வெள்ளி, 22 டிசம்பர், 2017

பார்ப்பனர் பிறப்பொழுக்கம் நோற்றல் மதிமாறன் கட்டுரைக்கு பதிலடி

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
பழவிறல் மூதூர் , 5 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
பார்ப்பனர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனரா?
அன்மையில் மதிமாறன் என்ற முற்போக்கு எழுத்தாளருக்கும் காவிக்கூட்டத்தைச்
சேர்ந்த நாராயணன் என்ற குப்பைக் கருத்தாளனுக்கும் இடையே ஒரு தொலைக்காட்சி
நேரலையில் ஒரு கலந்துரையாடல் ஒளிபரப்பப்பட்டது. அதில் மதிமாறன்
பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அதனை உடனே சாதிப்பெயர்
நானா நீயா எனக் கூச்சலிட்டு குடிகாரன் போல ஓலமிட்டார் நாரயணன்.
அதனைத்தொடர்ந்து சேகர் என்ற இன்னொருவர் அந்த தொலைக்காட்சி உரிமையாரளரைத்
தொடர்புக்கொண்டு முற்போக்கு கருத்துகள் உங்கள் தொலைக்காட்சிக்கு
தேவையானதல்ல ஆகவே மதிமாறன் போன்றவர்களை இனி உங்கள் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என வரம் பெற்றார்.
இதற்கு திராவிடக் கழக தமிழ்ப் பேரவையைச்சார்ந்த சுபவீ அவர்கள் தனது
கண்டனத்தையும் விளக்கத்தையும் அவரது வலைப்பூவில் தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கீழ்கண்டவாறு எழுதியதை நான் சற்று ஆய்ந்திட எண்ணினேன்.
//
"பார்ப்பான் என்ற வார்த்தைப் பிரயோகமே தவறு என்றுநாங்கள் சொல்கிறோம்.
பிராமணர் என்று பொதுவெளியில்நாக
ரிகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள்மதிமாறன்"
என்பது சேகரின் கூற்று. 'பார்ப்பனர்' என்பது வசைச்சொல்லோ,ஒரு குறிப்பிட்ட
பிரிவினரை இழிவுபடுத்தும் சொல்லோஅன்று. அவ்வாறு எவர் ஒருவரையும் வாசை
பாடுதல் நம் பழக்கமும்அன்று. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்று
கூறப்படுவதை போல, குறி பார்ப்போர், கணி (சோதிடம்) பார்ப்போர்,
பார்ப்பார், பார்ப்பனர்என்று சங்க காலம் தொட்டு அழைக்கப்பட்டனர்.
அதனால்தான் அந்தச்சொல்லை அவ்வையார், போன்ற புலவர்களே சங்க இலக்கியத்தில்
பயன்படுத்தியுள்ளனர். "ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை
நிறையப்பூவும்பொன்னும் சொரிந்து" என்கிறது அவ்வையின் பாடல் (புறநானூறு -
367). வள்ளுவரும் ஒரு குறளில் "மறப்பினும் ஓத்துக் கொளலாகும்பார்ப்பான்/
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்" என்கிறார். எங்கள் பாரதி, எங்கள் பாரதி
என்று சேகர் போன்றவர்கள் உயர்த்திப் பிடிக்கும்பாரதியார், ஓரிடத்தில்,
"நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்" என்கிறார்.இன்னொரு இடத்தில், மிகக்
கடுமையாக, "சூத்திரனுக்குஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு
நீதி" என்கிறார். அவ்வை, வள்ளுவர், பாரதியார் எல்லோருமே மதிமாறனைப்
போலமதியில்லாதவர்கள்தானா?
//
இதில் முக்கியமாக பார்ப்பனர் என்ற சொல் குறி பார்ப்பவர் என்ற பொருளில்
புறநானூற்றில் கூறப்பட்டுள்ளதாக அவர் கருத்துக் கூறியிருந்தார். இது
குறித்து அவருக்கும் நான் ஒரு செய்தி அனுப்பியிருந்தேன்.
பார்ப்பனர் குறி கூறுபவர்களா? ஆம் என்றால் தமிழ்ச்சங்க இலக்கியத்தில்
குறிஞ்சித்திணையில் வரும் குறி கூறும் குறத்தியை பார்ப்பனர் ஆக்கிடலாம்.
குறிகூறுவதே குறவர் முதல்த்தொழில் என ஒரு இலக்கியமே படைத்திருக்கும் போது
பார்ப்பனரை குறிப்பார்ப்பவர் என உருவகப்படுத்துவது முற்றிலும் பிழையான
பொருள்கொள்வதாகும். குறத்திப்பாட்டு எனும் சிற்றிலக்கியதை
வகைப்படுத்துகையில்
"
இறப்புநிகழ் வெதிர்வென்னும் முக்காலமும்
திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே (பன்-217)
"
எழுதியிருப்பது குறவர் தொழில் குறிக்கூறுவதே என்பதைப் பறைசாற்றுகிறது.
சரி குறிபார்ப்பது பார்பனர் தொழில் இல்லையென்றால் அவர் யார்?, அவர்
பார்த்தது என்ன? சுபவீ அவர்கள் சுட்டியுள்ள தமிழ் இலக்கிய கூற்றுக்கள்
உரைக்கும் மெய்ப்பொருள் யாது? காண்போம் வாருங்கள்.
கீழே கொடுக்கப்பட்ட புறநானூற்றுப்பா
டல் 367க்கு எழுதப்பட்டுள்ள பொருள் திரித்து எழுதப்பட்டுள்ளதைச்
சுட்டிகாட்ட எண்ணுகிறேன். இந்தப்பாடலையும் அதன் பொருளையும் படித்துவிட்டு
எனது விளக்கத்தைப் படிக்கவும்
இலக்கியம்: புறநானூறு
பாடல்: 367
பாடியவர்: ஔவையார்.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்தியல்.
நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;
யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!
வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருக வேண்டும். ‘இம்’ என்று
பொழியும் மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும்
பெருகவேண்டும். நில உலகினைச் சூழ்ந்துள்ள மண்டிலம் தேவருலகம் போல
இனிமையானது. அது ஞாயிறு, திங்கள் இரண்டுக்கும் உரிமையானது. என்றாலும்
இந்த இரண்டு சுடர்களும் இணைந்து செல்வதில்லை. நீங்களோ மூவரும் இணைந்து
காட்சி தருகிறீர்கள். இந்த உலகம் ஆளும் உங்களுடையதுதான். என்றாலும் அது
நோன்பு இயற்றியவர்களுக்கே உரியது. நீங்கள் பார்ப்பார்க்கு வழங்க
வேண்டும். ஏந்தி நிற்கும் அவர்களின் கையில் பூவும் பொன்னும் வழங்க
வேண்டும். நீர் ஊற்றித் தாரை வார்த்து வழங்க வேண்டும். மகளிர்
பொன்-கிண்ணத்தில் தரும் தேறலைப் பருகவேண்டும்.இரவலர்களுக்கும் அரிய
அணிகலன்களை வழங்கவேண்டும். தனக்கென வைத்துக்கொள்ளாமல் வழங்கவேண்டும்.
உங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் எல்லாம் வழங்கவேண்டும்.இவ்வாறு வாழ்ந்து
உங்கள் வாழ்நாள் பெருகவேண்டும். பிறரை வாழச்செய்வதுதான் நல்வினை. இந்த
நல்வினை உங்களை ஏற்றிச் செல்லும் மிதவையாக உதவும். வாழ்க்கைத்
துன்பத்தில் மூழ்கும்போது உதவும். இந்த நல்வினை போல வாழ்க்கைக்கு இன்பம்
தந்து உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
இங்கே சேர்த்தும் திரித்தும் எழுதப்பட்டப் பொருட்கள்:
அ. தேவருலகம் (திணிப்பு)
ஆ. நோற்றோர்க்கு - நோன்பு இயற்றியவர்களுக்கே - என்று எழுதி அதனை ஏதோ
சமைத்த மொழி பக்திச் செயலாகவும் காட்டியுள்ளனர்
இ.பார்ப்பார்க்கு - பார்ப்பனர் என்ற பொருள் கொண்டுள்ளதாகப் பலர் குறிப்பிடுகின்ற
னர்
மேற்கண்டப்பாடலில் வரும் சொல்லாடல் சங்கத்தமிழிலும் மற்றும் சில
இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கே அவை உழவுத்தொழில் செய்வோரை
குறிப்பிட்டுள்ளதும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
கீழே நோற்றோர்க்கு என்ற சொல்லாடல் காத்திருந்து அல்லது தவமிருந்து என்ற
பொருளில் வருவதைக்காணலாம். நோற்றோர்க்கு என்ற சொல் உழவர்கள் விதைத்துத்
தவமிருந்து ஒன்றினைப் பலவாக மழைத்துளிகளைக் காட்டிலும் அதிகம் பெருக்க
உழைத்தவரே என்றவாறு கருத்துக்கொள்ளலாம்.
நோற்றோர் மன்ற தாமே கூற்றங்கோளுற விளியார், பிறர்கொள விளிந்தோர்' எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாள்இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய்உழந்து
ஆழல் வாழி, தோழி!- தாழாது,
உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ,
அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
நறவுநொடை நெல்லின் நாள்மகிழ் அயரும்
கழல்புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே - முனாஅது
முழவுஉறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே
இன்னும் நோற்றோர் என்ற சொல்லாடல் சங்கத்தமிழில் பல இடங்களில் உழவை
முன்னிறுத்தி எழுதியபோதெல்லாம் வருவதையும் அதற்குப் பொருள் எழுதிய
பிற்காலத்தில்(பக்தி இலக்கிய கால) இச்சொல்லாடலை ஏதோ தவம் என்பது சமய
வழக்கத்துக்குண்டாதெனத் திரித்து எழுதியதை நீக்கமறக் காணமுடியும். ஆக
நோற்றோர் உழவர் என்றால் பார்ப்பார் என இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டவர்
யாவர்? பொருள் பொருந்தா சொற்களைக்கொண்டு வேற்று மொழியினரை(பார்ப்பனரை)
தமிழ் இலக்கியங்களில் கொண்டாடியிருப்ப
ார்களா நமது முன்னோர்கள்?
உண்மையில் அதற்குண்டான தேவையே தமிழரிடத்தில் இருந்ததில்லை, அதனால்
பார்பார்க்கு என மேற்கண்ட ஔவையாரின் புறநானூற்றுப் பாடலில் வரும்
சொல்லாடலில் தம் உழைப்பை விதைத்து வரும் விளைச்சலை "எதிர்ப்பார்த்து"
நோன்பிருந்தோரான வறுமையில் வாடும் உழவுத்தொழில் புரிபவர்களையே
குறிப்பிட்டுள்ளார் என்பது திண்ணமாகும்.
ஔவையார் அம்மூன்று வேந்தர்களை நோக்கி நீங்கள் இந்த உலகையே ஆள்பவர்கள்
என்றாலும் இந்த உலகத்திற்கு உணவு படைக்க வேண்டி விதைத்துத்
தவமிருந்து(காத்திருந்து) விளைச்சலை எதிர்பார்த்திருப்பவர்களுக்கே
இவ்வுலகம் உரியது. நீங்கள் அப்படி எதிர்ப்பார்ப்பார்க்குக்(உழவருக்கு)
கையில் பூவும்(நிலமும்) பொன்னும் வழங்க வேண்டும்.
இப்போது சுபவீ அவர்களின் திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ள
திருக்குறளையும் சரியான பொருள் கொண்டு அணுகினால் (இதுவரை எழுதிய
பொருள்கள் அனைத்தும் மேற்கண்ட திரிபுப் பொருளுடனே அணுகப்பட்டுள்ளது)
மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
ஓத்து = இயல் / படலம் / படியடுக்கு (இதுநாள் வரை பொருள் எழுதியவர்கள்
ஓதுதலை என தவறானப் பொருளைச் சுட்டியுள்ளதை இங்கே முன் வைக்கிறேன்);
மறப்பினும் = மறந்துவிட்டாலும்;
கொளல் ஆகும் = அதனை ஏற்றுக்கொள்வது கூடும்;
பார்ப்பான் = விளைச்சலை எதிர்பார்க்கும் உழவர் (மேற்கூறியபடி இதையும்
சமயக்கருத்துகளுடன் சேர்த்து இதுவரை கோயிற்காரியங்கள் அல்லது நூல்கள்
பார்ப்பவன் என பொருள் எழுதினார்கள்);
பிறப்பொழுக்கம் = பிறந்த ( குடியின் ) ஒழுக்கத்தினை (வள்ளுவர் தனது
இன்னொரு குறளில் இதனை பெரிதாக விளக்குகிறார்:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
);
குன்ற = குறைவுபட விட்டுவிட்டால்;
கெடும் = (அது மாற்றவியலாத ) கெடுதலை உண்டுபண்ணிவிடும்.
இதனால், ஒழுக்கத்தின் இன்றியமையாமை உரைக்கப்பட்டது.
ஓதுதலை மறத்தல் : உழவுத் தொழிலையே நிறைவேற்ற மறத்தல் ஒன்று; மற்றது,
ஓதுகையில் சொற்களையும் (இயல்பாக)
சொற்பொருளையும் மறந்துவிடுதல் இன்னொருவகை மறப்பாகும்.
குன்றக் கெடும் = குன்றினால், கேடுகள் பலவும் உண்டாகும் என்பதாம். குன்ற
= குன்றினால்.
எனவே சங்கத் தமிழிலக்கியங்கள் எதிலுமே பார்பனர்கள் பற்றிய குறிப்புகள்
எதுவுமே இல்லை என்பதும் அவர்கள் ஆதிசங்கரர் மற்றும்
திராவிடத்தில்(திரைவிடத்தில் அதாவது இன்றைய இந்தியாவில்) விதைக்கப்பட்ட
சிசு என்ற ஞானசம்பந்தன் என்ற கொடுஞ்செயல் புரிந்த ஈனர்களின்
வரவுக்குப்பிறகே இங்கு காலூண்றியவர்கள் என்பதையும் அறியலாம்.
இன்றைய பார்ப்பனர் என்ற இந்த ஆரியக் காவிகளை வேண்டுமானால் "நிறவேற்றுமைப்
பார்ப்பவர்", "மற்றவர் பொருளை தட்டேந்தி எதிர்ப்பார்ப்பவர்", "சிறந்த
ஒழுக்கமுடைய தமிழர்களை கெடுக்கப்பார்ப்பவர்", அறவழிச் சமூகத்தை
ஏமாற்றப்பார்ப்பவர்" என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலா
ம்.
9 ஜூலை, 11:15 PM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக