வெள்ளி, 13 நவம்பர், 2020

ஹிந்தியா ராணுவம் 68% கயலான் கடை கையிருப்பு பின்தங்கிய நிலை ஊழல்

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 4 மார்., 2019, பிற்பகல் 11:29
பெறுநர்: எனக்கு
Tamilri.com
# 68சதவீத_பழயகருவ
ிகளை_கொண்ட_இந்தியராணுவம்
இந்திய ராணுவத்தின் தற்போதைய நிலை ஆரோக்கியமானதாக இல்லை என்று நியூயார்க் டைம் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இன்றே போர் என்று அறிவிக்கப்பட்டா
லும் அடுத்த பத்து நாளுக்கு மட்டுமே நமது ராணுவ இருப்புகள் போதுமானதாக இருக்கும்.
அதிலும் ராணுவத்தில் இருக்கும் 68 சதவீத ராணுவ கருவிகள் பழமையான கருவிகளாக இருப்பதாக அரசே தெரிவித்துள்ளது.
இந்தக் கருவிகள் இருபத்தோராம் நூற்றாண்டில் போர் நடந்தால் அதனை எதிர்கொள்ளும் சக்தியில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினரே கௌரவ் கோகோய் கூறியுள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் பெரும்பான்மையான பணத்தை ராணுவத்திற்கு செலவழித்தும் முப்படைகளை வழிநடத்த போதுமான பொருளாதாரம் இல்லை என்றே கூறுகிறார்கள்.
2018 ஆம் ஆண்டு இந்திய பட்ஜெட்டில் 45 பில்லியன் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதே ஆண்டு சீனா 175 பில்லியன் பட்ஜெட் வதக்கியதை நாம் கணக்கில் எடுத்தால் நமது ராணுவம் எத்தனை மடங்கு பின்தங்கியுள்ளத
ு என்பதை நன்கறியலாம்.
ராணுவத்திற்கு அரசு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்குகிறது என்பதைவிட அதை எப்படி செலவழிக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
ஊதியம் போன்ற இதர செலவுகள் போக எஞ்சியிருப்பது 14 பில்லியனே. அதை வைத்தே புதிய கருவிகள் வாங்க முடியும் என்ற நிலையில் தான் இந்தியா இப்போது இருக்கிறது.
இதுவரை ஒதுக்கப்பட்ட பணத்தில் சரியான முறையில் கருவிகள் வாங்கியிருந்தால் இந்த நிலைமை இருக்குமா என்பது சந்தேகம்தான்.
ராஜீவ் காந்தி காலம் முதல் ரஃபேல் காலம் வரை ராணுவத்தில் ஊழல் நிலைத்துள்ளது. காங்கிரஸ் பாஜக போன்ற இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து நாட்டை இந்த நிலையில் வைத்து இருக்கிறார்கள்.
ஒருவேளை ராணுவத்திற்கு அதிக பட்ஜெட் ஒதுக்கினால் இவை சரியாகிவிடும் என்று நம்புவது சரியாக இருக்காது. இதனை சரி செய்ய பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை வீழ்த்தி புதிய தலைமுறையில் இந்தியா உருவாகுமே ஆனால் இவை போன்றவற்றை சரிசெய்ய முடியும்.
இதுதான் இன்றைய நிலை. இந்த நிலையில் போருக்கு ஆசைப்படுவது வீராப்பு பேசுவது மிக தவறான நிலையாகும்.
# தமிழர்_ஆய்வுக்_கூடம்
Tamil Research Institute (Tamilri)
4 மணி நேரம் · Facebook for Android ·

பொருளாதாரம் நிதி பட்ஜெட் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக