திங்கள், 25 டிசம்பர், 2017

சாதவாகனர் ஈரைம்பதின்மர் அல்ல இமயவரம்பன் காலம் இமயம் படையெடுப்பு

aathi tamil aathi1956@gmail.com

அக். 15
பெறுநர்: எனக்கு
சேரரும் சாதவாகனரும் – 1
JUN 29, 2017 / சேமால் / வரலாறு
/ ஆதன், கன்னர், கௌரவர், சதவாகனர்,
சேமால், சேரர், சேரல், நூற்றுவர்,
பாண்டவர், பாண்டியர், பாரதம், மகாபாரதம்,
மாமூலனார், மோரியர்
சாதவாகன அரசினை பழந்தமிழ் வேந்தர்களில் சேர வேந்தனான உதியஞ்சேரலாதனுக்கு
சமகாலத்தவர் என்றும் சேரன் செங்குட்டுவனுக்கு சமகாலத்தவர் என்றும்
இரண்டுவிதமான ஆய்வு கட்டுரைகள் மற்றும் உரை விளக்கங்கள் இதுவரை
வெளியிடப்பட்டுள்ளது. அவை,
1. சேர வேந்தர்களில் மூத்தவரான உதியஞ்சேரலாதன் பெருஞ்சோறிட்ட ஐவர்
ஈரைம்பதின்மர் போரானது பாண்டியருக்கும் சாதவாகனருக்கும் இடையில் நடந்த
போர் எனும் ஆய்வு.
2. கண்ணகிக்கு கோயில் கட்டிய சேரன் செங்குட்டுவனை பற்றி குறிப்பிடும்
சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் நூற்றுவர் கன்னர் என்பது சாதவாகனரை தான்
குறிக்கும் எனும் ஆய்வு.
இவ்விரண்டு ஆய்வுகளுமே அடிப்படை ஆதராமற்றவை.  இந்த ஆய்வுகளால் விளையும்
சிக்கல்கள் சில,
1. சேரரில் உதியஞ்சேரலாதனுக்கு பின் வந்தவர்களே பதிற்றுப்பத்தில்
பாடப்பட்டுள்ள சேரர் அனைவரும். சாதவாகனர் உதியஞ்சேரலின் சம காலத்தவர் என
கூறினால், சாதவாகனர் சேரர்களுக்கு முன்பே பேரரசர்களாக திகழ்ந்தனர்
என்றும் சேரப்பேரரசு சதவாகனருக்கு பின்பு உருவானது என திரிக்கவும்
வாய்ப்பாக அமையும். இதனால் சேரரின் காலம் கிபி முதலாம் நூற்றாண்டு என
ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.
2. உதியஞ்சேரலாதனின் மகனான இமயவரம்பன் அவனது முதுமை காலத்தில் முதலாம்
கரிகாலனுடன் வெண்ணிப்போர் புரிந்து உயிர்நீத்தான். சோழரில் மிகவும்
போற்றிப்பாடப்பட்ட கரிகாலனும் சாதவாகனருக்கும் மோரியருக்கும்
பிற்காலத்தவன் என திரிக்க வாய்ப்பாக அமையும்.
3. இமயவரம்பனின் சமகால புலவரான மாமூலனாரால் பாடப்பட்ட அதியன், மோகூர்
பழையன் போன்றோரும் சாதவாகனருக்கு பிற்காலத்தவர் என திரிக்க வாய்ப்பாக
அமையும்.
4. சேரன் செங்குட்டுவனுக்கு முற்காலத்தவரான பாண்டியன் நெடுஞ்செழியனை
சாதவாகனருக்கு பிற்காலத்தவர் என திரிக்க வாய்ப்பாக அமையும்.
5. உதியஞ்சேரலுக்கு பிற்காலத்தவரான மாந்தரஞ்சேரல் எனும் சேரனுடனான போரில்
வென்ற தலையாணங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சாதவாகனருக்கு
பிற்காலத்தவர் என திரிக்க வாய்ப்பாக அமையும்.
அதாவது சேரர், சோழர், பாண்டியர் மற்றும் தொண்ட மண்டல அதியர் என
அனைவரையுமே சாதவாகனரின் பிற்காலத்தவர் என திரிக்க இவ்விரு தமிழர் விரோத
ஆய்வுகளும் துணைபோகின்றன.
ஆனால் உண்மை என்னவென்றால் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தில் கூட
சாதவாகனர் பேரரசாக உருவெடுக்கவில்லை என்பதாகும்.
இக்கட்டுரையில் புறநானூற்று பாடல் குறித்து காண்போம். அடுத்த கட்டுரையில்
சிலப்பதிகாரம் குறிப்பிடும் நூற்றுவர் கன்னர் யார் என காண்போம்.
உதியஞ்சேரலும் சாதவாகனரும்;
உதியஞ்சேரலை குறிப்பிடும் பாடல் முடி நாகராயரால் பாடப்பட்ட கீழுள்ள
புறநானூற்று பாடலாகும்,
“அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூம் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”
-புறம் 2 (முரஞ்சியூர் முடி நாகராயர் பாடியது. பாடப்பட்டவர் பெருஞ்சோற்று
உதியஞ்சேரலாதன்)
இதன் பொருள் என்னவெனில் “ஒளிரும் பிடரி மயிரை உடைய குதிரை போன்ற ஐவரோடு
சினம் கொண்டு நிலையான மணி முடியை வெல்ல போருக்கான நாள் குறித்து
ஈரைம்பதின்மர் தும்பைப் போர் புரிந்து அழியும் (சாகும்) வரையில்
பெருஞ்சோறு கொடுத்தாய்” என்பதே!
இதில் சொல்லப்பட்ட ஐவர் யார் ஈரம்பதின்மர் யார் என்பதில் தான் எத்தனை திரிப்புகள்?
சங்க கால பாடல்களில் பாரதப் போரைக் குறித்துள்ள புறநானூறு மற்றும்
பதிற்றுப்பத்து பதிகங்களில் ஈரைம்பதின்மர் என்று மட்டுமே உள்ளது.
நூற்றுவர் கன்னர் என்றோ சாதவாகனர் என்றோ எந்தவொரு குறிப்பும் இல்லை.
சாலிவாகனர் என்ற பிராகிருத மொழிப் பெயரின் விளக்கமாக வடநாட்டவர்
குறிப்பிடுவது சாலி (குதிரை) வாகனர் என்பதாகும். குதிரையை வாகனமாக
கொண்டவரே சாலிவாகனர் என்பதற்கு பல சான்றுகளை அவ்வாய்வாளர்கள் முன்
வைத்துள்ளனர். எனவே புறநானூற்று பாடல் குறிப்பிடும் ஈரைம்பதின்மர் என்பது
சாதவாகனரை குறிக்காது என்பதை அறியலாம்.
மேலும் இதுவரை எந்த ஒரு சான்றும் சாதவாகனர் தமிழ் வேந்தர்களுடன்
போரிட்டதாக கிடைக்கவில்லை. ஒருவேளை ஈரைம்பதின்மர் என்பது சாதவாகனரை தான்
குறிக்கும் என எடுத்துக்கொண்டாலும்,
உதியஞ்சேரல் காலம் மற்றும் சாதவாகனர் காலம் என்னவென்றே உறுதி செய்யாமல்
உதியஞ்சேரல் சதவாகனருக்கு சோறு போட்டார் என எழுதுவதை ஆய்வு என சொல்ல
இயலாது.
சாதவாகனர் /சாலிவாகனர் தற்போதைய மகாராசுடிரத்தில் மோரியரின் (அசோகரின்)
ஆட்சி வீழ்ந்த பின்னர் (கிமு இரண்டாம் நூற்றாண்டு) தனி அரசுரிமை
பெறுகிறது.
உதியஞ்சேரலாதனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பற்றி கிடைத்துள்ள
குறிப்புகளின் அடிப்படையில் கிமு நான்காம் நூற்றாண்டு என பின்வரும்
சான்றுகளின் அடிப்படையில் உறுதி செய்யலாம்.
இமயவரம்பவன் நெடுஞ்சேரலாதன் எந்தவொரு வட நாட்டு அரசையும் வென்றதாக
குறிப்பிடாமல் இமயத்தில் விற்கொடியை பொறித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஆரியரை அடக்கியதாகவும், யவனரை சிறையில் அடைத்ததாகவும், கடம்பனை
அழித்து அவன் காவல் மரத்தில் முரசு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதிலிருந்து விளங்குவது என்னவெனில் இமயவரம்பன் படை நடத்தி இமயம்
சென்றபோது அவனை எதிர்க்க அங்கு எதிரிகளே இல்லை என்பதே.
அதாவது இமயவரம்பன் மோரியர் அரசமைப்பதற்கு முன்னர் நந்தர் வலிமையின்றி
இருந்த காலகட்டத்தில் தான் வடக்கில் போர் தொடுத்து போயுள்ளார். இதற்கு
மாமூலனாரின் பாடல்கள் சான்றாக உள்ளது.
மாமூலனார், நந்தர் மற்றும் மோரியரின் அரசுகளையும், மோரியரின் தக்காண
படையெடுப்பைப் பற்றிய குறிப்புகளையும் தன் பாடல்களில் கொடுத்துள்ளார்.
இவற்றையெல்லாம் குறித்த இவர் தமிழகத்தில் இருந்த உதியஞ்சேரல், இமயவரம்பன்
நெடுஞ்சேரல், இமயவரம்பனுடனான முதலாம் கரிகாலனின் வெண்ணிப் போர், வேங்கட
மலையை ஆண்ட புள்ளி, அதற்கு வடக்கே மூவர் கட்டுப்பாட்டில் இருந்த
மொழிப்பெயர் தேயம், கோசர், மோரியரை வென்ற பழையன், அதிகன், வடுகர் மற்றும்
நெடுவேல் ஆவி போன்றோரையும் தன் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் பாடல்களை கவனித்தால் ஒன்று தெளிவாகும். அதாவது, பதிற்றுப்பத்தின்
முதல் இரு பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான உதியஞ்சேரல் மற்றும்
நெடுஞ்சேரலாதன் இமயவரம்பனைப் பற்றி எழுதிய இவர், இமயவரம்பனுக்கு பின்னர்
வந்த செல்கெழு குட்டுவன் பற்றி எழுதவில்லை. அதேபோல் உதியஞ்சேரல்
மூத்தோர்களுக்கு உண்ண உணவு கொடுத்ததையும், நாட்டை விரிவாக்கியதையும்
சொன்னாரே ஒழிய பாரதப்போரில் பெருஞ்சோறு போட்டது பற்றிக் குறிப்பிடவில்லை.
இதிலிருந்து விளங்குவது என்னவெனில், மாமூலனார் தன் வாழ்நாளில் தான்
கண்டவற்றை மட்டுமே பாடல்களில் குறித்துள்ளார்.
அதாவது மகத நந்த அரசின் இடைக் காலங்களில் இருந்து மோரியப் பேரரசின்
பிந்து சாரர் ஆட்சியின் இறுதிக் காலம் வரை மாமூலனார் வாழ்ந்துள்ளார் என
கருதலாம்.
மோரியப்பேரரசின் தொடக்க காலத்தில் வாழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின்
தந்தையான உதியஞ்சேரலாதன் மோரிய பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அரசுரிமை
பெற்ற சாதவாகனருக்கு போரின் போது எவ்வாறு சோறு போட்டதாக கருத இயலும்.
மோரியர் காலத்துக்கு பின் (கிமு 200) மகாராசுட்டிரத்தில் ஆட்சியை
தொடங்கிய சாதவாகனர்கள் எப்படி நந்த பேரரசிற்கு (கிமு 300) முன் வாழ்ந்த
உதியஞ்சேரலாதனுடன் குறிப்பிடபடும் ஈரைம்பதின்மர் (நூற்றுவர்) ஆவார்கள்?
மோரிய பேரரசு உருவாகும் முன்பே ஐவருடன் போரிட்ட ஈரைம்பதின்மரை, மோரிய
பேரரசின் வீழ்ச்சிக்கு பின் உருவான சாதவாகனர் என குறிப்பிடும் அறிஞர்
பெருமக்களின் நோக்கம் என்ன?
அனைத்திற்கும் மேலாக ஐவர் ஈரைம்பதின் (மகாபாரத) போரில் ஈரைம்பதின்மர்
அனைவரும் இறந்துவிடுகின்றனர். அவ்வாறு இறந்துவிட்ட ஈரைம்பதின்மர் எவ்வாறு
உதியஞ்சேரலாதனுக்கு (கிமு நான்காம் நூற்றாண்டு) பிற்காலத்தில் கலிங்க
மன்னனான காரவலனுடன் கிமு 150 ஆண்டு எப்படி போரிட முடியும்?
அதை உங்கள் பார்வைக்கு விட்டுவிட்டு அடுத்த கட்டுரையில் சிலம்பில்
குறிப்பிட்டிருக்கும் நூற்றுவர் கன்னர் குறித்து காண்போம் என கூறி
விடைபெறுகிறேன்.
– சேமால்
/ POST VIEWS: / 179
Leave a comment
You must be logged in to post a comment. 

பகிர்வுக்கு:
    
 
இத்தளத்தில் வெளிவரும் கட்டுரைகள் படங்கள் அனைத்தும் karuthiyal.com
ஆசிரியர் குழுவுக்கிற்கே முழு உரிமையும் உடையது. ஆசிரியர் குழுவின்
அனுமதியில்லாமல் படியெடுத்து பகிர்வது சட்டபடி குற்றமாகும்.


இமயமலை மோரியர் மௌரியர் சேரர் மகாபாரதம் பெருஞ்சோற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக