| சனி, 11 மே, 2019, பிற்பகல் 1:31 | |||
- அதிரவைக்கும் ஒரு வாக்கு மூலம்
"ஒரு கட்டத்துக்கும் மேல் என்னால் இந்த பெல்ட் பாம் கதையை சகித்துக் கொள்ள முடியவில்லை. இவர்களின் அயோக்கியத்தனத்திற்கு நாம் ஏன் பலியாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதும் இந்த நாய்களுக்கு (சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளுக்கு) உண்மை உறைக்கிறார் போல சொல்லிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன்.
"பெல்ட் பாம்" செய்யும் அளவுக்கு நான் ஒன்றும் நிபுணன் இல்லை. அதைச் செய்தது யார்? எங்கிருந்து வந்தது? என்றும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த வகையில் அது ஒரு இந்திய வெடிகுண்டு" என்ற போது...
அங்கே சட்டென ஒரு மயான அமைதி குடி கொண்டது ...
தொடர்ந்து
"சிவராசன் தாமாகவே ஒரு சந்தர்ப்பத்தில் இதை என்னிடம் கூறினார்" என்றபோது கொடும் பிசாசுகள் முகத்தில் ஈயாடவில்லை. மேலும் தெளிவாக அவர்களை முகத்திற்கு நேராக ஏறிட்டு ...
"RAW, M.I (Military Intelligence), N.S.G எனும் கருப்புப் பூனைப் படை மற்றும் இந்திய ராணுவத்தின் சிறப்பு ராணுவப் படைப் பிரிவுகள் பிரத்யேகமாக உபயோகிக்கும் வெடிகுண்டு அது என்றேன்.
அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கொண்டனர். முதலில் சுதாரித்தது ரமேஷ்.
டேய் செத்தவன் மேல பழியைப் போடறாயா? என்று ஆத்திரத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறையை விட்டான் கன்னத்தில் .
எனக்கு சுள் என்றது. "செத்தவனையும், இல்லாதவனையும் பற்றித்தானே எல்லாம் கேட்கிறீர்கள். அந்தச் செத்தவன் சொன்ன உண்மைதான் இது" என்றேன் சூடாக .
என்ன நினைத்தாரோ சற்று நேரம் உற்றுப் பார்த்துப் பின் நிதானமாகக் கேட்டார் ரமேஷ்.
அது என்ன வெடிகுண்டு? ..... இந்திய சிறப்புப் படைகள் உபயோகிப்பது?
"....PE...C3... அல்லது C4 ... நிச்சயம் RDX இருக்காது"
RDX ஆக இருக்காது என எப்படிச் சொல்கிறாய்?
"புலிகளிடம் RDX இல்லை"
PE...C3...C4...., என்றால் என்ன?
"PE - Plastic Explosive - பிளாஸ்டிக் வெடி மருந்து
C3 - Composition 3 - மூன்றின் சேர்க்கை
C4 - Composition 4 - நான்கின் சேர்க்கை"
அது எப்படி இருக்கும் ?
" களி மண் போன்றிருக்கும். TNT, PETN, FENTRALITE, RDX வெடி பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கும்."
PE யில் RDX மட்டும் இருக்காதா?
"இருக்காது. நான் அறிந்த வரை PE ஒரு தனியான ஒரு வெடி பொருள் அல்ல. மூன்று அல்லது நான்கு வெடி மருந்துகள் சேர்ந்த ஒரு கலவை"
PE என்ன நிறத்தில் இருக்கும்? என்று கேட்டார் கடைசியாக .
"கருப்பு அல்லது வெண்ணிறத்தில் இருக்கும்....' நிறம்' ஒரு பிரச்சனை அல்ல. உரு மறைப்புக்குத் (Camouflage) தேவையான விதத்தில் நிறத்தை மாற்றக் கூடியதுதான்."
"RDX எப்படி இருக்கும்?" இப்போது மாதவன் தான் பங்கிற்குப் புலனாய்ந்தார்.
".... அதை நான் பார்த்ததில்லை. LTTE யிடம் அந்த வெடி மருந்து இல்லை. இருந்திருந்தாலும் நான் பார்த்திருக்க முடியாது" என்றேன்.
LTTE யிடம் RDX வெடி மருந்து இல்லைங்கறது உனக்கெப்படித் தெரியும்? அடுத்த கண்டுபிடிப்பைக் கோபத்தோடு கேட்டார் மாதவன்.
"சார்... RDX, PE என்பது உலகில் பெரிய இராணுவங்கள் மட்டுமே பயன்படுத்துவது. சிறிய நாடுகளிடம் அது இல்லை. அது சி.பி.ஐயினருக்க
ும், இராணுவத்தினருக்கும், மற்ற உளவுத் துறை வெடிகுண்டு நிபுணர்களுக்கும் நன்றாகத் தெரியும். 1990 ம் ஆண்டுகளில் கள்ளச் சந்தையில் கூட அதை வாங்க முடியாது. பெரிய நாடுகள், இராணுவத்தில் மட்டுமே அவை இருக்கும். விடுதலைப் புலிகள் பயன்படுத்துவது "ஜெலட்டின்" வெடி மருந்துகள்தான், சில சமயம் "பெண்டலைட்" உபயோகிப்பார்கள், நான் அறிந்தவரை ." என்றேன்.
மாதவனும், ரமேஷும் இப்போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
- பா. ஏகலைவன் தொகுத்து எழுதிய சிறைவாசி இரா. பொ.இரவிச்சந்தரன
ின் "ராஜிவ் படுகொலை, சிவராசன் டாப் சீக்ரெட்" நூலில் இருந்து.
1 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், Karthikeyan Rathinavelu மற்றும் 51 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும்
Prabhu
As per palani Baba view Rajiv blast is an accident
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · மேலும் · 33 நிமிடங்களுக்கு முன்பு
Ramasamy Duraipandi
சந்திராசாமியும் சுப்பிரமணிய சாமியும் செய்த வேலைக்கு யார் எவெரோ பழியானார்கள்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · மேலும் · 1 மணிநேரம் முன்பு
பா. ஏகலைவன் பதிலளித்தார் · 1 பதில்
Prabhu
https://m.facebook.com/story.
fbid=2420607304929092&id=
அகமது அலி பழனிபாபா
ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள் இல்லை . அது ஒரு விபத்து
பேசுபவர் : பழனிபாபா
பேசும் இடம் : திலகர் திடல் ( தஞ்சை )
முழு உரை : https://youtu.be/0qPKDxNif10
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · மேலும் · 33 நிமிடங்களுக்கு முன்பு
Absha
மொஸாத்தின் இந்திய ஏஜென்ட் சுப்ரமணிய சாமி
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · மேலும் · 44 நிமிடங்களுக்கு முன்பு விரும்பு கருத்து
புலிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக