ஞாயிறு, 19 மார்ச், 2017

இந்தியராணுவம் வீரர்கள் துன்புறுத்தல் தரமற்ற உணவு தற்கொலை ஹிந்தியா சேனா

aathi tamil aathi1956@gmail.com

மார். 10 (9 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
ராணுவத்தில் அடிமைகளாக நடத்துகின்றனர்: மற்றொரு வீரர் சமூக வலைதளத்தில் புகார்
Updated: March 9, 2017 08:06 IST
சிந்தவ் ஜோகிதாஸ்
ராணுவ உயரதிகாரிகள் வீரர்களை அடிமைகளைப் போல நடத்து கின்றனர் என்று ராணுவ
வீரர் சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
எல்லை பாதுகாப்புப் படையைச் (பிஎஸ்எப்) சேர்ந்த வீரர் தேஜ் பகதூர் சமூக
வலைதளத்தில் அண்மையில் வெளியிட்ட வீடியோவில், பி.எஸ்.எப். வீரர்களுக்கு
தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் மகாராஷ்டிராவின் நாசிக் ராணுவ கன்டோன்மென்டில் பணியாற்றி வந்த
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ராய் மேத்யூ, பத்திரிகை
ஒன்றுக்கு அண்மையில் ரகசியமாக பேட்டியளித்தார். அதில் ராணுவ முகாம்களில்
நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து விவரித்திருந்தார்.
அந்த வீடியோ சமூக வலை தளத்தில் வெளியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு
நாசிக் கன்டோன்மென்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ராய்
மேத்யூவின் உடல் மீட்கப்பட்டது.
மேலும் ஒரு வீரர் புகார்
இந்நிலையில் சிந்தவ் ஜோகிதாஸ் என்ற ராணுவ வீரர் சமூக வலைதளத்தில் நேற்று
ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ராணுவ வீரர்களை, அவர்களின் உயரதிகாரிகள் அடிமைகளைப் போல நடத்துகின்றனர்.
அதிகாரி களுக்கு எதிராகப் பேசும் வீரர் கள் கொடூரமாக தண்டிக்கப்படு
கின்றனர். எல்லா வேலைகளையும் செய்ய நிர்பந்தம் செய்கிறார்கள்.
இந்த பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியிட
விரும்பவில்லை. எனவே விடுப்பு எடுத்து கடந்த 2016 ஜனவரி 21-ம் தேதி
பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்குச் சென்றேன். அதற்கு
பழி தீர்க்கும் வகையில் என் மீது ராணுவ நீதிமன்றத்தில் 2 முறை விசாரணை
நடைபெற்றது. கடந்த ஓராண்டாக பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி
வருகின்றேன்.
கடந்த ஜனவரி 18-ம் தேதி ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு கடிதம்
எழுதினேன். அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி இப்போது
வலைதளத்தில் எனது மனக் குமுறல்களை வெளியிடு கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2014-ல் சிந்தவ் ஜோகி தாஸ் ராணுவத்தில் ஹவுஸ் கீப்ப ராக பணியில்
சேர்ந்தார். 2015-ல் அனுமதியின்றி விடுமுறை எடுத்தார். அதற்காக அபராதம்
விதிக்கப் பட்டது. 2016-ல் உத்தராகண்ட் மாநிலம் ராணிகெட் ராணுவ
மருத்துவமனையில் படுக்கைகளை சுத்தம் செய்ய மறுத்தார். அதற்காக அபராதம்
விதிக்கப்பட்டது. அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் யானவை. அவர்
ராணுவத்தில் ஒழுங்கீனமாக செயல்படுகிறார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'தி இந்து'வில்
m.tamil.thehindu.com/india/ராணுவத்தில்-அடிமைகளாக-நடத்துகின்றனர்-மற்றொரு-வீரர்-சமூக-வலைதளத்தில்-புகார்/article9576389.ece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக