ஞாயிறு, 15 நவம்பர், 2020

படிக்காதோர் இடும் கையெழுத்து குறி தற்குறி

 

aathi tamil aathi1956@gmail.com

சனி, 27 ஜூலை, 2019, முற்பகல் 11:26
பெறுநர்: எனக்கு
எழுத்தறிவற்றவன் - தற்குறி
ஓலைச்சுவடிகள் வழக்கில் இருந்த காலத்தில் சொத்துக்கள் விற்பனை தொடர்பான மூல ஓலையில் சொத்தினை விற்பவர் தன் கையெழுத்தினை இடுவது வழக்கமாக இருந்தது.
படிக்காத கையெழுத்திடத் தெரியாதவர் சொத்துக்களை விற்பனை செய்யும்போது எழுத்தாணியால் ஓலையில் கீறுவார்.
இக்கீறலானது ‘குறி’ அல்லது ‘தற்குறி’ என்றழைக்கப்பட்டது. இக்கீறலை இன்னார்தான் கீறினார் என்பதை இன்னொருவர் ‘தற்குறிமாட்டறிந்தேன்’ என உறுதி செய்து கையெழுத்திடுவார்.
இதுவே பின்னர் எழுத்தறிவற்றவர்
களை ‘தற்குறி’ என்று அழைக்கும் வழக்கமானது.
பதிவு: காளிங்கன்

கையொப்பம் கல்வி ஓலைச்சுவடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக