ஞாயிறு, 19 மார்ச், 2017

இராவணன் பிரம்மா மகனின் பேரன் பிராமணன் இராமன்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 28
பெறுநர்: எனக்கு
் Senthil Pandian .
முப்பாட்டன் ராவணன் சிறந்த சிவபக்தன். அவன் தமிழன் என நாம்தமிழர் மற்றும்
சிலர் சொல்லி வருகிறார்கள். ராவணன் பிராமணன், அதனால்தான் அவனைக்கொன்ற
ராமன் பிரம்மஹத்தி தோசத்தை போக்க ராமேசுவரத்தில் சிவபூசெய் நடத்தினான்.
இது ஒரு சிறு குறிப்பு இந்த நிலையில் சமீபத்தில் ராவணன் பற்றிய ஒரு
புத்தகத்தில் நான் வாசித்த சிறு குறிப்பு ஒன்றை தருகிறேன் அதை வாசித்து
பாருங்கள் பின்னர் இது பற்றிய தங்கள் கருத்துக்களை பதியுங்கள். லைக்குகளை
விட கருத்துக்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறது.
மகரிஷி புலஸ்தியர் பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர்.
புலஸ்தியருக்கு மனைவியர் நால்வர் ஆவிர்பூ என்னும் மானினி, பிரீதி,
சந்தியா, மற்றும் பிரதீசி, மானினி திரண பிந்துமுனிவரின் மகள், பிரீதி
பிரஜா பதி தக்ஷ்னின் பெண். புலஸ்தியருக்கும் மானினிக்கும் பிறந்த மகன்
விசிரவசு, அவனே தீய பெயர் எடுத்த ராவணனுக்கும் கும்ப கர்ணனுக்கும் தந்தை.
விசிரவசுவுக்கு மற்றொரு மனைவியான தேவ வர்ணினி மூலம் பிறந்தவன்
செல்வத்துக்கு அதிபதியான குபேரன். ராவணன் தங்கு தடையின்றி நாடுகளை
ஜெயித்துக்காெண்டு போனான். அப்போது கார்த்த வீர்ய சகஸ்ரார்ஜுனன் ராவணனை
தோற்கடித்து கட்டிப்போட்டு சிறையில் அடைத்தான். தன்னுடைய பெயரன் ராவணனை
மன்னிக்கும்படி புலஸ்தியர் அந்த அரசனிடம் பேசி அவனை விடுவித்தார்.
வரண்டியவேலன் ம.செந்தில் பாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக