இனி என்ன செய்ய..?

ம்ம்ம்... இப்படி ஸ்டெர்லைட் கந்தக அமிலம் சேமிப்பு டாங்கிகள் நிரம்பி விட்டால் வேறு வழியின்றி காப்பர் உற்பத்தியை நிறுத்தவோ குறைக்கவோ வேண்டும். ஆனால், காப்பர் டிமான்ட் மார்க்கெட்டில் இருக்கே. செமை இலாபமாச்சே. காப்பர் உற்பத்தியை குறைக்கவே கூடாதே. வேறு என்ன செய்யலாம்..?

நைசா... ராவோடு ராவாய் தம் ஊழியர்களை மட்டும் பிரீதிங் அபாரடஸ் போட்டுக்கொள்ள சொல்லிட்டு, SO2வை வானில் திறந்துவிட்டு வென்ட் பண்ணிடலாம். சல்பியுரிக் அமிலமாக மாற்ற தேவை இல்லை. அப்படியெனில்... மக்கள் சாவார்களே..? லண்டனில் இருக்கும் ஓனருக்கு தூத்துக்குடி மக்கள் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன..?

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், SO2 எமிஷனுக்கு நிர்ணயித்து இருக்கும் அளவு... 'பெர்மனன்ட் எக்ஸ்பொஷர் லிமிட்'(PEL) நிரந்தர தாக்குப்பிடிப்பு அளவு:5ppm. (காற்றில் 10 லட்சத்தில் 5 பங்கு)

இதுவே, ஸ்டெர்லைட் வென்ட் பண்ணினால், 75ppm அளவுக்கு இந்த நச்சுவாயு அடர்த்தி எனில், அங்கே, 1 மணி நேரம் மட்டுமே மக்கள் தாக்குப்பிடித்து இருக்கலாம் என்பதுதான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கும் PEL.

ஆனால்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் SO2 நச்சுவாயு வெளியாகும் அளவுபற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அரசுத்துறை அறிக்கை யாதெனில்...
1000ppmக்கும் மேலே..! 😢

//
The readings of the sulphur di-oxide analyser linked to the PCB’s Care Air Centre at Guindy here suggested that the emission was in the range of 504.5 to 1123.6 ppm (parts per million) during those occasions as against 477.53 ppm prescribed by the Union ministry of environment and forests.

https://timesofindia.indiatimes.com/city/chennai/Sulphur-dioxide-emission-from-Sterlite-high-says-government/articleshow/19470029.cms
//

அப்படி எனில்... ஒரு நிமிஷம் கூட மக்கள் வாழத்தகுதியற்ற ஊர்... தூத்துக்குடி..!

ஆகவே, இந்த ரிப்போர்ட் வந்த 2013ம் ஆண்டே... அந்த ஸ்டெர்லைட்டின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு, ஆலையை நிறுத்தி ஊழியர்களை வெளியேற்றி கேட்டைபூட்டி சீலிட்டு... உரிமையாளரை கோர்ட்டுக்கு இழுத்து பல்லாயிரம் கோடி நஷ்ட ஈடு வாங்கி...உயிர் விட்ட,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தந்திருக்க வேண்டாமா அரசு..?!

சரி, இப்போது ஆர்செனிக் பற்றி பார்ப்போம். அது இதைவிட மாபெரும் கொடுமை..!

SO2 பிரிந்த பிறகு... மீதமுள்ள காப்பர் தாதுவில் ஆர்செனிக் கலந்து இருக்கும். காப்பரை அதிலிருந்து பிரித்து தனியே எடுத்த பின்னர், ஆர்செனிக் என்ற திண்மப்பொருள் சகதி போல (ஸ்லட்ஜ்) ஆக பிரிந்து தனித்துவிடுகிறது. இதை என்ன செய்வது..? நீரிலும் விட முடியாது. நிலத்திலும் விட முடியாது. திண்மம் என்பதால்... சல்பர் டை ஆக்சைடை காற்றில் திறந்து விட்டது போல...  திறந்து விடவும் வாய்ப்பில்லை.

இதை ஸ்டெர்லைட் என்ன செய்ய வேண்டும் எனில்... அதன் ஆலை வளாகத்தின் உள்ளேயே... சூரிய ஒளி, மழை நீர், காற்று ஏதும் படாதவாறு சீலிடப்பட்ட  மிகப்பிரம்மாண்ட  மெடல் டாங்கிகளில்  எவ்வித லீக் ஆவதுக்கும்  வாய்ப்பே இன்றி, நிலமட்டத்தில் இருந்து சற்று உயர்த்தி வைத்து அடிக்கடி யாதொரு கசிவும் இருக்கிறாதா என்று பரிசோதித்து பாதுகாத்து பரிசோதித்து பாதுகாத்து  பரிசோதித்து பாதுகாத்துவைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆனால்... ஸ்டெர்லைட் என்ன பண்ணுகிறது... தெப்பக்குளம் போல கட்டி தேக்கி வைக்கிறது. அதற்கு... 'Cake Pond' என்று பெயரும் இட்டு..!

அடப்பாவிகளா..!

இங்கே மழை பெய்தால் அந்த தெப்பம் நிறைந்து ஆர்செனிக் வழிந்து ஓடுமாம்... எங்கே...? நிலத்தில்தான்..! இப்படித்தான் தூத்துக்குடி நிலத்தடி நீரில் ஆர்செனிக் கலந்துள்ளது.

மழை விட்டபின்னர்... நீர் பூமியில் உறிஞ்சிய பின்னர்... நிலத்தின் மீது எஞ்சி இருக்கும் அந்த ஆர்செனிக் சகதியை எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி எதோ வயல் சகதியை மம்பட்டியால் வெட்டி எடுத்து போடுவது போல ட்ரக்கில் போட்டு தெப்பத்தில் கொண்டு போய் கொட்டுவார்களாம். அந்த ட்ரக் டயரில் ஒட்டிய ஆர்செனிக் கழிவு, ட்ரக் வேலை முடிந்து ஆலையை விட்டு வெளியே போனவுடன்... சக்தி காய்ந்து... தூத்துக்குடி ஊரெங்கும் தூவிச்செல்லும்தானே..? இப்படித்தான் ஆர்செனிக் ஊர் முழுக்க பரவுகிறது. அப்புறம் அதில் வேலை செய்தவர்களின் உடலில் உடையில் செருப்பில் ஒட்டி இருக்கும் ஆர்செனிக் அவர்களின் வீடுகளுக்கும் செல்லும். வீட்டில் உள்ள குழந்தை கையை கீழே வைத்து வாயில் வைத்தால்... முடிந்தது... குழந்தைக்கும் கேன்சர்..!

(மேற்படி தகவல், ஸ்டெர்லைட்டில் வேலை பார்த்துவிட்டு பின்னர் என்னோடு எனது நிறுவனத்தில் பணியாற்ற வந்த தோழர் சொன்னவை)

இதெல்லாம் விட... படத்தில் உள்ள அந்த 30 வருஷ கால பழைய ஆர்செனிக் குளத்தின் அடியில் போடப்பட்ட தளத்தில் இத்தனை வருஷத்தில் எத்தனை எத்தனையோ விரிசல்கள் விட்டு பூமிக்குள்ளும் ஆர்செனிக் சென்று கொண்டு நிலத்தடி நீரில் கலந்து கொண்டே இருக்குமே..!

நிலத்தடி நீரில் இந்த ஆர்சனிக் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா..? 10 கோடியில் ஒரு பங்குக்கு கீழே இருக்க வேண்டும்.(10ppb)
ஆனால்...
நீரி (NEERI-National Environmental Engineering Research Institute) என்ற  நீர்/நிலம் தொடர்பான 
அரசு நிறுவனம், ஸ்டெர்லைட் அமைந்துள்ள தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் எடுத்த பல்வேறு சேம்பிள்
மாதிரிகளில்  ஆர்செனிக் கலப்பு பற்றி அளித்த ஆய்வுச்சோதனை முடிவுகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.
ஆம்... பத்து லட்சத்தில் 100... 200....300 பங்குகள் என்ற அளவில் ஆர்செனிக் உள்ளன..! 

ஆனால்... இந்திய சட்டம் என்ன சொல்கிறது..?

50 க்கும் மேற்பட்ட மில்லிகிராம் / கிலோகிராம் ஆர்செனிக்  கொண்ட மண் வகைகளை இந்திய அபாயகரமான கழிவு விதிகள், 2008 இன் கீழ் அபாயகரமான கழிவுகளாக கருதப்பட வேண்டும் என்கிறது. எனில், அம்மண்ணில் மக்கள் வாழவே கூடாது... அந்த அபாயகரமான கழிவை மிதிக்கவே கூடாது, எனில் அப்புறம் எப்படி அதில் வீடுகட்டி வாழ்வது..!

//
https://www.thenewsminute.com/article/sterlite-here-s-proof-data-how-smelter-likely-cause-water-pollution-79055
//

மேற்படி... சுட்டியில் நீங்கள் நீரி ரிப்போர்ட்டை காணலாம். இந்த நீரி ரிப்போர்ட் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்தவை. அது வழக்காகி இறுதியில் உச்ச நீதி மன்றம் போயி... ஜஸ்ட் லைக் தட் 100 கோடி அபராதம் கட்ட சொல்லிட்டு பிலாண்டை ஓட்டிக்க சொல்லிருச்சு உச்ச நீதி மன்றம்..!

ஆக... அது முடிந்து... 13 வருஷம் ஓடியாச்சு. ஏகப்பட்ட மழை பெய்து ஏகப்பட்ட முறை கேக் பான்ட் நிரம்பி ஓடி... ஆர்செனிக் சகதி ஒட்டிய ட்ரக் ஊரு முழுக்க பலமுறை ஓடி... இப்போதெல்லாம்... ஆர்செனிக் அளவை சோதனை போட்டால்... ஆய்வாளருக்கே கேன்சர் வந்துவிடும்..!

இதன்பிறகும்... அரசியல்வாதிகள் அந்த தனியார் கம்பெனியை இயங்க அனுமதித்தால்... அவனுங்கலாம் மனிதகுலவிரோதிகள்..! இந்நாட்டில் வாழவே யோக்யதை இல்லாதவர்கள்... நம்மை ஆளுகிறார்கள்...! ச்சே... நம்மை விட உலகில் இழிந்தநிலையில் வாழும் மக்கள் வேறு யார் இருக்க முடியும்..?!

மாசு கார்ப்பரேட் தூத்துக்குடி 

ஸ்டெர்லைட் பலமுறை தடை உடைத்து திறந்த வரலாறு

aathi1956 aathi1956@gmail.com

மே 29, செவ்., பிற்பகல் 1:07
பெறுநர்: நான்
Last updated : 18:54 (28/05/2018)
இதுவரை எப்போதெல்லாம் ஸ்டெர்லைட் மூடப்பட்டது? எப்படி மீண்டும் திறக்கப்பட்டது? #Recap
மொ த்தம் 13 உயிர்களைக் காவு வாங்கிய பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டபோதே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து மக்களும் போராட்டத்தில் இறங்கினர். சில கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக 2 வருடங்களாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், மரம் நடுதல் என ஸ்டெர்லைட் மக்களைக் கவரத் தொடங்கியது. மேலும், அப்போது நிகழ்ந்த சாதிச் சண்டை எனப் பல காரணங்களால் போராட்டம் நீர்த்துப் போனது.

1996-ம் ஆண்டு மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டு இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகின. இதனால் அருகில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டன. வழக்கம் போல மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருபடி மேலே போய் ஆலைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

1998 அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நாக்பூரைச் சேர்ந்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்ற `நீரி' ( National Environmental Engineering Research Institute ) அமைப்பு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்தக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ``ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றி உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. சுற்றுப்புறக் கிராமங்களில் நிலத்தடி நீரில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் உடலுக்குப் பெரிய ஆபத்து இருக்கிறது" எனத் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், அந்த அறிக்கையில் உள்ள பிழைகளைத் திருத்திவிட்டோம் என்று சொல்லி உயர் தீமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது, ஸ்டெர்லைட் நிர்வாகம். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ``ஆலை இரண்டு மாதங்கள் இயங்கட்டும். அதன் பின்னர் `நீரி' அமைப்பு ஸ்டெர்லைட்டில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தீர்ப்பளிக்க, மீண்டும் திறக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை.

முதல் அறிக்கையில் காட்டமாகப் பதிவு செய்திருந்த நீரி அமைப்பு, இரண்டாவது ஆய்வின் அறிக்கையில் நீர்த்துப்போன தகவல்களைத் தந்தது. மாறிப்போய் இருந்தது. இதனால் தொடர்ந்து இயங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது வேதாந்தா நிறுவனத்துக்கு உற்சாகத்தையும், உள்ளூர் மக்களுக்கு வேதனையையும் கொடுத்தது. இங்குதான் தனது முதல் தடையை உடைத்து மீண்டும் இயங்கியது ஆலை.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 அதில் 2010 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்றதும் ஆலை நிர்வாகம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் `உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கும்படியாக இல்லை. நூறுகோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து மீண்டும் ஆலையை இயக்கலாம்" எனத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி வைகோ சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், 2013 ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சீராய்வு செய்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். 2012 செப்டம்பர் 28-ல் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில் 2013-ம் ஆண்டு நடந்த பெரும் விபத்து காரணமாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், தமிழக அரசின் சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதால் ஆலையைத் திறக்க முடியவில்லை. அதற்காகத் தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கை தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசின் சார்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டாலும், அவ்வழக்கை டெல்லி பசுமைத் தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றியது தென்னிந்திய தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். வழக்கம்போல, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையைத் திறக்க டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

 2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

20 ஆண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது, ஸ்டெர்லைட் நிர்வாகம். 

இதை எதிர்க்கும் வகையில் 22.05.2018-ம் தேதியன்று குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கி, ஸ்டெர்லைட்டை மூடிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பேர் தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர் போராடிய மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

 இந்நிலையில் சென்னை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் `ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்குத் தடை' விதித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர், அனில் அகர்வால் `ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்போம்' என்று சொல்லியிருக்கிறார். 

இவ்வளவு நடந்த பின்னர், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விடமாட்டோம் என உறுதி காட்டுகிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர். ஆனால், இப்போது தமிழக அரசு அரசாணை மூலமாகச் சொல்லியிருக்கும் ஸ்டெர்லைட் மூடலை நிச்சயமாக அந்நிறுவனம் உடைக்க முயலும்; வரலாறும் அதைத்தான் சொல்கிறது.

வழக்கு சட்டம் நீதிமன்றம் தீர்ப்பு கார்ப்பரேட் வேதாந்தா 

காவல்துறை துப்பாக்கிச்சூடு உத்தரவு எப்படி வரும் சட்டம் நடைமுறை


aathi1956 aathi1956@gmail.com

மே 29, செவ்., பிற்பகல் 12:20
பெறுநர்: நான்
தினேஷ்குமார் அசோகன்
காவல்துறையிலிருக்கிற 16 பிரிவுகளில் "செயல்பாடு மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை" (operations & tamilnadu commando force).... "தமிழ்நாடு சிறப்புப்படை" (tamilnadu special police force) இரண்டும் ஒவ்வொரு காவல் மாவட்டத்துலயும் குறைவான ஆட்கள் தான் நியமிக்கப்பட்டிருப்பாங்க...
"பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்தல்.... பொதுச்சொத்துக
்கு சேதம் விளைவித்தல்...க
ட்டுப்பாடற்ற முறையில் கூடுதல்"...
இதுபோன்ற சட்டம் & ஒழுங்கு சிக்கல்களுக்கு எல்லாம் இவங்க உள்ளயே வரமாட்டாங்க...
இதெல்லாம் அத்துமீறி நிலைமை கட்டுக்குள்ள இல்லை என்கிற நிலைமையில தான் அந்த வட்டார எஸ்.பி நிலைமையை விளக்கி மேலதிக உதவி தேவைனு டிஎஸ்பி க்கு முறையிடுவாரு...
அதே நேரத்துல அந்த குறிப்பிட்ட பகுதி "பதற்றமான பகுதி"யா அறிவிக்கப்படணும்...
டிஎஸ்பி மூலமா மாநில தலைமைச்செயலாளர்க்கு தகவல் போயி முதல்வரோட ஆலோசிச்சு அதுக்கப்புறம் தான் கலெக்டர்கிட்ட சுடுவதற்கான ஆணை வரும்...!!
கலெக்டர் தான் சுடுவதற்கான ஆணையை செயல்படுத்த கடைசிகட்ட அதிகாரம் உள்ளவர்...அவரும் ஆணை வழங்கிட்டார்னா அதுக்குப்பிறகு தான் காவல்துறை களமிறங்கணும்...!
முதலில் நிலைமையை மக்களிடம் விளக்கிச்சொல்லி இது "சட்டவிரோதமான கூட்டம்"ங்கிறத வட்டாட்சியர் தௌிவுபடுத்தணும்...
அப்பவும் கலையலன்னா லேசான தடியடி....அதுக்கும் கலையலன்னா கண்ணீர் புகை குண்டு...!!
அதுக்கும் கலையாம காவல்துறைக்கு சேதம் விளைவிச்சா மட்டுமே தான் கமாண்டோ படைக்கும் , சிறப்புக்காவல் படைக்கும் சுடுவதற்கான அதிகாரம் செல்லுபடியாகும்....
"போல்ட் ஆக்சன் ரைபிள்"களையோ "போர் பம்ப் ஆக்சன் துப்பாக்கிகளையே
ா" பயன்படுத்தலாம்....எஸ்எல்ஆர் இன்சாஸ் வகை ஆயுதங்களை பயன்படுத்த தனி அறிவிப்பாணை டிஎஸ்பி ஆல் வழங்கப்படணும்...
இதுதான் இந்தியாவில் காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்த பொதுவான நடைமுறை...!!
தமிழ்நாட்டுல மட்டும்தான் துணை வட்டாட்சியரே சுட்டுத்தள்ளிட முடியும்...!!
2 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், இராமநாதன் இராமநாதன் மற்றும் 17 பேர் வேள் நாகன்
இந்திய அரசியலமைப்பின் 13(1) சரத்தானது ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள் அவை அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு முரனாக இருப்பின்கூட அத்தகைய சட்டத்திலுள்ள அம்சங்கள் செல்லுபடி அற்றதாகும் என.தெளிவாக விதந்துரைக்கின்றது
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
வேள் நாகன்
அதாவது அடிப்படை உரிமைகள் தொடர்பாக சட்டவிதிகளில் இல்லாத உரிமைகளையும் உரிமயாக ஏற்றுக்கொள்கிறது ஒரு சனநாயக வழியில் போராாடுவதற்கான சகல வழிமுறைகளயும் அது ஏற்றுக்கொள்கிறது
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை

அனில் அகர்வால் தூத்துக்குடி தவிர ஏற்காடு கொல்லிமலை தாது வெட்டி மலை அழிப்பு tneb இவனிடம் வாங்குகிறது மின்சாரம்

aathi1956 aathi1956@gmail.com

மே 29, செவ்., பிற்பகல் 12:09
பெறுநர்: நான்
Arul Raja Pillai, Mathi Vanan மற்றும் 38 பேருடன் இருக்கிறார்.
நாம என்னமோ அந்த சொட்ட தலையன் அனில் அகர்வால் தூத்துக்குடில தான் குத்தவச்சிருக்கான் தொரத்தனும்ன்னு கெளப்புனா அவன் கிளை பரப்பி வேர் பரப்பி நங்கூரம் போட்டு இங்க குத்த வச்சிருக்கான்னு இப்பதான் தெரியுது.
மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி (MALCO) என்ற பேர்ல வேதாந்தா நிறுவனம் 1973ல ஏற்காடு மலைல அலுமினிய தாது (Bauxite) வெட்டி எடுக்க சுரங்கம் ஆரம்பிச்சிருக்கான். அதனால என்னங்குறீங்களா பாக்சைட் பாறைகள் நீரை வெகுகாலத்திற்கு சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாம். வெயில் காலத்திலும் அதிலிருந்து நீர சுரந்து வருமாம். அத வெட்டி எடுத்ததால மலையும் அதன் சுற்றியுள்ள நிலங்கள் அனைத்திலும் நீர் ஆதாரம் வெகுவா குறைந்து போயிடுச்சு. மலைகள் ஆழிவதோடு அங்கு வாழும் பழங்குடியினர் தம் வாழ்வாதார வனத்தை இழந்ததால கடந்த
# 2011முதல் போராடி வருகின்றனர். நமக்கு அவுங்கள பத்தியெல்லாம் என்ன அக்கறை இல்ல.
ஏற்காடோட நிக்கல அவன் சுரங்கம் கொல்லிமலை கொடைக்கானல் வரை நீளுது. இவன் மட்டும்னு நெனைக்காதீங்க திருவண்ணாமல பக்கம் கவுத்திமலை வேடியப்பன் மலைல இரும்புத்தாது வெட்டியெடுக்க ஜிண்ட்டால் குத்தவச்சிருக்கான். நாம அவ்ளோதான்.
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) யாரோட முதன்மை வாடிக்கையார் தெரியுமா மேட்டூர்ல இருக்குற அனல்மின் நிலையம் (Malco Energy Limited - MEL) இவனுது தான் என்பது கூடுதல் தகவல்.
# SterliteKillings # Vedanta #Thoothukudi # MALCO
# Yercaud # KolliHills # Kodaikanal # MEL

கார்ப்பரேட் வேதாந்தா ஸ்டெர்லைட் தூத்துக்குடி வளங்கள் சுரண்டல் மண்ணழிப்பு 

ஸ்டெர்லைட் மாசு பற்றி நூல் பூவுலகின் நண்பர்கள்


aathi1956 aathi1956@gmail.com

மே 29, செவ்., முற்பகல் 9:53
பெறுநர்: நான்
ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை 
நூல் மின்னூல் PDF புத்தகம் 
ஸ்டெர்லைட் தூத்துக்குடி மாசு கார்ப்பரேட்
பி.மி. தமிழ்மாந்தன்
கப்பிகுளம் ஜெ. பிரபாகர்
வெ. கஜேந்திரன்

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை (மின்னூல் பக்கங்கள்)

http://vaettoli.blogspot.com/2018/06/blog-post.html

ஸ்டெர்லைட் மூட அரசாணை போதாது பல்வேறு துறை ஒப்புதல்


aathi1956 aathi1956@gmail.com

மே 28, திங்., பிற்பகல் 10:11
பெறுநர்: நான்
Ranga Rasu Ra
ஒரே நாளில் மூடி விட்டதாய் யாரை ஏமாற்றுகிறீர்..? முற்று முழுதாய் மூட ஆறு மாதம் ஆகும்.. ஆனால் ஆலை இயங்காமல் இருக்கச் செய்யலாம்!
ஆலையை மூட வேண்டுமெனில் கீழ்க்காணும் அனைத்து ஒப்புதல் ஆவணங்களும் தேவை.....
Inspector & Director of factories
TNPCB(Tamilnadu pollution control board)
CPCB (Central pollution control board)
GT (Green tribunal)
Inspector &Director -Hygiene
Explosive controls - Nagpur
SIPCOT project Director
TNEB (TANGETCO)
District Revenue commissioner
District collector
District police
District MLA
TN Minister of Industry
இன்னும் உள்ளது.
எனினும், இதில் மிக முக்கியமானது TNPCB ஒரு அறிக்கையை TNEB க்கு தக்க காரணங்களுடன் கொடுக்க வேண்டும். அதனுடனேயே மேற்சொன்ன எல்லா துறைகளுக்கும் நகலாக(Cc -Copy to communicate) அனுப்படவேண்டும்.
பின்பு அந்த தொழிற்சாலையின் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்ட
ு TNEB distribution முனையிலும் துண்டிக்கப்பட்டு இரண்டு இடங்களிலும் அரசு சீல் வைக்கப்படும். அந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்ததும் மீண்டும் TNEB, தொடர்புடய TNPCB க்கு கடிதம் மூலம் அறிக்கையாக அனுப்பிவிடும்.
பிறகுதான் அரசு மூடுவதற்கான உத்தரவை தொடர்புடய தொழில் துறை மந்திரி மூலம் தொடர்புடைய மேற்சொன்ன துறைகள் மூலம் அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு அரசு செக்கியூரிட்டிகளை அங்கே போடுவார்கள்..!
இது எல்லா முறைகளும் உடனே நடக்க சாத்தியமற்ற செயல்.. ஏன் எனில், ஒவ்வொரு துறையையும் தாமதப்படுத்த வேதாந்தா நிறுவனம் பணத்தால் நிறுத்தி வைக்கவே முயற்சிக்கும்.
இதை எதுவுமே செய்யாமல் வெறுமனே தொழிற்சாலை இனிமேல் இயங்காது என்று ஒரு தலைமை செயலக லெட்டர்பேட் மூலம் சொல்வது; இப்போதைக்கு மக்களை மடை மாற்றவே என்க!
முதலில் தொழிற்சாலைக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டு EHV Switch Yard-ல் சீல் வைக்கப்படவேண்டும்!
உள்ளே இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் (permanent Shut down) செயல்பாடுகளை முடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேற வேண்டும்.
ஆபத்தான கெமிக்கல் வாயு இன்ன பிற எல்லாம் வெளியேற்றப்படவேண்டும்.
இது எதுவுமே செய்யாமல் ஒரே நாளில் மூடிவிட்டோம் என்று சொல்வதை இந்த அப்பாவி மக்கள் நம்பலாம். ஆனால் என் போன்ற அனுபவம் பெற்ற தொழிற்சாலைகளிலேயே ஊறிப் போன பொறியாளர்கள் ஒருவர்கூட நம்ப மாட்டார்கள்!
ஆக
மக்களை தற்காலிகமாக மடைமாற்றும் ஒரு நாடகமே...!
இவ்வளவு கோடிகளை கொட்டி லாபம் பார்த்த ஒரு முதலாளி ஒருபோதும் மூட விடமாட்டான் இதுதான் உண்மை நிலை என்க!
மூட வேண்டும் என்றால் மேற்சொன்ன அத்தனை ஒப்புதல்களும் மூடுவதற்கான தக்க காரணங்களுடன் எல்லோரும் சமர்பிக்க வேண்டும்.
அதற்கு பிறகுதான் மின்சாரம் துண்டிக்கப்படும்..!
பிறகு ஒவ்வொன்றாக நடைபெறும்..!
இன்றிலிருந்து தொடங்கினாலே இன்னும் ஆறு மாதத்திற்குள் மூட முடியுமே அன்றி, இந்த உடனே ஒரே நாளில் மூடிவிட்டோம் என்று சொல்வது அபத்தமானது!
அதேநேரத்தில்..... இந்த எல்லா நடைமுறைகளும் முடியும்வரை தொழிற்சாலையை இயக்கவோ, பராமரிக்கவோ கூடாது என்று உடனடி அறிக்கையை TNPCB மற்றும் Inspector of factories போன்ற அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையில் தொழிற்சாலை வாயில் கேட் அல்லது சுற்று மதில் சுவரில் ஒட்டி கேட்டில் சீல் வைக்க வேண்டும்..!
அது நடைபெற வேண்டுமானால் முதலில் தொழிற்சாலையின் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும்!
சிந்தியுங்கள்
செயல்படுங்கள்
வெற்றுக் கோபங்களும் அறிவற்ற அரசியல் சிந்தனைகளும் படுகொலையில்தான் முடியும் என்பதற்கு இதுவே சான்று.
எனவே இனிமேல் களபலி கொடுப்பதை தவிர்த்து மேற்சொன்ன அதிகாரிகளை ஆக்கிரமிப்பது நன்மை பயக்கும்!
சொல்ல நிறைய உள்ளது எல்லாவற்றையும் இங்கேயே சொல்லவும் இயலாது.....!
தோழமையுடன்,
பார்த்திபன்.ப
25/05/2018
# Sterlite # BanSterlite # Tuticorin

போலீஸ் பெண்களை சீண்டியதாலேயே கலவரம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ஜூனியர் விகடன்

aathi1956 aathi1956@gmail.com

மே 28, திங்., பிற்பகல் 5:58
பெறுநர்: நான்
Posted Date : 06:00 (26/05/2018)
“பெண்களின் மார்பைப் பிடித்து போலீஸார் தள்ளியதே ஆரம்பம்!”
“தி ட்டமிட்டபடி, மே 22-ம் தேதி காலை பேரணி தொடங்கியது. பனிமயமாதா கோயில் அருகில் பேரணியை போலீஸார் தடுத்தனர். முன்வரிசையில் இருந்த பெண்கள், ‘நாங்கள் 100 நாள்களாகப் போராடு கிறோம். எங்களின் குரல் உரியவர்களை எட்ட வில்லை. அதனால், கலெக்டர் அலுவலகத்துக்குச் செல்கிறோம்’ என்று சொல்லிவிட்டு பேரணியைத் தொடர்ந்தனர். பிறகு வி.வி.டி சிக்னல் அருகே தடுத்த போலீஸார், முன்வரிசையில் இருந்த பெண்களின் மார்பைப் பிடித்து தள்ளினர். அதனால் ஆத்திரமடைந்த ஆண்கள் முன் வரிசைக்கு வந்தனர். அவர்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸார் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு, பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்துதான், கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது” என்று தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரபு.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி நடைபெற்ற பேரணியின்போதுதான், 12 பேரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். போலீஸார் தேடிவரும் நிலையில், போராட்டக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பிரபு ஆகியோரைப் பெரும் சிரமத்துக்கு மத்தியில் சந்தித்தோம்.
வங்கி அதிகாரியின் மகனான பிரபு, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, அதனால் சிறுநீரகம் பழுதடைந்து தந்தை இறந்்ததை அருகில் இருந்து பார்த்தவர். அதுவே இவரை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக மாற்றி விட்டது. பிரபுவுடன் பேசியபோது, “22-ம் தேதி போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்தது, அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். எங்கள் கோரிக்கையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடாத அதிகாரிகள், போராட்டக் குழுவினர் மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். மே 20-ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பாக 23 பேருக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டது. போராட்டத்துக்கு சம்பந்தமே இல்லாதவர்களை எல்லாம் அழைத்துப் பேசி, போராட்டத்துக்கான இடத்தை மாற்றிவிட்டதாக அறிவித்தனர். ஆனால், போராடும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போராட்ட வடிவத்தை மாற்ற ஒப்புக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவெடுத்தார்கள். முதலில் பெண்களின் மார்பில் கையை வைத்துத் தள்ளியதால் ஆண்கள் ஆத்திரமடைந்தனர். அதனால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்துதான் துப்பாக்கியால் போலீஸார் சுட்டனர்” என்றார் வேதனையுடன்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி, கடந்த 23 வருடங்களாகத் தொடர்ந்து போராடி வருபவர். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர் சங்கத்தில் முக்கியமாக செயல்பட்டவர். அறவழிப் போராட்டத்தையே முன்னெடுக்க வேண்டும் என்பதில் எப்போதும் அக்கறையுடன் செயல்படுபவர். தற்போதைய போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மிகுந்த மன வருத்தத்துடன் இருந்த அவரிடம் பேசினோம்.
“எங்கள் போராட்டத்தைத் திசைதிருப்பும் செயலில், எப்போதுமே சிலர் முன்னின்று செயல் பட்டு வந்துள்ளனர். இந்த முறையும் அது நடந்தது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இருப்பதால்தான், அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. போலீஸார் திட்டமிட்டுக் கலவரத்தைத் தூண்டி, இந்த அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிட்டனர். ஆலை நிர்வாகத்தின் கைக்கூலிகளாக மாறிவிட்ட சிலரால்தான், உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு விபரீதம் நடந்துவிட்டது. அவர்களுக்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.
என் கண் முன்பாகவே ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். போலீஸார், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், நேரடியாக துப்பாக்கிச்சூட்டில் இறங்கினர். அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. சாதாரண உடையில் இருந்த காவலர்கள், வாகனங்களுக்கு தீவைத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. காரணம், கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்த மக்கள் கூட்டத்தை போலீஸார் விரட்டி அடித்துவிட்டார்கள். பிறகு எப்படி, அங்குள்ள வாகனங்கள் எரிந்தன? இதுபோன்ற பல சந்தேகங்கள் உள்ளன. இவ்வளவு நடந்த பிறகும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு எதுவுமே சொல்லாமல் இருப்பது ஏன்? ஆலையை நிரந்தரமாக மூடுவது மட்டுமே தூத்துக்குடி மக்களை நிம்மதி அடையச் செய்யும். அதை, உடனடியாகத் தமிழக அரசு செய்ய வேண்டும்’’ என்றார்.
- பி.ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம் பி.ஆண்டனிராஜ்
இ.கார்த்திகேயன்
ஏ.சிதம்பரம்

படுகொலை பெண் பெண்கள் போராட்டம் 

ஸ்டெர்லைட் மூடப்படுகிறது அரசாணை விகடன்


aathi1956 aathi1956@gmail.com

மே 28, திங்., பிற்பகல் 5:55
பெறுநர்: நான்

Last updated : 17:32 (28/05/2018)
`ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது!’ - தமிழக அரசு அரசாணை வெளியீடு
பொது மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 22-ம் தேதி நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Advertisement
இந்தநிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது . இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தநிலையில், ஆலை நிர்வாகம் இதனைப் புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே விதித்திருந்த மாசுக்கட்டுப்பாட்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிப்பட்டதை அடுத்து, ஆலை இயங்கவில்லை.
இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர், ஆலையை நிரந்தரமாக மூட கோரிக்கை வைத்தனர். ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அரசாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கையும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டது. மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அரசு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இன்று (28.5.2018) வெளியிட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் காலம் வரை உடல் துன்புறுத்தல் இல்லை ஊழல் தண்டனை வரி கோவில் நிலவுடைமை பிராமணர்


aathi1956 aathi1956@gmail.com

மே 28, திங்., பிற்பகல் 5:21
பெறுநர்: நான்

Perumal Ammavasi Thevan
கல்வெட்டுகளில் குற்றமும் தண்டனையும்
முன்னுரை
தமிழகத் தொல்லியல் துறையின் வெளியீடான ”சோழர் சமுதாயம்’ என்னும் நூலைப் படித்துக்கொண்டி
ருந்தேன். நூலில் திரு. இல. தியாகராசன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று. ”சோழர் காலக் குற்றங்களும் விசாரணைகளும்” என்னும் தலைப்புக்கொண்டது. மன்னர்களின் காலத்தில் எவ்வகைக் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும், குற்றவாளிகள் எவ்வகையில் தண்டிக்கப்பெற்றார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள அக்கட்டுரை ஓரளவு துணை செய்தது. மேலும் சில செய்திகளைத் தேடும் முயற்சியை உள்ளம் நாடியது. அவ்வாறு கிடைத்த செய்திகளையும் சேர்த்த பதிவை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
தொடக்கமாக, மேற்குறித்த நூலில் காணப்பட்ட சில செய்திகள். அரசுக்கு வரி செலுத்தாமல் ஏய்த்தல் இன்று பரவலாக நாம் காணும் குற்றம். அரசர் காலத்திலும் இக்குற்றம் இருந்துள்ளது. பொதுச் சொத்துகளை முறைகேடாகத் தனியார் பயன்கொள்ளுதல். அரசின் உள்ளாட்சி நிருவாகத்தில் முறையான கணக்குக் காட்டாதிருத்தல். கோயில்களில் ஏற்படுத்தப்பட்ட நிவந்தங்களைச் சரிவரச் செய்யாதிருத்தல். கோயில் செல்வங்களைத் திருடுதல். சோழ அரசர்களின் சிறந்த நிருவாகத்தையும் கடந்து இவை போன்ற முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.
கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில், மேற்சொன்ன குற்றங்களை மிகுதியும் செய்தவர்கள் பிராமணர்களும் தேவகன்மிகளும் எனக் காண்கிறோம். தேவகன்மிகள் என்போர் கோயில்களில் பணிபுரிவோர். பிராமணர்கள், தேவதான ஊர்களையும், பிரமதேயச் சதுர்வேதிமங்கலங
்களையும் நிருவாகம் செய்தவர்கள். அரசன் ஓர் ஊரையே கோயிலுக்குக் கொடையாக அறிவித்தல் வழக்கம். அவ்வூரின் வருவாய் கோயிலுக்கே சேரும் என்பது அக்கொடையின் நோக்கம். அவ்வகை ஊர்களின் நிருவாகப் பொறுப்பும், ஊரின் வருவாய் முறையாகக் கோயிலுக்குச் சென்றடைவதைக் கண்காணிக்கும் பொறுப்பும் ஊர்ச்சபையைச் சார்ந்தது. அவ்வகை ஊர்ச் சபையில் பிராமணரே மிகுதியும் இருந்தனர் எனலாம். அடுத்து, வேதம் வல்ல பிராமணர்க்கு ஓர் ஊர் அல்லது ஊரின் ஒரு பகுதியை அரசன் உரிமையாக்குவான். அவ்வகை ஊர்கள் சதுர்வேதி மங்கலங்கள் எனப் பெயர் பெறும். இவ்வூர்களின் நிருவாகப்பொறுப்பு சபை, பெருங்குறி என்னும் அமைப்பைச் சாரும். இவ்வகைச் சபையில் இருப்போர் பிராமணரே. இவ்விருவகை ஊர்களும் தன்னாட்சி பெற்றவை. மிகுந்த அதிகாரம் உடையவை.
வரி ஏய்ப்பு
அரக்கோணம் வட்டம், திருமால்புரம் ஊர்க்கல்வெட்டு வரி ஏய்ப்பு ஒன்றைப்பற்றி விரிவாகக் கூறுகிறது. வரி ஏய்ப்பைப் பற்றிய இக்கல்வெட்டின் வரிகளே நூற்றுக்குமேல் உள்ளன என்பது வியப்பு; சிறப்பும்கூட. தற்காலத்தில், சில நிதி முறைகேட்டுக் குற்றங்களைப்பற்றிய ஆவணங்கள் நூறு, ஆயிரம் எனப் பக்கங்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். திருமால்புரத்துக் கோயிலுக்குக் கொடையாகச் சிற்றியாற்றூர் என்னும் ஊர் அளிக்கப்பட்டது. அவ்வூரின் இறையாக (அதாவது அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியாக) மதிப்பிட்ட விளைச்சல் வருவாய், 3561 காடி நெல்லும், 200 கழஞ்சுப் பொன்னும் ஆகும். ஆனால், பொறுப்பிலிருந்த பிரமதேயச் சபை, இதை அரசு வரிப்பொத்தகத்தில் பதிக்கவில்லை. அரசு இறைக்கணக்கில் எழுதவில்லை. கல்வெட்டுச் சொல் வழக்கில், இதை “வரியிலிடுதல்” என்று குறிப்பர். வரியிலிடாது ஏய்த்த இந்தக் குற்றம் கி.பி. 893 முதல் கி.பி. 974 வரை ஏறத்தாழ எண்பத்திரண்டு ஆண்டுகள் நடந்துள்ளது. குற்றம் கண்டுபிடிக்கப் பட்டுச் சினமடைந்த அரசன் ஊர் நிலங்களைக் கோயில் நிருவாகத்தாரின் பொறுப்பில் மாற்றிவிடுகிறான். பிரமதேயச் சபையினர் தண்டிக்கப்படுகிறார்கள்.
இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடியில் ஊழல்
மேற்குறித்த திருமால்புரத்து அக்னீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் கோயிலில் பூசை உரிமை பெற்ற உண்ணாழிகை உடையார்கள் (சிவப்பிராமணர்கள்) தங்கள் உடைமையாகப் பயன்படுத்தியதோடு, கோயிலின் வழிபாட்டு நிவந்தங்களைச் செய்யாது விடுகின்றனர். இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடியில், கறியமுது, நெய்யமுது, தயிரமுது ஆகியன இடம்பெறுதல் நடைமுறை. இங்கே ஊழல் செய்த சிவப்பிராமணர்கள், வெறும் அரிசியை அவித்துப் படைத்தனர்; கறியமுது, நெய்யமுது, தயிரமுது ஆகியன இல்லை. குற்றமிழைத்தவரிடமிருந்து எழுபத்து நான்கு கழஞ்சுப்பொன் தண்டம் பெறப்பட்டது.
மற்றுமொரு ஊழல்
திருச்சானூர் திருப்பாலதீசுவரர் கோயில் திருவிழா நடத்தக் கொடையாகக் கோயில் பண்டாரத்தில் (கருவூலத்தில்) முதலாகச் செலுத்தப்பட்ட இருபத்தாறு கழஞ்சுப் பொன்னைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அதன் பொலிசையில் (வட்டியில்) திருவிழாவினை நடத்த ஒப்புக்கொண்ட பிரமதேயச் சபையினர், அதைச் செயல்படுத்தாமல் ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு 217 ஆண்டுகள் கடந்தபின்னர், ஊழலைக் கல்வெட்டுச் சான்றுகளோடு கோயிலின் கண்காணிகளான மாகேசுவரர்கள் அரசனிடம் நிறுவியபின், அரசன் பிரமதேயச் சபையினரின் உரிமையைப் பறித்ததோடு முதலாக வைத்த இருபத்தாறு கழஞ்சுப் பொன்னைக் கோயில் கருவூலத்தில் திரும்பக் கட்டவைத்தான்.
தேடுதல் மூலம் கிடைத்த செய்திகள்
தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண
்டி வட்டம், திருக்கொள்ளிக்காடு ஊரில் உள்ள அக்னீசுவரர் கோயிலின் நிலத்தை, ஊரிலிருந்த சிலர் தம் உடைமையாக்கிக்கொண்டு பலனைப் பெற்றுவந்தனர். கோயில் மாகேசுவரர் அரசன் முதலாம் இராசேந்திரனிடம் வழக்குத் தொடுத்தனர். அரசனின் ஆணைப்படி வழக்கினை ஆராய்ந்த இராசேந்திரசோழ மூவேந்த வேளான் ஊழல் நடந்தது உண்மை என அறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்கிறான். தண்டமாக நானூறு காசுகள் செலுத்தவேண்டும். செலுத்த இயலாமல் குற்றவாளிகள் நிலத்தை இறையிலி செய்து கோயிலுக்கே கொடுத்துவிடுவதாக வேண்டியதால், அந்நிலம் அவ்வாறே இறையிலி செய்யப்பட்டது. (இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண்: 139/1935-36.).
திருத்துறைப்பூண்டி திருத்துறை நாயனார் கோயிலைச் சேர்ந்த கணக்கர், தானத்தார், முதலிகள் சிலர் கோயிலின் சொத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தமையும், அவர்கள் சிவத்துரோகிகள் என்று அடையாளப்படுத்தப்பெற்று, சிவத்துரோகிகள் பெறும் தண்டனைக்குள்ளானமையும் இக்கோயில் கல்வெட்டு ஒன்றின்மூலம் தெரியவருகின்றன. (கல்வெட்டு எண்: 139/1976-திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டுகள்-துறை வெளி யீடு-1978.)
தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலம் சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டு கூறும் செய்தி சற்றே மாறுபட்டது. சோமநாத சருப்பேதி மங்கலம், சீதக்க மங்கலம் என இரு மங்கலங்கள். முடிகொண்ட சோழப்பேராற்றிலிருந்து அணைவழி நீர்ப்பாசனத்திற்காக நீர் பாய்ச்சுவது பற்றி இரு ஊராரிடையே ஒரு பிணக்கு ஏற்பட்டது. (தகராறு என்னும் சொல்லுக்கு அன்று வழங்கிய அழகிய தமிழ்ச்சொல் பிணக்கு. கல்வெட்டில் “அணைப்பிணக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.) இந்தப்பிணக்கின் காரணமாக ஒருவன் தண்டிக்கப்படவேண்டும். ஆனால், தவறுதலாக வேறொருவன் தண்டிக்கப்பட்டுவிடுகின்றான். இது தெரியவந்த பின்னர், தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவனின் மகனுக்கு இழப்பீடு தரப்படுகிறது. இது போன்ற குறிப்புகளில், ஒருவனுக்குப் பதில் இன்னொருவன் என்று நாம் வழக்கமாக எழுதுவோம். பதில் என்பது வடமொழிச் சொல் என்று எனக்குத் தோன்றியதால், அதைத் தவிர்த்து எழுத ”தவறுதலாக வேறொருவன்” என்று மேலே நான் எழுதியுள்ளேன். ஆனால், கல்வெட்டு எழுதப்பெற்ற கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், கல்வெட்டில் “பதில்” என்பதற்குத் ”தலைமாறு” என்று நல்ல தமிழ்ச் சொல்லைக் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவறான தண்டனை தரப்பட்டது தெரிந்தவுடன், தண்டனை பெற்றவனின் மகனுக்கு இழப்பீடாக நிலம் அளிக்கப்பட்டது. இது போன்ற நிலக்கொடை, “உதிரப்பட்டி” என்று அழைக்கப்பட்டது. (தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை-நன்னிலம் கல்வெட்டுகள்-1980. க.வெ.எண்: 267/1978)
சோழர் காலத்தில் குற்றமும் தண்டனையும்
கே.கே.பிள்ளை அவர்கள் தாம் எழுதிய “தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்” என்னும் நூலில், சோழர் காலத்துச் சூழல் எவ்வாறிருந்தது எனக்குறித்துச் செல்கிறார். குற்றங்கள், இருவகையாகப் பார்க்கப்பட்டன. ஒன்று உடலைப் பற்றிய குற்றங்கள்; மற்றது உடைமையைப் பற்றிய குற்றங்கள். குற்றங்களுக்குத் தண்டனையாகக் குற்றவாளிகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதைத்தான் கிராம நீதிமன்றங்கள் முறையாகக் கொண்டிருந்தன. திருடு, பொய்க் கையொப்பம், விபச்சாரம் ஆகியன கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டன. சில குற்றங்களூக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதி
ல்லை. குற்றவாளிகள், கோயில்களுக்கோ அன்றி மடங்களுக்கோ இவ்வளவு தானம் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
சில தீர்ப்புகள் வியப்பளிக்கக் கூடியவை. பிராமணனைக் கொன்ற ஒருவனைச் சிலர் எருமைக்கடாவின் காலில் பிணித்து விட்டனர். கடாவினால் அவன் அங்குமிங்கும் இழுப்புண்டு மாண்டுபோனான். அவ்வாறு கொன்றவர்களுக்குக் கழுவாயாக மடத்தில் சிறப்பு வழிபாடு ஒன்று நிறுவ வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பரிவேட்டைக்குச் சென்ற செல்வப்பேரரையன் என்பானைத் தேவன் என்பவன் கைப்பிழையால் அம்பெய்து கொன்றுவிட்டான். இவன் அறியாமல் செய்த குற்றத்துக்குக் கழுவாயாகக் கோயிலுக்கு அரை நந்தா விளக்கு வைத்து வர வேண்டுமென்று தீர்ப்பாயிற்று. (கட்டுரை ஆசிரியர் கருத்து: அரை நந்தா விளக்கு எப்படி என்னும் ஐயம் எழலாம். முழு நேரம் எரிகின்ற விளக்கு அரை நேரம் எரிந்தால் அரை விளக்கு எனக் கொள்ளவேண்டும். முழு நேர விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகளைக் கொடுக்கவேண்டும் என்பது அன்றைய வழக்கம். எனவே, அரை விளக்கெரிக்க நாற்பத்தைந்து ஆடுகள் தரப்படவேண்டும்).
இந்தியத்தொல்லியல் ஆண்டறிக்கை
இந்தியத்தொல்லியல் ஆண்டறிக்கைகளில், 1887 முதல் 1905 வரையிலான ஒரு தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது இரு செய்திகள் தெரியவந்தன. சீயமங்கலம் என்னும் ஊரிலுள்ள தூணாண்டார் கோயில் கல்வெட்டு ஒன்று (க.வெ. எண்: 64/1900) கூறும் செய்தி: ஒருவன், தவறுதலாகத் தன் ஊரினன் ஒருவனைக் கொன்றுவிடுகிறான். ஆண்டறிக்கை, இந்நிகழ்ச்சியை “shot a man by mistake“ என்று குறிப்பிடுவதால், கொலை, அம்பெய்தியதன் காரணமாகவே நிகழ்ந்திருக்கக்கூடும் எனலாம். அரசு சார்பாக நிருவாக அலுவலர் ஒருவரும், நாட்டார் சபையினரும் ஒன்றுகூடிக் கொலைக்குற்றத்தை ஆராய்கிறார்கள். குற்றம், பிழையினால் நேர்ந்ததால் குற்றவாளி இறக்கவேண்டியதில்லை என்றும், சீயமங்கலம் தூணாண்டார் கோயிலில் விளக்கொன்றை எரிக்கவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். அதன்படி, குற்றவாளி, பதினாறு பசுக்களைக் கொடையாகக் கோயிலுக்கு அளிக்கிறான்.
திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று (க.வெ. எண்: 77/1900) கூறும் செய்தி: குற்றம் சாட்டப்பட்டவன், வேட்டைக்குச் சென்றபோது, அவனது குறி தவறி, ஆள் ஒருவனைத் தாக்கி அவன் இறந்துபோகிறான். நாட்டார் சபை கூடிக் குற்றவாளி கோயிலுக்குப் பதினாறு பசுக்களை அளிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறது. (இந்நிகழ்ச்சி, மேலே கே.கே. பிள்ளை அவர்களின் நூலில் காணப்படுகின்ற செய்தி என்றே கொள்ளலாம். பதினாறு பசுக்கள், அரை விளக்குக்காகவும், முப்பத்திரண்டு பசுக்கள் ஒரு விளக்குக்காகவும் கொடையாக அளிக்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுகளில் வருகின்றன. ஆடுகளாகக் கொடுக்கும்போது, ஒரு விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகள் எனவும், தொண்ணூற்றாறு ஆடுகள் எனவும் இருவகையாகக் கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன. மேற்குறித்த இரு கல்வெட்டுகளிலுமே, ஒரு இராசகேசரிவர்மன் குலோத்துங்கன் குறிப்பிடப்பெறுகிறான். எனவே, 12-ஆம் நூற்றாண்டுச் சூழலை இக்கல்வெட்டுகள் உணர்த்துவதோடு, குற்றமிழைத்தவன் இறக்கவேண்டியதில்லை என்னும் தீர்ப்பு மொழி, கொலைக் குற்றத்துக்குத் தண்டனையாக மரணமே வழக்கத்தில் இருந்ததைப் புலப்படுத்துகிறது என்று ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
திருப்புலிவனம் வியாக்கிரபாத ஈசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றிலும், மேற்குறித்தவாறு, பிழையால் நேர்ந்த கொலைக்குத் தண்டனையாகக் குற்றவாளி பதினைந்து பசுக்களைக் கோயிலுக்கு அளிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழக்கப்பட்டமை குறிப்பிடப்படுகிறது.
கதம்பர் காலக் குற்றம் ஒன்று
கதம்பர் குல அரசன் இரண்டாம் ஜயகேசியின் காலத்தில் (12-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) நீதி நிருவாகம் எவ்வாறிருந்தது என்னும் ஒரு குறிப்பில் ஒரு குற்றமும் அதன் தண்டனையும் கூறப்பட்டுள்ளது. பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தவல்ல குற்றங்களில் அரசனின் நேரடித் தலையீடும், தீர்ப்பும் இருந்தன. பிற குற்றங்களின் தன்மைக்கேற்ப, குற்றங்களை “த4ர்ம அத்4யக்ஷ” என்னும் தலைமை நீதியரசரும் அவரின்கீழ் இருந்த நீதியரசர்களும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினர். கள்வர், திருடர், பகைவர் யாராயினும் அவர்கள் உடலால் தாக்கப்படக்கூடாது எனச் சட்டம் இருந்தது. அவர்களுக்கு மூன்று க3த்3யாணம் பொன் தண்டமாக விதிக்கப்பட்டது. கொலைக்குற்றத்து
க்குத் தண்டனையாக மரணம் இருந்ததில்லை. இழப்பீடாகப் பணம் தண்டமாகப் பெறப்பட்டது. கொலையுண்டவரின் குடும்பத்துக்கு நூறு க3த்3யாணம் பொன் தரப்பட்டது. அதில் பகுதியான ஐம்பது பொன் அரசபண்டாரத்தில் செலுத்தப்பட்டது.
நரசிம்மர் கோயில் ஒன்றில், இறைவனுடைய அணிகலன்களைக் கோயிலின் செல்வாக்குள்ள வைணவப் பிராமணன் ஒருவன் களவாடிய குற்றம் அரசன் இரண்டாம் ஜயகேசியின் முன்னிலைக்கு வருகிறது. களவாடப்பட்ட அணிகலன்களுக்கு ஈடான மதிப்புள்ள பிராமணனின் சொத்துகள் அவனிடமிருந்து மீட்கப்படுகின்றன.
”காலப்போக்கில் தமிழகக் கல்வெட்டுகள்” என்னும் கட்டுரையில் (வரலாறு-ஆய்விதழ் 2016) தொல்லியல் துறை அறிஞர் சு.இராசகோபால் அவர்கள் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்:
இடைக்காலத்தில் பல்வேறு இடங்களில் கைப்பிழையால் உய்ர்ச்சேதங்கள் நிகழ்ந்தபோது தண்டனையாகக் கோயில்களில் விளக்கெரியச் செய்தமையைக் கரந்தை, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகளால் அறியலாம். குடுமியான்மலையில் காய்ச்சிய கொழுவினை உருவு பிரத்தியம் செய்து பிழை அல்லது பிழையின்மையை உறுதி செய்ததை ஒரு கல்வெட்டுப் பதிவு காட்டுகிறது. ஜம்பையில், அதிக/
தவறான வரிவிதிப்புக் காரணமாகப் பெண்ணொருத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியும் பதிவாகியுள்ளது.
தண்டனை போன்றதொரு சடங்கு
கருநாடகத்தில் 17-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு சடங்கு தண்டனை போன்ற தன்மையைக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். மைசூர் மாவட்டம் யளந்தூரில் உள்ள 17-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கூறும் செய்தி குறிப்பிடத்தக்கது. கருநாடகத்தில் குயவர்கள் கும்பார செட்டிகள் என அழைக்கப்பெறுகிற
ார்கள். மேற்படிக் கல்வெட்டில் அவரகள் “கோவர்” எனக்குறிக்கப்பெறுகின்றனர். தமிழகக் கல்வெட்டுகளில் இடம்பெறும் “வேட்கோவர்” என்னும் சொல்லின் வடிவமே இது என்பதில் ஐயமில்லை. இந்தக் கோவர்கள் மறுக்கப்பட்ட சில உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுகையில், கொதிக்கின்ற நெய்யில் தம் கைகளை அமிழ்த்தி எடுக்கிறார்கள். இச்சடங்கில் அவர்கள் வெற்றி பெறுவதாகக் கல்வெட்டு கூறுகிறது.
மண்டியா மாவட்டம், மத்தூர் வட்டத்து ஊர் ஒன்றில் ஒரு நிலக்கிழான் (வேளாளத்தலைவன்), கோயில் சொத்து மற்றும் பூசை உரிமைக்காக பிராமணர்க்கெதிரான ஒரு வழக்கில், கொதிக்கும் நெய்யில் மூன்று முறை கைகளை அமிழ்த்தி வென்றதை அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 1654.
காய்ச்சிய நெய்யில் கையை விட்டு மெய்யை வெளிப்படுத்தும் மரபு தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளமை, கொங்குமண்டலச் சதகத்தில் கூறப்பட்ட செய்தியொன்றால் அறியலாகும்.
கொங்கு மண்டல சதகம் 52
ஆணூர் என்னும் ஊர் காரையூர் எனவும் வழங்கப்பட்டுவந்தது.
இதன் ஊர்த்தலைவர் “சர்க்கரை”.
இவர் மீது பாடப்பட்ட நூல்களுள் ஒன்று “நல்லதம்பி சர்க்கரை காதல்”.
இவர் காயும் நெய்யில் கையை விட்டுச் சத்தியம் செய்த செய்தி இந்த நூலிலும் கூறப்பட்டுள்ளது.
கீழக்கரைப் பூந்துறை நாட்டில் இருப்பது திருச்செங்கோடு.
இவ்வூரில் வீரபத்திரர் என்னும் புலவர் ஒருவர் இருந்தார்.
இவருக்குக் காமிண்டன் என்னும் பெயரும் உண்டு.
இவர் ஏகாலியர் (வண்ணார்) குலத்தவர்.
இவர் சர்க்கரையாரின் கொடை பற்றிக் கேள்விப்பட்டுக் காரையூர் வந்தார்.
சர்க்கரையார் வீரபத்திரரிடம் அன்புடன் உரையாடினார்.
வீரபத்திரருக்கு விருந்தளிக்க விரும்பினார்.
“இதோ வந்துவிடுகிறேன். உணவு உண்டு செல்லலாம்” என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டு சமையலறைக்குள் சென்றார்.
சமையலறையில் சற்றே காலம் தாழ்ந்தது.
அந்த வேளையில் வீட்டு வேலையாள் ஒருவர் வந்து “உணவு படைக்கச் சற்றே காலமாகும்” என்றார்.
இந்தச் சொற்களைக் கேட்ட புலவர் காமிண்டன், சர்க்கரையார் தம்மைப் புறக்கணிப்பதாக எண்ணினார்.
சர்க்கரையார் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
சர்க்கரையார் சமையல் முடிந்த பின்னர் புலவரை அழைக்க வந்தார்.
புலவரைக் காணவில்லை.
தேடிச் சென்று கண்டார்.
விருந்துண்ண வருமாறு அழைத்தார்.
“எதிர்த்தவருக்கு மிண்டன்; புலவருக்குத் தொண்டன் என்று உங்களைப் பற்றிச் சொல்லக் கேட்டு வந்தேன். தாங்கள் என்னைப் புறக்கணித்து விட்டீர்கள்” – என்றார் புலவர்.
இதைக் கேட்ட சர்க்கரையார் புலவரை வீட்டுக்கு அழைத்துவந்து காயும் நெய்யில் தன் கையை விட்டு, “தங்களைப் புறக்கணிக்கவில்லை” என்று சத்தியம் செய்தார்.
புலவர் அமைதி பெற்று அவர் அளித்த உணவை உண்டார்.
பின்னும் நிறைவடையவில்லை.
உண்ட எச்சில் வாயையும், கையையும் கழுவி விடவேண்டும் என்றார் புலவர்.
சர்க்கரையார் அவற்றையும் செய்தார்.
இத்தகைய சான்றோர் வாழ்ந்தது கொங்குமண்டலம்.
முனைவர் ந. ஆனந்தி உரை விளக்கம்
முகம் சோர்ந்து அகன்றிரும் ஏகாலிப் பாவலன் முன்னம் நின்றே
இகழ்ந்தேன் இலை ஐய என்று சுடு நெயினில் கையை விட்டு
உகந்தே உணும் எச்சில் வாயைக் கழுவி உவப்பியற்றி
மகிழ்ந்தே புகழ் பெறு சர்க்கரையும் கொங்கு மண்டலமே. 52
கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)
துணை நின்ற நூல்கள் (கட்டுரையில் குறிப்பிடாதவை):
எபிகிராஃபியா கர்னாடிகா – தொகுதி-4,7 –
மைசூர்ப் பல்கலை வெளியீடு-1975
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.

சட்டம் தண்டனை கொங்கு இலக்கியம் கல்வெட்டு