வெள்ளி, 22 டிசம்பர், 2017

கொடைக்கானல் மலையடி வள்ளல் மன்னன் வேட்டுவர் பாடிய கொங்கு சாத்தன்

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் , 6 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
முப்பாட்டனின் நினைவுகளோடு
# இனிய_இரவு ...
கழக கால வன்புல (குறிஞ்சி,முல்ல
ை,பாலை) மன்னர்கள் ஒரு பார்வை;
1) கொங்கு நாட்டு கோடைக்கானல்
(கோடை மலை) மலையை ஆண்ட,
# வேட்டுவர் குல மாமன்னன் கடிய நெடுவேட்டுவன்,
(பெருந்தலை சாத்தானார் பாடிய புறம் 205):-
வேட்டுவன் பொதுப் பெயராற் கூறப்படினும், இத் தலைமகனது
இயற்பெயர் # நெடுவேட்டுவன் என்பதாம்.
கடியமென்பது நெடுவேட்டுவனது ஊர்; இது கோடைமலைக்கடியிலுள்ளது.இவன்
தன்னைத் துணைவேண்டியவர்க்குப் பெரும்புகலாகி, ஆதரவு நல்குபவன்;
பகைத்துப் பொரக்கருதுவாரை அவர் வலியறுத்துக் கருத்தழிவிக்கும்
காட்டாண்மையுடையவன்.
கொடைவண்மையால் இவன்பால் பரிசிலர் கட்கு மிக்க தொடர்புண்டு. அதனால்,
கடலுக்குச் சென்ற முகில், நீர் பெற்றன்றி
வாராதவாறு போல, இந் நெடுவேட்டுவனைக் காணும் பரிசிலர் இவனது
கொடை நலத்தைப்பெற்றன்றிப் பெயர்ந்து போகாரென்னும் பெருமை
இவனுக்குப் பிறங்கியிருந்தது.
கோடைமலை இவனுக்கு உரியது. இக்காலத்தே கோடைக்கானல் என்ற பெயரால்
சிறப்புற்று விளங்கும்
மலையே இக் கோடைமலை. கோடைக்காலத்தில் வேனில் வெம்மை
பொறாது செல்லும் செல்வமாக்கட்கு இக் கோடைமலை இன்னும்
பெருந்தட்பந்தந்து இன்புறுத்தி யிலங்குகிறது.
பெருந்தலைச்சாத்தனார், ஒருகால் இவனைக்காணச்சென்றார்.
பெருந்தலையென்பது சாத்தனாரது ஊர். அது கொங்குநாட்டில் உளது.
இந் நெடுவேட்டுவனுடைய புகழ் சாத்தனார்க்கு இன்பந் தந்தது. இவனைப்
பாடிவந்த பரிசிலர் களிறும் பொருளும் பெற்றுச் செல்லும் சிறப்பு இவர்க்குப்
பேருவகையளித்தது.
அவனை நோக்கி புலவர்
" வேட்டுவ, முடிவேந்தர்பாற் சென்றால் அவர்கள் கொடையில்
விருப்பின்றி, அது வேண்டிவரும் பரிசிலர்க்கு நீட்டித்து நல்குவது இயல்பு.
அதனையறிந்தே எம்போலும் பரிசிலர் அவர் விருப்பின்றி நல்குவதை
விரும்புவதில்லை.நின்பால் வரும் பரிசிலர், கடற்குச் சென்ற முகில் நீரின்றிப்
பெயர்ந்து செல்லாததுபோலப் பரிசிலின்றிப் போவது கண்டிலேன்., நீ
வருத்தமின்றி வாழ்வாயாக” என்று புகழ்கிறார்.
++++
@# தமிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக