|
மார். 8 (11 நாட்கள் முன்பு)
![]() | ![]() ![]() | ||
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
==============================
===========
தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம்
காழ்ப்புணர்ச்சி கக்குவது ஏன்?
==============================
===========
இன்றைய (06.03.2017) தமிழ் இந்து நாளேட்டில், ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய,
“ஷிமோகா மேயரின் அடையாளம் ‘தமிழர்’ மட்டுமல்ல” என்ற பத்தியைப் படிக்க
நேர்ந்தது.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாநகராட்சிக்கு மேயராக தமிழரான திரு. ஏழுமலை
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும்
பாராட்டுகிறோம். அவர் தேர்வு செய்யப்பட்டதற்காகப் பெருமை கொள்கிறோம்.
ஆனால், இது பற்றி தமிழ் இந்துவில் கட்டுரை எழுதியுள்ள ஸ்டாலின் ராஜாங்கம்
பின்வருமாறு தமிழ்த்தேசியத்தைச் சாடுகிறார்.
“சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளும் ஒற்றைத் திசையில் தமிழ்த்தேசியவாத
த்திற்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிடும் காலத்தில் வாழ்கிறோம்.
ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்த்தேசியம் தராத வாழ்வை நவீனத்தின்
விதேச வாழ்வு மூலம் தலித்துகள் பெருமளவு பெற்றிருக்கிறார்கள் என்பதும்
வரலாற்று உண்மையாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியில் ஏழுமலை வருகிறார்.
(ம.ஜ.க. – பா.ச.க. கூட்டணியை மதிப்பிட வேண்டியது தனியானது)”.
தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை
முக்கியக் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துவதில்லை என்ற குறையைத்
தமிழ்த்தேசியராகிய நாங்களும் உணர்கிறோம். அக்குறையை நீக்கும் வகையில்
கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள் வர வேண்டியது மிகமிகத் தேவை.
ஆனால், ஸ்டாலின் ராஜாங்கம் “ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில்
தமிழ்த்தேசியம் தராத வாழ்வை கர்நாடகத்தில் நவீனத்தின் விதேச வாழ்வு
வழங்கியிருக்கிற
து” என்று கூறுகிறார்.
தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்த்தேசியம் ஆட்சியில்
இருந்ததா? இன்றுதான் அது ஆட்சியில் இருக்கிறதா? இல்லை!
இந்தியத்தேசியம் – திராவிடத்தேசியம் இரண்டும்தான் இந்திய விடுதலைக்குப்
பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகின்றன. அவற்றைத் திறனாய்வு
செய்யாமல், ஆட்சியில் இல்லாத தமிழ்த்தேசியத்தை – அதுவும் இப்பொழுதுதான்
குருத்து விட்டுக் கிளம்பும் தமிழ்த்தேசியத்த
ைக் குற்றம்சாட்ட மேற்படி தருணத்தை ஸ்டாலின் ராஜாங்கம் பயன்படுத்திக் கொண்டது ஏன்?
தமிழ் இனத்தின் மீது - தமிழ்த்தேசியத்தின் மீது அப்படிப்பட்ட
காழ்ப்புணர்ச்சி ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு ஏற்படக் காரணம் என்ன?
ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களையும் உடன்பிறப்பாக –
உறவு முறையாகக் கொண்டிருக்கிறது தமிழ்த்தேசியம்! தமிழினத்தில்
பழங்காலத்தில் இல்லாத சாதி முறையும் – சாதி ஒடுக்குமுறையும் - தீண்டாமைக்
குற்றச் செயல்களும் வளர்ந்திருப்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியம்
போராடி வருகிறது. “மக்கள் அனைவரும் சமம் – தமிழர்கள் அனைவரும் சமம்”
என்பதே தமிழ்த்தேசிய அறம்!
கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் மதச்சார்பற்ற சனதா
தளத்தின் வேட்பாளராக திரு. ஏழுமலை அவர்கள் நின்று வெற்றி பெற்றுள்ளார்.
1991 நவம்பர் - டிசம்பரில் கன்னடர்கள் நடத்திய காவிரிக் கலவரத்தில்
கர்நாடகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் – ஒடுக்கப்பட்ட வகுப்புத்
தமிழர்களே! அதுவும் ஷிமோகாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, உயிர் பிழைக்க
அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு
உடன்பிறப்புகளே கணிசமானோர்.
அந்த அச்சத்திலிருந்து அவர்கள் இன்னும் விடுபடாததால்தான், கடந்த 2016ஆம்
ஆண்டு செப்டம்பரில், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட
இனவெறியர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட போது, ஷிமோகாவில் வாழும்
ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் – “தாய்த்தமிழ்
சங்கத்தின்” சார்பில் பேரணியாகச் சென்று, அம்மாவட்ட ஆட்சியரிடம்
தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனர். (தமிழ் இந்து,
15.09.2016). ஷிமேகாவில் தமிழர்களுக்கு – குறிப்பாக ஒடுக்கப்பட்ட
தமிழர்களுக்கு கன்னடர்கள் உயர்வு தருவதுபோல், சித்திரம் தீட்டுகிறார்
ஸ்டாலின் ராஜாங்கம். உண்மை என்ன? ஷிமோகாவில் கணிசமாகத் தமிழர்கள்
வாழ்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திரு. ஏழுமலை அவர்களுக்கு
அங்கு வாழும் அனைத்து சாதித் தமிழர்களும் இன உணர்ச்சி அடிப்படையில்
வாக்களித்திருக்கிறார்கள். இதையும் ஸ்டாலின் ராஜாங்கம் கவனிக்க வேண்டும

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக