| புத., 24 ஜூலை, 2019, முற்பகல் 10:02 | |||
பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி
# சமணர்கள் கழுவேற்றம் ஒரு திராவிடப் பொய்…
# பாண்டிய மன்னன் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் என்பவன் திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பன சைவ குரவரின் பேச்சைக் கேட்டு எண்ணாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்றதாகக் கூறப்படுவது உண்மையா???
# சமணர்் கழுவேற்றம் என்பது உண்மையில் நடந்த சம்பவமல்ல...அது ஓரு தொன்மம் (கற்பனையான பழைய நம்பிக்கை) மட்டுமே….
# எந்த ஒரு வரலாற்றுத் தகவலுக்கும் ஆதாரங்கள் வேண்டும். ஆனால் இக் கழுவேற்றம் குறித்த விடயத்தில் தொன்மம் (கற்பனையான பழைய நம்பிக்கை) மட்டுமே ஆதாரமாக முன்னிறுத்தப்படுகிறது... இவ்விடயத்தில் ஒரு சிறிய ஆதாரத்தைக் கூட எவரும் முன்வைக்கவில்லை...
#சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு ஆதாரமாக திராவிட தத்துவவாதிகள் காட்டுவது கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவ சமய பக்தி இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் உள்ள கற்பனைகளைக் தான்… # அப்பர்
# திருஞானசம்பந்தர் ஆகியோரின் பாடிய பாடல்களில் கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை. அவர்கள் சமணர்களை வாதத்தில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மட்டுமே செய்துள்ளனர் என அறியமுடிகிறது...
கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் நாயன்மார்களின் இலக்கியங்களை சேகரித்து தொகுத்து அதற்கு அவர் உரை எழுதுகிறார். அதுவே பெரிய புராணம் ஆகும்...அதில்தான் நாயன்மார்களுக்கு ஆன்மீக சக்தி இருப்பதாகக் காட்ட பல # புனைவுக் கதைகள் சொருகப்பட்டன... சுண்ணாம்புக் காளவாசலுக்குள் இருந்து உயிருடன் வந்தது,வெள்ளெலும்பை ஒரு பெண்ணாக மாற்றியது, கோயில்க் கதவுகளைத் திறக்கவும் மூடவும் பாடியது, # சமணர் கழுவேற்றம் போன்ற பல கற்பனைக் கதைகள் பின்னிட்டு சேர்க்கப்பட்டன...இவற்றை ஆதாரங்களாக எந்த வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்க மாட்டார்கள் திராவிட தத்துவவாதிகளைத் தவிர...
# கழுவேற்றம் நடந்தது குறித்த கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ எதுவுமே இல்லை. சமணர்களின் நூல்களில் கூட கழுவேற்றம் நடந்தது குறித்த சான்றுகள் காணப்படவில்லை…
# இச்சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறத
ு... கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழன் கூட ஒரு சமணன் தான்...
# எண்ணாயிரம் என்பது வணிகர் குலப்பெயர்.அக்காலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகவ
ே இருந்தனர் ( # கோவலன்) வணிகர்கள் எண்ணாயிரத்தவர் கூட்டம் நாலாயிரத்தவர் கூட்டம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன...கொள்ளையர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய வணிகர்கள் பத்தாயிரம் நபர்கள் முதல் நானூறு நபர்கள் வரையுள்ள குழுக்களாகத் தான் இருப்பார்கள்... ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சிறிய போர்ப்படையாகவே அவர்கள் இருப்பார்கள்...கோவலனுடைய இது போன்ற வணிகப் படையே மதுரையை எரித்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு...அது போன்ற ஒரு எண்ணாயிரத்தவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகன் குற்றத்திற்காக கழுவேற்றப்பட்டிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற திரைக்கதை உருவாக்கப்பட்டுவிட்டது. அதைத் தமிழ்ச் சமூகம் எந்தவித ஆய்வுமின்றி ஏற்றது தான் திராவிடத்தின் திட்டமிட்ட சதி…
# ஒரு கழுவேற்ற சிலையை சமணர் கழுவேற்றத்துக்கான ஆதாரம் என்கிறார்கள். அதில் கழுவேற்றப்பட்ட மனிதனின் சிலை நீளக்குடுமி,மீச
ையுடன் காணப்படுகிறது...சமண முனிவர்கள் மீசை மழித்து மொட்டையடித்து இருப்பவர்கள்...
ஆகவே இதை எப்படி ஆதாரமாகச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை…
# இப்படி எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இந்த சமணர் கழுவேற்றத் திரைக்கதையை திராவிட தத்துவவாதிகள் இன்றும் ஓட்டி வரக் காரணம் என்ன? என்ன இலாபம்?
# சைவ சமயத்தை பார்ப்பன மயமானது என்றும் பார்ப்பனர்கள் கொடூரமானவர்கள் என்றும் நிறுவுவதற்குமே இந்தச் “சமணர் கழுவேற்றம்” என்ற பொய்யை திராவிட தத்துவவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
#சமணர் கழுவேற்றம் நடைபெறவே இல்லை....
# ஏனென்றால் .....
1. # நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தர
ுக்கு 350
ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள். கழுவேற்றப்பட்ட கதை இவர்களால்தான்
முதலில் சொல்லப்படுகிறது. எனவே கதையின் நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.
2. # சம்பந்தர் , அப்பர் தேவாரங்களில் கழுவேற்றப்பட்டதற்கு அகச்சான்றுகள் இல்லை.
3. # பல்லவ , பாண்டிய சோழ கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து
எந்த ஆதாரமும் இல்லை.
4. #சமணர்கள் இலக்கியங்களிலேய
ோ கல்வெட்டுகளிலேயோ இந்தச் சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.
5. #சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில்
இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த
நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன. சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?
6. #கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்
கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர். இவர்களுள் ரொமிலா தபாரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும்
அடங்குவர்.
# இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் மறுக்கப்படவில்லை.... #சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று # தீக்கதிரில் கட்டுரை எழுதிய தெலுங்கரான கம்யூனிஸ்டு
# அருணன் கூட இதுவரை இதை மறுக்கவில்லை
Swaminathan V
PA krishnan..பொய் கருத்தை உடைக்கிறார்.
சமணர்கள் அழித்தொழிக்கப் பட்ட பிறகு வானவெளியிலிருந்து சமணர்கள் தமிழில் எழுதிய சில நூல்கள்.
1. சிந்தாமணி
2. வளையாபதி
3. நீலகேசி
4. யசோதர காவியம்
5. உதயணகுமார காவியம்
6. சூளாமணி
7. பெருங்கதை
8. நன்னூல்
9. சூடாமணி நிகண்டு
10. யாப்பெருங்கலக் காரிகை
11. யாப்பெருங்கலம்
12. அமுதசாகரம்
13. அருங்கலச் செப்பு
14. அறநெறி சாரம்
15. திருநூற்றந்தாதி
16. திருப்புகழ்ப் புராணம்
17. மேருமந்தர புராணம்
18. திருக் கலம்பகம்
19. தீபக்குடி பத்து
20. ஸ்ரீ புராணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக