வெள்ளி, 22 டிசம்பர், 2017

பழங்குடி அறிவு பற்றி நூல் இயற்கை வாழ்வுக்கு திரும்ப முடியும்

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
கருத்துகள்
நா.மோகன் தமிழன்
பழங்குடிகளால் நம்மை காப்பாற்ற முடியும்
(படிக்காதவர்களிடம் படித்தவை)
——————————————
நகர வாழ்க்கையை வேண்டாம் என்று கிராமம் நோக்கி பயணிப்பவர்கள் கட்டாயம்
படிக்கவேண்டிய நூல்…
முதல் இரண்டு கட்டூரைகளை படித்தவுடன் மனம் நிலைபெறவில்லை.. கடைசி
கட்டுரையில் எப்படி பழங்குடிகளாவது என்ற விளக்கம்...
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அத்து மீற வேண்டாம்!
இந்த தலைப்பே சொல்லிவிடும் இதில் வாழும் மக்களுக்கு அநீதி வழங்கப்படப்போகி
றது என்று அர்ததம்!
என்னைப்பெரிதும் கவர்ந்த சில வாக்கியங்கள்:
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, காதலியுடன் மான் விரட்டி விளையாடிய இளைஞன்,
இன்று தன் ஐம்பது வயதில், அதே மான் விரட்டிய இடத்தில் அமைந்துள்ள
பண்ணையில் செக்யூரிட்டியாக சல்யூட் அடிக்கிறார். அவருடன் மான் விரட்டிய
தலைவி, சீமெண்ணை வாங்க ரேசன் வரிசையில் நிற்கிறார்! இதில் உங்களை
நிறுத்தி பாருங்கள் புரியும்!!
வாழ்க்கைக்கு வெளியே இருப்பவற்றை அறிந்துகொள்பவர்கள் தம்
வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறார்கள்!
இயற்கைக்கு நெருக்கமாக வாழ்ந்தால் அவர்களை இழிவு படுத்துவதும், அறிவின்
அடிமைகளாக வாழ்ந்தால் அவர்களை அங்கிகரிப்பதும் சமகால சமூக அதிகார
மையங்களின் கோட்பாடு!
எந்த அழிவு நேர்ந்தாலும் மரங்களும் மண்புழுக்களும் அஞ்சப்போவதில்லை
ஏன்னெனில் அவைகளுக்குதான் அறிவில்லையே!
பழங்குடிகளால் நம்மை காப்பாற்ற முடியும்!
நாமும் பழங்குடிகளாக முடியும்!
பழங்குடிகளாக மாறுவதற்கான வழிமுறையையும் சொல்லியிருக்கிற
ார்..
கொடைப்பொருளாதாரம் என்பது பழங்குடிகளின் வாழ்வியல் ஆனால் அவர்களுக்கு
இப்படி ஒரு பெயர் தெரியாது!
படிக்காத பழங்குடிகளிடமிருந்து நாம் படிக்கவேண்டியவை ஏராளம் உள்ளன!
நூலாசிரியர் : ம செந்தமிழன்
செம்மை வெளியீட்டகம்
தற்சார்பு(பழங்குடி) வாழவியலுக்கு திரும்பும் எண்ணம் உள்ளவர்கள் ம
செந்தமிழனின் நூல்கள் படித்து, காணொளிகளை பார்தது மற்றும் பயிற்சி
வகுப்புகளில் கலந்து பயன்பெறலாம்!
# தற்சார்பு_வாழ்வியல்

அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்
ம.செந்தமிழன்
நூல் இயற்கை வாழ்வு மெய்யியல் புதுமுயற்சி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக