சனி, 25 மார்ச், 2017

திருப்பதி தமிழ் ஓதல் இராமானுசர் கையெழுத்து திருமங்கையாழ்வார் விதித்த கட்டுப்பாடுகள்

aathi tamil aathi1956@gmail.com

6/4/16
பெறுநர்: எனக்கு
சரவணன் சவான்ஜி
தமிழ் தேசியர்கள் சிலரும் தீவிர சைவர்கள் சிலரும் அக்னிகோத்திரம்(
இவனுகளுக்கு எல்லாம் பிரம்மம் தான் நெருப்பில எல்லாத்தையும் மனிதன் உட்பட
போடறது தான் வழிப்பாட்டு முறை ) தறுதலை ஆச்சாரிகள் சிலரும் திருமலையில்
உள்ளது பெருமாள் அல்ல என்று நிறுவ (வேறு வேறு நோக்கங்களோடு ) பெரு
முயற்சி மேற்கொள்கின்றனர் ? வரலாறை படிக்காமலேயே
ஆழ்வார்களையும் நாலாயிர திவ்ய பிரபந்தகளையும்
முழுமையும் படியுங்கள் நெடியோன் மாலோன் மாயோன் என்ற பெயர்களில்
எல்லாம் வைணவம் அழைக்க படுகிறது அது தமிழர்களின் ஆதி மதமே மேலும் தமிழ்
இன்றும் பெருமாள் கோவில்களில் கருவறைக்குள் பாடப்பட்டு வருகிறது
திருப்பதியில் இம்மாதம் முழுதும் காலை சுப்ரபாதம் கிடையாது கோதையின் தமிழ்
திருப்பாவைதான் அனுசந்திக்க படுகிறது இந்த நியமத்தை உண்டாக்கி கோவில் ஒழுகு
என்று சட்டம் செய்து அதை இன்று வரை வைணவர்கள் மீறமுடியாத கட்டுபாடுகளை
விதித்தவர் ராமனுசரே ? அவர் ஓலையில் தன் சாற்று ஒப்பமாக கூட ராமானுஜன்
என்று இடவில்லை இராமனுசன் என்றே பதிவிட்டார் என்பது வரலாறு !!!
ஆழ்வார்களில் முதன்மையானவர் நம்மாழ்வார் இவர் வேங்கடவனிடம் திருவாய்
மொழியில் சரணாகதி செய்கிறார் !! குலசேகர ஆழ்வார் என்ற சேர அரசர் வாயில் படி
கல்லாய் கிடக்கும் பேரு கேட்கிறார் அப்படி படியாய் கிடந்தது பெருமாளின்
பவள வாய் பார்த்திருக்கும் வரம் வேண்டுகிறார் திருமலை பெருமாளின்
வாயிற்படிக்கு இன்றும் குலசேகரன் படி என்றுதான் பெயர் ? ஆனால் இப்பேருகளை
பெற்ற திருமலையை நாம் இழந்து நிற்கிறோம் தீராவிடம் அத்தோடு இப்படி பட்ட
தமிழ் உயர்வுகளை திட்டமிட்டே நம்மிடம் இருந்து மறைத்து ஆரியம் அதனுடன்
கைகோர்த்து கொண்டது ??
மேலும் கருவறைக்குள்ளும் பெருமாள் எழுந்தருள பண்ணும் ஊர்வலங்களிலும் தமிழ்
வேதம் எனப்படும் திருவாய்மொழி தவிர இதர பிரபந்தகள் பாடப்பட்டு செல்லும்
போது அத்தமிழை கேட்க பெருமாள் பின்னாலே செல்கிறார் என்றும் பெருமாளை தேடி
வடமொழி வேதங்கள் அவர் பின்னால் பாடப்பட்டு தேடி செல்கின்றன என்பதே இன்றுவரை
கடை பிடிக்கபட்டுவரும் நிகழ்வு இந்த நியமங்களை செய்தவர் நீலன்
,கலியன்,மூர்க்கன் , எனப்படும் திருமங்கை மன்னன் இவர் ஏற்ப்படுத்திய இந்த
முறை பிறழ்ச்சி அடைந்த போது அதை மீண்டும் உயர்த்தி கடுமையான
கட்டுபாடுகளுடன் நடைமுறைக்கு கொண்டு வந்தவர் ராமானுசர் வடமொழி
வேதங்களுக்கான அத்துணை விளக்கங்களும் வடமொழியில் எந்த நூலிலும் இலலை
என்றும் அது நாலியிர திவ்ய பிரபந்தம் கொண்டே விளக்கி கொள்ளகூடியது என்று
வாதங்களின் மூலம் நிருபித்தவர் ! இன்னமும் நிறைய தரவுகள் உள்ளன
பதிவிடுவதில் நான் மிகுந்த சோம்பேறி மேலும் தட்டச்சு தெரியாது சிறிது
சிறிதாக பதிவுகளை தர முயற்சிக்கிறேன் ? இறுதியாக ஈரோட்டு வெங்காயத்திற்கு
எட்டுநூற்றாண்டுகளுக்கு முன்பே பல புரட்சிகளை செய்தவர் ராமானுசர்
என்பதையும் அவரை வைணவம் தமிழ் தலைவன் என்றே போற்றுகின்றன என்பதையும்
தெரிந்து கொள்ளவும் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக