ஞாயிறு, 19 மார்ச், 2017

வான்மீகி பற்றி புறநானூறு பாவாணர் சான்று இராமன்

aathi tamil aathi1956@gmail.com

26/12/16
பெறுநர்: எனக்கு
கார்த்திக் பழனி தமிழர்
கம்பர் 12 நூற்றாண்டின் பிற்காலத்தவர் சகோ! 13. இராமாயணப் பனுவல்
முதன்முதல் வான்மீகியாரால் சிற்றளவாகப் பாடப்பட்டிருக்கலாம். பாரதக்
காலத்திற்குப் பின் பதின்தோற்றரவு (தசாவதாரம்) வகுக்கப்பட்டபோது, இது
விரிவடையத் தொடங்கி யிருக்கலாம். "பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கின் தவத்துக் கையவி
யனைத்தும் ஆற்றா தாகலின் கைவிட் டனரே காதலர் அதனால் விட்டோரை விடாஅள்
திருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே" (புறம்.358) என்னும் புறப்பாட்டு
வான்மீகியார்என்னும் புலவரொருவர் பாடியதாக வுள்ளது. இது
அரசுநிலையாமையையும் தவத்தின் மேன்மையையும் அழகாகஎடுத்துக் கூறுவது.
ஆசிரியர் பெயரையும் பாட்டின்பொருளையும் நோக்குமிடத்து, இவர்
இராமாயணவான்மீகியார்தாமோ, அன்றி அவர் வழியினரோஎன்னும் எண்ணம் மின்போல்
தோன்றி மறைகின்றது.// பாவாணார் , தமிழர் வரலாறு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக