|
அக். 11
| |||
பிராமணர்கள் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
குருவடி பணிந்து
1. ஆகமம் என்றால் என்ன?
ஆகமம் என்ற சொல்லுக்கு ' வந்தது ' என்று
பொருள்.
ஒ-டு; ஆகமார்த்தம் து தேவானாம் கமனார்த்தம் து
ரக்ஷஸாம்
குரவே கண்டாரவம் தத்ர தேவதாஹ்வாநு லாஞ்சனம்
2. ஆகமம் எங்கிருந்து வந்தது?
இறைவனிடம் இருந்து வந்தது.
'வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்' என்று
திருமந்திரம் கூறும்.
ஆகவே வேதங்களோடு ஆகமங்களும் மெய்யை விளக்கும்
மெய் நூல்களாம். இவை மெய்யாகிய இறையிடம்
இருந்து வந்தவை. மெய்யாகிய இறையின் மெய்
வாக்குகள். இவை மெய்யிடம் இருந்து வந்து, மெய்யை
விளக்கும் மெய் நூல்களாக இருப்பதால் இவற்றை
மெய் என்றே கொள்வர்
3. ஆகமம் எந்த மொழியிலே சொல்லப்பட்டது?
எங்கே சொல்லப்பட்டது?
சுத்தமாயா தத்துவத்திலே சூக்குமை வாக்கினால்
சிவபெருமான் சதாசிவமூர்த்தியாக இருந்து
சொல்லப்பட்டது.
நாம் இருக்கும் உலகத்தொகுதி பிரகிருதி மாயையைச்
சேர்ந்தது. இங்கு ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்குக்கும்
மொத்தமாக நூற்று அறுபத்து நான்கு புவனங்கள்
உள்ளன. இங்கு தொடர்பாடலுக்குரிய வாக்கு வைகரி .
அதாவது நமது எண்ணம் கருவாகி மனதில் உருவாகி
வாயினூடாக மற்றவர்களுக்கு கேட்கக்கூடிய ஓசையுடன்
வெளிப்படுத்தப்பட்டு தொடர்பாடல்
நடைபெறுகின்றது.
இதற்கு அப்பால் அசுத்தமாயா தத்துவத்தில் வித்தியா
தத்துவங்கள் ஏழிற்குமாக இருபத்தேழு புவனங்கள் உள்ளன.
இங்கு தொடர்பாடலுக்குரிய வாக்கு மத்திமை .
அதாவது நமது எண்ணம் மனதில் கருவாகி முழுமையாக
உருப்பெற்றதுமே மற்றவர்களுக்கு தொடர்பாடல்
நடைபெறுகின்றது. இங்கு ஓசை இல்லை.
இதற்கும் அப்பால் சுத்தமாயா தத்துவத்தில் சிவ
தத்துவங்கள் ஐந்திற்குமாக முப்பத்துமூன்று புவனங்கள்
உள்ளன. இங்கு தொடர்பாடலுக்குரிய வாக்கு
பஸ்யந்தி . இங்கு நமது எண்ணம் மனதில் கருவாகி நமக்கே
நமது எண்ணம் முழுமையான உருவாகத் தெரிவதற்கு
முன்னமே மற்றவர்களுக்கு தொடர்பாடல் நடந்துவிடும்.
இந்த முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டவன் இறை.
அவன் உறையும் இடமும் இந்த முப்பத்தாறு தத்துவங்களுக்கு
உட்பட்டதல்ல. அதனால்தான் இறையை நாம் தத்துவ அதீதன்
என்கின்றோம். அதீதன் என்றால் (தத்துவங்களுக்கு)
அப்பாற்பட்டவன் என்று பொருள். இந்த
அப்பாற்பட்ட இடத்திலே தொடர்பாடலுக்குர
ிய
வாக்கு சூக்குமை. இதை பரை வாக்கு என்றும் கூறுவர். இங்கு
எண்ணம் கருவாகி உருவாகத் தொடங்க முன்னரே
தொடர்பாடல் நடந்து முடிந்துவிடும். ஆகவே இங்கு
என்ன மொழியில் உரையாடல் நடந்தது என்ற வினா
எழ முடியாது.
மாயா தத்துதவங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன், சிவ
சாரூபம் (சிவனுடைய உருவத்தைப்) பெற்று சதாசிவ பதத்தில்
சுத்தமாயா தத்துவ புவனங்களில் வந்து உறையும் பிரணவர்
முதலிய பத்து சிவன்களுக்கும் அவர்கள் ஒவ்வொருவர்
சார்பாக இவ்விரண்டு சிவன்களுக்குமாக
மொத்தம் முப்பது சிவன்களுக்கு உபதேசித்தார்.
இவ்வாறு உபதேசிக்கப்பட்ட பத்து ஆகமங்களும் சிவபேத
ஆகமங்கள் எனப்படுகின்றன.
இவ்வாறே உருத்திர பதம் பெற்று இதே புவனங்களில்
வந்துறையும் பதினெட்டு உருத்திரர்களுக்கும் இவர்கள்
ஒவ்வொருவர் சார்பாக ஒவ்வொரு
உருத்திரருக்குமாக மொத்தம் முப்பத்தாறு
உருத்திரர்களுக்கு உபதேசித்தார். இவ்வாறு உபதேசிக்கப்பட்ட
பதினெட்டு ஆகமங்களும் உருத்திர பேத ஆகமங்கள் என
அழைக்கப்படுகின்றன. இவ்வாறாக மொத்தம்
அறுபத்தறுவருக்கு சிவன் ஆகமங்களை உபதேசித்தான் இந்த
விபரம் திருமந்திரத்தில் காணப்படுகின்றது.
“அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே”.
- திருமந்திரம் பாடல் 57
இவ்வாறு முன்னர் முப்பது சிவன்களுக்கும், முப்பத்தாறு
உருத்திரர்களுக்கும் சொல்லப்பட்ட இருபத்து எட்டு
ஆகமங்களையும் காஷ்மீரத்தில் உள்ள மகேந்திர மலைச்சாரலில்
சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய
நால்வருக்கும் கல்லால மர நீழலில் அமர்ந்து உபதேசித்தார்.
”மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்....”
- திருவாசகம்
பரசிவனானவர் சதாசிவன், உருத்திரர்களுக்
கு மட்டுமல்லாது
சக்தி, மகேஸ்வரன், பிரம்மா, திருமால் ஆகியோருக்கும்
ஆகமங்களை உபதேசித்தருளினான். இந்த ஆகமங்களில் ஒன்பது
ஆகமங்களையே கைலாய மலைச்சாரலில் நந்தி தேவருக்கு
உபதேசித்தார்.
” சிவமாம் பரத்தினிற் சக்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
நவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே”
– திருமந்திரம் பாடல் 62

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக