| திங்., 29 ஜூலை, 2019, முற்பகல் 11:47 | |||
காளிங்கன், பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
.
சென்ற ஆண்டின் மீள்பதிவு
பார்ப்பன அவுலியாக்கள்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பன சாதியைச் சேர்ந்த சிலர் இஸ்லாமிய இறையடியார்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.அவர்களின் நினைவாகவும் தமிழகத்தில் சில இடங்களில் தர்ஹாக்கள் உள்ளன.
கி.பி . 15 ஆம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்தவர் மீனாட்சி சுந்தரம் அய்யர். இசையிலும், தமிழிலும் புலமை பெற்றவர். இஸ்லாம் சமயத்தைத் தழுவி மீனா நூர்தீன் என்ற பெயர் பெற்றார். அவுலியா நிலைக்கு உயர்ந்த இவரது அடக்க ஸ்தலம் மதுரை தெற்கு வெளி வீதியில் மீனா நூர்தீன் வலி தர்ஹா என்ற பெயரில் உள்ளது. இவர் வழி வந்த பார்ப்பனர்கள் பலர் இந்த தர்ஹா விழாவில் இன்றளவும் பங்கேற்கின்றனர்.
பாபாசேக் அலாவுதீன் என்பவருக்கும், தஸ்தகீர் என்ற அவரது சீடருக்கும், பார்ப்பன சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்று ஹபீஸ் அம்மா என்று பெயர் சூட்டியவருக்கும் சேர்த்து நாகபட்டினத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் செல்லும் வழியில் ஒரு தர்ஹா உள்ளது. இதற்கு பாப்பா கோயில் தர்ஹா என்று பெயர். இந்துக்களும் இஸ்லாமியர்களும் இங்கு திரளாக வருவது இன்றளவிலுமான நடைமுறை.
தர்மபுரிக்கும் சேலத்திற்கும் இடையில் தொப்பூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள தர்ஹாவிற்கு ஹாவாலிக் தர்ஹா எனப் பெயர். இந்த தர்ஹாவில் பார்ப்பன பெண் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாத்தை அந்தப் பெண் தழுவினாலும் புலால் உண்ணும் பழக்கம் அற்றவராக இருந்ததால் இந்த தர்ஹாவில் இன்றும் புலால் உணவுப்பொருட்கள் படைப்பதில்லை. இங்கு நேர்த்திக்கடன் செய்ய வருவோரும் அசைவ உணவை விலக்கி விரதமிருந்தே வருகின்றனர். இந்துக்களுக்கு முதலில் உணவு பரிமாறிய பிறகே இஸ்லாமியர்களுக்
கு இங்கு உணவு பரிமாறப்படுகிறத
ு.
தஞ்சை நகரின் கிழக்குப்பகுதியில் பழைய மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தர்ஹாவிற்கு பாப்பாத்தியம்மன் தர்ஹா என்று பெயர். இங்கு இஸ்லாமிய சமயத்தை தழுவிய பார்ப்பனியப் பெண் ஒருவரும், அவருக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுத்த அவுலியா ஒருவரும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ள
னர். இங்கும் இந்துக்கள் சந்தனக்கூடு விழாவில் திரளாகப் பங்கேற்கின்றனர்.
இந்தப் பதிவுகளின் நோக்கம் யாதெனில் தமிழகத்தில் மதவெறியர்கள் எவ்வளவுதான் முட்டி மோதினாலும் பெரிய அளவிற்கு எடுபடாததன் காரணம் மக்களின் வாழ்வியலில் இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் மெல்லியதாய் கலந்துள்ளது.
பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட முறை என்றாலும் அதற்குள்ளும் மனிதாபிமான நரம்பு மண்டலங்கள் பின்னிப் பிணைந்துள்ளது.
தர்ஹா வழிபாட்டை ஊக்குவிக்கும் பதிவுகள் அல்ல. மதநல்லிணக்கத்தை உணர்த்தும் பதிவுகளே.
நன்றி: பதிவர் MAP
மதமாற்றம் இசுலாமியர் தர்கா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக