| செவ்., 30 ஏப்., 2019, பிற்பகல் 10:22 | |||
திருத்த வரலாறு என்பதைக் காண்
Thiruchchelvam Kathiravelippillai, Jeevan Sha மற்றும் 90 பேருடன் இருக்கிறார்.
தொடர் – 19
கிண்ணியாவில் ஆலங்கேணி இடிமண் என்பன தமிழ்பேசும் மக்களின் அயல் அயல்
ஊர்கள். 1984 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறந்த உறவுநிலை இருந்தது. 1984 இன்
முற்பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை உருவாக்குவதற்கான
முயற்சி மொசாட்டின் வழிகாட்டலில் முதன்முதலாக நடைபெற்றது. அது
வெற்றியளிக்காவிட்டாலும் விரிசலுக்கான அத்திவாரம் இடப்பட்டதில்
வெற்றிகொண்டது.
கண்டல்காடு என்ற இடத்தில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் இடையே
காணி தொடர்பான சிக்கல் எழுந்தது. அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி புதிதாக
பஸீர் தலைமையிலான மறைமுக இயங்குநிலையிலிருந்த ஊர்காவல்படையினர் 1984 இன்
நடுப்பகுதியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது இடிமண், குட்டிக்கரைச்சை போன்ற
இடங்களில் வைத்து தாக்குதல்களை மேற்கொண்டார்கள். பதிலுக்கு அப்பாவி
முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களும் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
தாக்குதல் சிலநாட்கள் தொடர்ந்தன. சில தமிழ் மக்கள் ஊர்காவல் படையினரால்
பிடித்து வைக்கப்பட்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக முஸ்லிம் மதத்
தலைவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டார்கள். முடியாது போக அப்போது கிண்ணியா
காவல்துறை நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்த தென்னக்கோன் அவர்களிடம்
முறையிட்டு அவரது முயற்சியினால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்
மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
எனினும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக
கண்டல்காட்டில் மரக்கறித் தோட்டச்செய்கையில் ஈடுபடுகின்ற தமிழர்கள்
எவரையாவது கொல்வது என திட்டமிடப்பட்டு கண்டல்காட்டு துறையடையில்
சுடுகலன்களுடன் (Shot Guns ) காத்திருந்தனர் பஸீர் மற்றும் கூவல் ஆகிய
ஊர்காவல் படையினர் தலைமையில் குழுவினர்.ஆலங்கேணியைச் சேர்ந்த லிங்கராசா
மற்றும் ஒப்பிலார் மகன் சின்னராசா ஆகியோர் தோட்டத்திலிருந்து வீடு நோக்கி
வருகின்ற போது இருவரும் சுடப்பட்டும் தலையில் வெட்டியும் கொல்லப்பட்டனர்.
ஆற்றினுள் உடல்களை வீசி விட்டுச்சென்றனர். (ஒப்பிலார் அப்போது விடுதலைப்
புலிகள் அமைப்பிற்கு வழிகாட்டியாக செயற்பட்டவர். பின்னர்
இந்தியப்படைகளுடன் விடுதலைப் புலிகளை காட்டிக்கொடுத்தவர். 1988 இல்
ஆலங்கேணி அம்மன்கோவிலுக்கு முன்னால் வைத்து நான்கு விடுதலைப்புலிகள்
கொண்ட அணியினால் நண்பகல் 01.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்.
கொல்லப்பட்ட இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் இந்தியப்படையின்
முகாம் கிராமசபை கட்டடத்தில் இருந்தது. அந்நேரத்தில் துணிகரத் தாக்குதலாக
இத்தாக்குதல் மக்களால் பேசப்பட்டது. )
முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களை வெறுப்பூட்டும் நடவடிக்கைகள்
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. இரு சமூகங்களும் திட்டமிட்ட
சதிச்செயற்பாடுகளுக்கு இரையாகிக் கொள்ளத்தொடங்கின.
ஆலங்கேணியைச் சேர்ந்த அமரர் முருகுப்பிள்ளை துரைநாயகம் தயிர் வியாபாரம்
செய்யும் ஒருவர். தனது ஆறு பெண்பிள்ளைகளை வயளர்ப்பதற்காக தனது ஈருளியில்
தயிரினை திருக்கோணமலை நகரத்திற்கு எடுத்துச்சென்று அதில் வரும்
வருமானத்தில் வாழ்பவர். 1986.09.26 ஆம் நாள் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்
போது காலை 07.00 மணிக்கு தயிர் விற்பனைக்கு செல்வதற்கு புறப்படுகையில்
கைதுசெய்யப்பட்டார். இடிமண்ணைச் சேர்ந்த கூவல் எனும் ஊர்காவல்படை வீரரால்
அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆலங்கேணி சித்திவிநாயகர் ஆலயத்தின்
மடப்பள்ளிக்குள் கைகள் கால்கள் கட்டப்பட்டு கழுத்து அறுத்து
கொல்லப்பட்டார்.
துரைநாயகம் அவர்களின் கொலை நடைபெற்று ஐந்தாவது நாள் விடுதலைப் புலிகளின்
ஆலங்கேணிப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த சுனில் என்பரால் இடிமண்
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வருகின்ற போது பள்ளிவாசலிலிருந்து 50
மீற்றர் தூரத்தில் வைத்து கூவல் சுட்டுக்கொல்லப்பட்டார். கூவல்
சுட்டுக்கொல்லப்படுவதற்கு முஸ்லிம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு
உதவியிருந்தனர்.
சாவாறு எனுமிடத்தில் எருமைப்பட்டி வைத்திருந்த வீரசிங்கம் மற்றும்
பொன்னம்பலம் ஆகியோர் மாவுசாப்பா துறையடியால் 1987.03.19 ஆம் நாள்
வீடுநோக்கி வந்துகொண்டிருந்த போது புகாரியடியில் வசித்த லாசினார் மகள்
வெள்ளையன் தலைமையிலான ஊர்காவல்படை வீரர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை
செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். (வெள்ளையன் 1990 இல் பொன்னாங்காணி
என்ற இடத்தில் இராணுவத்துடன் சென்று முற்றுகை நடவடிக்கையை முடித்து
வருகின்ற போது நிலக்கணியில் அகப்பட்டு ஒற்றைக்காலை இழந்து பின்னர் காலில்
இருந்த காயம் காரணமாகவே சாவடைந்தார்.) கொல்லப்பட்டவர்களின் உடலங்களை
சோமசுந்தரம் என்பவர் கண்டு எடுத்துவந்து உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
சோமசுந்தரம் அச்சம் காரணமாக கண்ணடல்காட்டுக்கு தனது பட்டியை இரண்டு
நாட்களின் பின்னர் மாற்றியிருந்தார். 1987.03.23 ஆம் நாள் அவரது
பட்டிக்குச்சென்ற ஊர்காவல்படை வீரர்களான வெள்ளையன், சின்னக் கிண்ணியாவைச்
சேர்ந்த துவான் அணியினர் சோமசுந்தரம் என்பவரை கொன்றனர்.
இந்நாட்களில் இரவு வேளைகளில் படையினர் மீதான அச்சம் காரணமாக தமிழ்
இளைஞர்கள் கண்டல்காடு , இறவடிச்சேனை , தளவாய் போன்ற இடங்களுக்கு மாலை
வேளைகளில் சென்று இரவை அங்கு கழித்துவிட்டு காலையில் ஊருக்குத்
திரும்புவது வழக்கம். 1987 மே மாதத்தில் ஈச்சந்தீவைச் சேர்ந்த
சித்திரவேல் மகன் மற்றும் அவரது நண்பர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது
ஈச்சந்தீவிற்கு பின்னாலிருக்கும் வண்ணான்வயல் என்ற இடத்தில்
ஊர்காவல்படையினரால் மறிக்கப்பட்ட போது தன்னிடமிருந்து கைக்குண்டை அவர்களை
நோக்கி சித்திரவேல் மகன் வீச இரு ஊர்காவல்படையினர் சாவடைந்து இருவர்
காயமடைந்தனர்.(அப்போது விடுதலைப் புலிகளால் தமது ஆதரவாளர்களாக இருக்கும்
சில இளைஞர்களின் பாதுகாப்பு கருதி கைக்குண்டுகள் வழங்கப்பட்டிருந்தன)
சித்திரவேல் மகன் கைக்குண்டு வீசியது ஊர்காவல்படையினர் காதுகளுக்கு
எட்டியது. பஸீர் தலைமையிலான அணி ஆலங்கேணியில் விசித்த சித்திரன் அவர்களது
வீட்டிற்கு நள்ளிரவு 01.00 மணிக்கு சென்று சித்திரனை பிடித்து
சுட்டுக்கொன்றனர். சித்திரவேல் என்பவருக்குப் பதிலாக சித்திரன் என்பவர்
கொல்லப்பட்டார். சித்திரன் அவர்களின் பெயர் அப்போது பிரபலமானது. அவரது
மகன் புளொட் அமைப்பில் இருந்தார். அதனால் தவறான புரிதலுடன் சித்திரன்
கொல்லப்பட்டார்.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ்பேசும் மக்களிடையேயான உறவில் புலப்படா
விரிசல்களுக்கு வழிகோலின.
31 ஆகஸ்ட், 2018, பிற்பகல் 7:27 · பொது
CargoNizar Cargo
தொடருங்கள் நான் பின்னர் வந்து சேர்ந்து கொள்கிறேன்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 31 ஆக., 2018
Sounthararajan Muthucumar
அருமையான தொடர் தொடருங்கள் வாழ்த்துக்கள்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 1 செப்., 2018
Nilamdeen Mohamed
இப்படியாக கொலைக்களத்தில் ஈடுபட்ட ரத்த வெறியர்கள் மண்ணில் மறைந்த
வரலாறுதான் உள்ளது பழசுகள் எதையும் கிளறாமல் மீண்டும் இன உறவுவுக்கு வழி
என்ன என்பதை பாருங்கள் .இரண்டு தரப்பும் பழிக்குப்பழியாக பலிக்குப்
பலியாக செய்துள்ளார்கள் ..இங்கு யாரும் வன்முறையை விரும்பவில்லை
விடுதலைப் போராட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிய போதே இரண்டு
தரப்பும் மோதியுள்ளார் கள் .இவைகளை நீங்கள் மறக்காமல் கிளறுவதால் என்ன
பலன் ..லண்டனில் IBC இங்கு விரகேசரி >தினக்குரல் ஆகிய ஊடகங்கள் விஷம்
கக்கி வருகின்றது .இப்போது நீங்கள் வேறு ..அப்போ எப்படி இந்த இரண்டு
இனமும் ஒன்று சேரும் ... நீங்கள் கிண்ணியா பற்றி எழுதினால் நான் அம்பாறை
பற்றி எழுதலாம் >> எல்லாமே கசப்பான சம்பவங்கள் .அப்பாவி மக்களை இரண்டு
தரப்பும் படுகொலை செய்து விட்டானுகள் .கொலைக்கு இறைவன் நம் கண்முன்னே
தண்டனை கொடுத்துள்ளான் .விட்றுவம் ..பெட்ரோல் ஊத்த வேண்டாம் நீர் ஊற்றி
இன உறவை வளர்ப்போம் .
Thiruchchelvam Kathiravelippillai
வரலாற்றினை இளையோர்கள் தெரிய வேண்டும். இருபக்கமும் நடந்த தவறுகள் என்பது
இரு சமூகங்களும் தவறிழைத்ததாக தற்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அது
தவறான தகவலும் பார்வையும் என்பதனை உணர்த்துவதற்கான தொடரே இது. தற்போது
நடைபெற்ற சம்பவங்கள் மாத்திரமே பதியப்படுகின்றன, பின்னர் இது விடயமாக
ஆராயும் போது இரு சமூகங்களும் மனிதத்தினை நோக்கிச் செல்லும் எனபதே
எதிர்பார்ப்பு, தாங்கள் நினைப்பது போன்று அச்செய்தி ஊடகங்களுடன் இத்தொடரை
ஒப்பு நோக்க வேண்டாம் என விநயமாக கேட்டுக்கொள்கின்றேன்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 12 செப்., 2018
Nilamdeen Mohamed
Thiruchchelvam Kathiravelippillai சரி ஐயா உங்கள் பாதையில் விட்டு
விடுகின்றேன் ..ஆனால் பின்னர் இதன் சாதகம் பாதகம் பற்றிப் பார்ப்போம் .
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 12 செப்., 2018
Thiruchchelvam Kathiravelippillai
Nilamdeen Mohamed நிட்சயமாக
ஈழம் கிழக்கு ஒற்றுமை சோனகர் முஸ்லீம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக