ஞாயிறு, 19 மார்ச், 2017

தேவர் பட்டம் ஆசாரி கு வண்ணார் கு

aathi tamil aathi1956@gmail.com

பிப். 3
பெறுநர்: எனக்கு
இராசையா சின்னத்துரை
சலவைத்தொழிலாளர்களுக்கு தேவர் பட்டம்.கம்மாளருக்கு தேவர் பட்டம்.சைவ
வேளாளருக்கு தேவர் பட்டம் இன்றும் நெல்லை வேம்பார் பகுதி பரதவ குடும்பம்
தேவர் பட்டம் பயன்படுத்துகிறது.
சேக்கிழார் குன்றத்தூர் தொண்டை மண்டல சைவ வேளாளர் என்பது
தெரிந்திருக்கும். அவர் பற்றி திருமழபாடி கல்வெட்டு (12 ம் நூற்றாண்டு)
"குன்றத்தூர் சேகிழான் மாதவடிகள் இராம தேவனான உத்தமச் சோழப் பல்லவரையன்"
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?
செங்குன்றாபுரம், விருதுநகர் கல்வெட்டு (13 ம் நூற்றாண்டு)
"கம்பன் தேவனான நாற்பத்தெண்ணாயிர ஆச்சாரி"
இது கம்மாளருக்கு இருந்த தேவர் பட்டம்.
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?
திருச்சி மாவட்டம், 12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:
"வண்ணான் அழிவில்லாத தேவன்"
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?-நன்றாக படியுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக