சனி, 25 மார்ச், 2017

இந்தியா பற்றி தமிழரசன் சாதி

aathi tamil aathi1956@gmail.com

9/4/16
பெறுநர்: எனக்கு
Thamizhneriyan Thamizhan
"இந்தியா எனப்படுவது தேசிய இனங்களின் சிறைக்கூடம் மட்டுமல்ல சேரிகள்
என்னும் தாழ்த்தப்பட்ட மக்களின் லட்சக்கணக்கான சிறைக்கூடங்களும்
உடையதாகும். ஆடுமாடுகளைப் பட்டியலில் அடைப்பதைவிடக் கேவலமான முறையில்
தீண்டத்தகாதவர்களென்ற பெயரில், ஐந்திலொரு பங்கு மக்களை தூரத்துச்
சேரிகளில் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் சனநாயக நாடே இந்தியா"
"இத்தகைய கொடிய சாதியமைப்பின் பின்னணியான பார்ப்பனீயத்தைத் தகர்க்க
கிளம்பியவர்கள் சமணம், புத்தம், சீக்கியமெனத் தனி மதங்களானார்களே தவிர
சாதியமைப்பில் மாற்ற மெதுவுமேற்படவில்லை"
"ஆரியமதம், வைதீகமதம், சனாதன மதமென அழைக்கப்படும் இந்து மதத்தின்
அடித்தளமான சாதியமைப்பை, அம்மதத்திற்குள்
ளிருந்து எதிர்ப்பவர்களையும் சரி முறியடித்து அவர்களையே சாதியமைப்பைப்
பின்பற்றும் படி செய்யும் வல்லாண்மையுடையத
ாய் சாதியமைப்பு இருந்து கொண்டிருக்கிறது என்பதையே. இதைத்தான் உலகப்
பேரறிஞர் மார்க்சும் “இந்தியாவை அராபியர்களும், துருக்கியர்களும்,
தார்த்தாரியர்களும், மொகலாயர்களும் தொடர்ச்சியாக வெற்றி கண்டனர். ஆனால்
காட்டுமிராண்டிகளான அவர்கள் வரலாற்றில் ஒரு நிரந்தர நியதிப்படி
அவர்களிடம் அடிமைப்பட்டவர்களின் உன்னத நாகரீகத்தால் வெற்றி
கொள்ளப்பட்டனர். உடனடியாகவே இந்து மயமாக்கப்பட்டனர
்”எனக்கூறுகிறார்.
"இப்படி சர்வ வல்லமையுடன் நிலைத்து நீடித்து நிற்கும் சாதியமைப்பை
அடியோடு அழிக்க வேண்டுமெனில் அதைப் பற்றிய மார்க்சிய அறிவியல் ரீதியான,
வரலாற்று ரீதியான பார்வையும், அணுகுமுறையும் தேவை. தோற்றம், வளர்ச்சி,
அழிவு, நிலைமைகள் பற்றிய தெளிவும் தேவை"
-தமிழ்த்தேசியத் தலைவர் தோழர் தமிழரசன்
("சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்" எனும் சிறு நூலிலிருந்து
தொகுக்கப்பட்டவை)
http://www.kalakam.in/2013/12/blog-post_7228.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக