ஞாயிறு, 15 நவம்பர், 2020

சோழர் தெலுங்ககுலகாலன் பட்டம் அதே பெயரில் ஊர் கல்வெட்டு

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 25 ஜூலை, 2019, பிற்பகல் 1:46
பெறுநர்: எனக்கு
பள்ளிவயல்: நார்த்தலை திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள சாசனம், ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 27 ஆவது ஆண்டில் எழுதப் பட்டது. இதில், ‘இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல் ’ நிலம் குறிக்கப்பட்டுள்ளது. அன்றியும், ‘இவ்வூர்த் திருமானைமலை அருகத்தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா ’ என்றும் கூறுகின்றது.

 இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராயர் விசெயராயர் குமாரர் தேவராய மகாராயர் சகாப்தம் 1353 இன் மேல் செல்லாநின்ற இராட்சச வருடம் (கி.பி. 1431) எழுதப்பட்டது. இச் சாசனத்திலும், ‘கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணத்து உடையார் திருமலைக்கடம்பூருடைய நயினார் ’ பள்ளிவயல்நிலம் இரண்டுமா ’ என்று கூறுகிறது.
147 இவற்றால் இங்குப் பண்டைக் காலத்தில் அருகக்கடவுளுக்குரிய நிலங்கள் இருந்தது அறியப் படுகிறது.

சமணமும் தமிழும்
(நூலாசிரியர் - மயிலை.சீனி. வேங்கடசாமி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக