|
அக். 12
| |||
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன்
இலக்கு 50 ல் # பதிவு_50 .. முற்றும்...
(பாவாணர் கட்டுறை பாணர்_3)
+++++++
அரசர் பாணர்க்குப் புலவுச் சோறு, இனிய மது, பொன்னரி மாலை,
வெள்ளிநாராற்றொடத்த பொற்றாமரைப்பூ. களிறு, குதிரை பூட்டிய தேர்
முதவியவற்றை நிரம்பக் கொடுத்தாகப் புறநானூற்றில் பல பாடல்களுள்.
இவற்றுள், பொன்னரி மாலையை விறலி என்னும் பாணிச்சிக்கும் பொற்றாமரைப் பூ
வைப் பாணனுக்கும் சூட்டுவது வழக்கம்.
“முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்த் ஆயிரம் பொன்பெறுப”
------------------------------ -----(சிலப்.ப.121)
என்பதால், மாதவி பெற்றதுபோலப் பாணரும் தம் திறமைக்கு 1008 கழஞ்சு பெறும்
வழக்கமிருந்த்தாகத் தெரிகின்றது.
11ஆம் புறப்பாட்டில் பாடினிக்குச் சிறந்த பொன்ன்னி கலத்தையும் பாணனுக்கு
வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமைரைப் பூவையும் சேரமான் பாலைபாடிய
பெருங்கடுங்கோ அளித்தாகக் கூறப்பட்டுள்ளது.
126ஆம் புறப்பாட்டில், மலையமான் திருமுடிக்காரி பகைவருடைய யானையினது
(நெற்றிப்) பட்டத்திற் பொன்னைக் கொண்டு செய்த வாடாத பொற்றாமரைப் பூவைப்
பாணரது தலைபொலியச் சூட்டியதும்,
203ஆம் புறப்பாட்டில், சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல்
இளங்சேட்சென்னி பாணர்க்குப் பகைவர் அரண்களைப் போர்செய்து அழிக்கும்
முன்பெ கொடுத்ததும் கூறப்பட்டன.
பாணர் இங்கனம் பல அரசரிடம் சிறப்புப் பெற்றரேனும், பொதுவாக வறுமையால்
வருந்தினரென்றும், வள்ளல்களைத் தேடி மலையுங் காடும் அலைந்து
தரிந்தனரென்றும் கி.மு. 1000 ஆண்டிற்குக் குறையாத தொல்காப்பியமே
கூறுகின்றது.
“கூத்தரும் பாணரும் பொருநரும்
விறலியும்ஆற்றிடைக் காட்சி உறழத்
தோன்றிப்பெற்ற பெருவளம் பெறா அர்க் கறிவுறீஇச்சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்”
(புறத்.36)
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் பாணர் வறுமையும், அவருள் ஒருவர்
தாம் பரிசுபெற்ற வள்ளலிடம் அது பெறாத பிறரை ஏவி ஆற்றுப்படுத்தும்
கூறப்பட்டன. சங்க நூல்களிலும் தனிப்பாடல்களிலும் பாணராற்றுப்படைக்கு
உதாரணங்கள் நிரம்பவள.
இங்ஙனம் பண்டைக்காலத்தே பாணர்க்கு வறுமை தோன்றியதற்கும், அது பின்பு
முற்றிப் பிணப்பறை தவிரப் பிறவழிகளிற் பாண்டொழில் நடத்தவிடாது
கெடுத்தமைக்கும் காரணம் ஆரியவர்ணசிரமத்தால் பாணர் தாழ்த்தப்பட்டதும்
ஆரியர் தமிழ் இசையைப் பயின்றதுமே.
பாணர் திண்டாதார் அல்லது தாழ்ந்தோராகவே அரசரிடத்தும் பெருமக்களிடத்தும்
அண்டமுடியாது போயிற்று, இவ்விழிவு திருநீலகண்ட யாழ்ப்பாணர்,
திருப்பாணாழ்வார் போன்ற அடியார்களைக்கூட அடுத்தமை அவாக்ள்
சரித்திரங்களிற் காணலாம்.
பாணர் வாய்ப்பாட்டையும் யாழையும் ஊக்குவாரின்றிக் கைவிட்டனர். அதனால்
இசைத்தமிழ் அழிந்தபின் எஞ்சியுள்ள ஒருசில இசைத்தமிழ்ச் சூத்திரங்கட்கும்
குறியீடுகட்கும் உண்மைப் பொருள் காண்டல் அரிதாய்விட்டது.
இப்போது பாணரெனப் படுவார். மாடு தின்னாமையும் பிணப்பறை
யடியாமையும்பற்றிப் பறையரினும் சற்று உயர்வாயிருப்பினும், தம் பண்டைத்
தொழிலையும் பெருமையும் இழந்தவராயே உள்ளனர்.
பண்டைக் காலத்தில் பட்டத்தியானைமேல் ஏறி அரசருடைய விளம்பரங்களைப்
பறையறைந்து நகரத்தார்க்கு அறிவித்த வள்ளுவரும் பாணர் அல்லது பறையரே,
சாதாணப் பறையர் பொதுமக்கட்கும், வள்ளுவர் அரசர்க்கும்
பறையறைகிறவராயிருந்தனர். இதுவே வள்ளுவரின் ஏற்றத்திற்குக் காரணம்.
இன்றும் தென்னாட்டிற் சில சிற்றூர்களில் பறையர் கோயில் மேளம் என்னம்
மணப்பறை பயில்வதையும் அதை மேல்வகுப்பாரில்
லங்களில் இருவகை வினைகட்கும் வாசிப்பதையும் காணலாம். இசைத்தொழில் நடத்த
முடியாத பாணரெல்லாம் கூடைமுடைதல், மீன்பிடித்தல் முதலிய பிற தொழில்களை
மேற்கொண்டுள்ளனர்.
ஆரியர்(பிராமணர்) முதன் முதலாய் வாய்பாட்டும் நரப்புக் கருவியும் பயின்று
இதுபோது தோற்கருவியும் பயில்கின்றனர். ஆயினும் ‘நாகசுரம்’ என்னும்
துளைக்கருவிகளையும் பயில்வதில்லை. அவை தாழ்ந்தவை என்று எண்ணப்படுதலான்.
11ஆம் நூற்றாண்டு வரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்தமை,
நம்பியாண்டார் நம்பியாலும் முதலாம் இராசராச சோழனாலும் தில்லையம்பலத்தி
ற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு,
திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் நியமிக்கப்பட்டமையாலும்
விளங்கும்.
ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று ஆதியில் ஓர் விலக்கு இருந்தது,
மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில் பிராமணர் “பாட்டுப்
பாடுவது, கூத்தாடுவது……………இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கர்மத்தினால்
பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
வேதத்தை ஒதாது வரிப்பாட்டைப் பாடி வேத ஒழுக்கத்தினின்றும் தவறியதால் சில
பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர்
என்னும் செய்தி, சிலப்பதிகாரத்தில்,
“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதி” (புறஞ்சேரி,38-9)
என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது.
ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னமே தமிழர்க்கு இசைத்தமிழ் இருந்த்து.
மொழிப் பகுதியாக்கினது தமிழிலன்றி வேறு எம்மொழியினுமில்லை.
ஆரிய வேதங்களில் ஒன்றான சாமவேதம் இசையோடு கூடியதேனும், அவ்விசை
பிறநாடுகளிற் போல் மந்திரத்திற்கரிய அளவு சாமனியமான தேயன்றித் தமிழிசைபோல
விரிவாய் ஆலாபித்துப் பாடப்படுவதன்று, தென்னாட்டுத் தமிழிசையைப்
பின்பற்றியே சமற்கிருத்த்தில் இசைநூல்கள் பிற்காலத் தெழுதப்பட்டன.
கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே முதன்முதலாய் வடமொழியில் இசைநூலெழந்த தென்று
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமது கருணாமிர்த சாகரத்திற் கூறியுள்ளார்.
ஆகவே ஆரிய வேத்த்தினின்றும் இந்திய இசை எழுந்த்தென்பது அறியாதார் கூற்றே.
வேத வொழுக்கத்திற்கு மாறான மேனாட்டு அறுவைமுறை மருத்துவத்தை எங்ஙனம்
ஆரியர் பிற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனரோ, அங்ஙனமே தமிழர்
இசையையும் முற்காலத்தப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனர்.
வடநூல்களிற் கூறப்படாத பல தோற்கருவிகள் தமிழ்நாட்டிலுருந்தன. பல
உயர்களின் தோலையும் சவ்வையும் ஊறவைத்துக் கிழித்துப் பல்வகைப் பறைகட்குக்
கட்டுவது பாணர்க்கே ஏற்கும்; இசைவல்ல ஓர் வகுப்பார் இசைக்கருவிகள்
செய்பவராயு மிருத்தல் வேண்டும். இசைநூற்கு இன்றியமையாத குறியீடுகளெல்லாம்
இன்றும் தமிழிலுள்ளன.
++++
நன்றி நன்றி..
முத்தமிழில் இசைத்தமிழில் இசைத்தமிழ்,நாடகத்தமிழ் வளர்த்த
# இசைக்குடி ப"றை"யர்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்குமான தீர்வு,மற்றும்
பிற தமிழ் குடிகள் அவர்களுடன் முரன்படும் இடங்கள் என அனைத்தும் எனது
பாவாணர் வழி 50 பதிவுகளின் வழி ஆராயப்பட்டுள்ளத
ு...
வாழ்க தமிழ்...
வாழ்க தமிழரின் முதல் இசை # பறை...
இசைத்தமிழ் வள்ளுவர் பாணர் பறையர் பாவாணர்
இலக்கு 50 ல் # பதிவு_50 .. முற்றும்...
(பாவாணர் கட்டுறை பாணர்_3)
+++++++
அரசர் பாணர்க்குப் புலவுச் சோறு, இனிய மது, பொன்னரி மாலை,
வெள்ளிநாராற்றொடத்த பொற்றாமரைப்பூ. களிறு, குதிரை பூட்டிய தேர்
முதவியவற்றை நிரம்பக் கொடுத்தாகப் புறநானூற்றில் பல பாடல்களுள்.
இவற்றுள், பொன்னரி மாலையை விறலி என்னும் பாணிச்சிக்கும் பொற்றாமரைப் பூ
வைப் பாணனுக்கும் சூட்டுவது வழக்கம்.
“முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்த் ஆயிரம் பொன்பெறுப”
------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக