வெள்ளி, 22 டிசம்பர், 2017

ஈவேரா செய்துவைத்த திருமணம் இரண்டு மணப்பெண்கள் தெலுங்கர்

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
இது ஹிந்து தேசம் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
{இவரா பெரியார்?}-{பாகம் -16}...பெரியார் தலைமையேற்று நடத்தி வைத்த
"ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்த பகுத்தறிவு
திருமணங்கள்"..............பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான
கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான்
பெரியாரின் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.
ஆனால் இந்தத் தகவல்களை இப்போதைய திராவிடர் கழக வீரர்கள் அறிவதில்லை.
அவர்கள் ஈ. வெ. ரா என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர்
என்ற நினைப்பில் இருக்கிறார்கள்...............ந
ண்பர்களே ! இந்த ஆதாரத்தைப் படித்துப்பாருங்கள்.........1928-ம்
வருடத்தில் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்கா சுக்கல
நத்தம் கிராமத்தில் நடந்த திருமணங்களைப் பற்றி எழுதுகிறார்
பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி. அவரது கட்டுரை வரிகள் கீழே கொடுக்கப்
பட்டுள்ளது
"சுக்கல நத்தத்தைச் சுற்றியுள்ள 116 கிராமங்களில் பெரியாரின் ‘குடி அரசு’
பத்திரிகையை வரவழைக்கச் செய்து பாமர மக்களிடம் ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்தி வந்தார் சுப்பா ரெட்டியார்….
சுப்பா ரெட்டியார் பக்கத்து வீட்டுப் பெரியவர்களான மு. அழகர்சாமி
ரெட்டியாரையும். மு.சி. சீனிவாச ரெட்டியாரையும் தனித்தனியாக அனுகி, ‘என்
பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர விருப்பமா’ என்று கேட்டார். இரண்டு பேருமே
போட்டி போட்டுக்கொண்டு ‘என் பெண்ணைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள
வேண்டும்’ என்று சொன்னார்கள்….. அப்பாக்கள் இப்படி சுப்பா ரெட்டியார்
வீட்டில் சம்பந்தம் கொள்ள போட்டி போட்டபோது அவர்களது பெண்களோ வேறுவிதமாக
அதிசயக்கத் தக்க வகையில் சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அழகர்சாமி
ரெட்டியாரின் மகள் நாகம்மாளும், ஸ்ரீ நிவாச ரெட்டியாரின் புதல்வி
ரத்தினத் தாயம்மாளும் இளம்வயது முதல் இணைபிரியாத தோழிகள்!
அவர்கள் இருவரும் ‘மணந்தால் ரெட்டியாரின் மகன் அரங்கசாமியையே
இரண்டுபேருமே திருமணம் செய்து கொள்வது. இல்லாவிட்டால் இரண்டு பேருமே
கடைசி வரையில் திருமணமே செய்துகொள்வதில்லை’ என்று சூளுரை
செய்துவிட்டார்கள்
பெற்றோருக்குத் தங்களது பெண்ணின் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க
இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஏற்பாட்டை மாப்பிள்ளை ஒப்புக்கொள்ள வேண்டுமே!
மனம் கலங்கி நின்றார்கள்.
ஆனால் இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அரங்கசாமியோ பெரியாரின்
பத்திரிக்கையான ‘குடி அரசு படித்து குடி அரசின் பெண்களாகவே சொல்லப்படும்
இந்த இரு பெண்களையுமே திருமணம் செய்து கொள்ள நான் ஒப்புக்கொள்கிறேன்’
என்றார். பெண்ணைப் பெற்றவர்கள் மண்ணுலகம் முழுவதுமே தங்கள் கைவசப்பட்டுப்
போனதுபோல மகிழ்ச்சிக்கடலில் திளைத்தார்கள்.
தந்தைப் பெரியார் அவர்களுக்கு விவரங்களை எழுதி திருமண நிகழ்ச்சிக்குத்
தேதி கேட்டார்கள். 28-05-1928 திருமணத்தை நடத்திவைக்க அய்யா மனமுவந்து
ஒப்புதல் அளித்தார்."
- பக் 106, 107 : புதையல் / சின்னக்குத்தூசி / நக்கீரன் வெளியீடு.
சுப்பா ரெட்டியாரின் மகனுக்கு மட்டுமல்ல, அவருடைய உறவினர் ஒருவருடைய
மகனுக்கும் அதே நாளில் ஈ. வெ. ரா தலைமையில் சுயமரியாதைத் திருமணம்
நடைபெற்றது. அந்தத் திருமணத்திலும் ஒரு ஆணுக்கு இரண்டு
பெண்கள்தான்...இதுதான் அந்தக் காலத்தில் பெரியார் நடத்திய சுயமரியாதை
திருமணம்...இவரா பெண்ணுரிமைக்காக போராடியவர்? இவரா பெரியார்?......
.புகைப்பட இணைப்பு(1) "72 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை திருமணம்
செய்தபோது கல்யாண மாப்பிள்ளை பெரியார்,.படம்(2)..குருவை மிஞ்சிய
சீடர்.(தொடரும்) # ஐந்தறிவு_ஜந்து_ஈவேரா
10 ஏப்ரல் 2015,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக