ஞாயிறு, 15 நவம்பர், 2020

இலக்கியம் சாதிய ஏற்றத்தாழ்வு எதிர்ப்பு நூற்றாண்டு வாரியாக பட்டியல்

 

aathi tamil aathi1956@gmail.com

புத., 10 ஜூலை, 2019, பிற்பகல் 12:16
பெறுநர்: எனக்கு
பிராமணிய எதிர்ப்பு
தமிழரின் வாழ்வியல்...!
”உயர்திணை...மனிதப் பிறவி யாவரும்”
தொல்காப்பியன் (கி.மு.300)
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
கணியன் பூங்குன்றன். (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு)
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
திருவள்ளுவன்(கி.பி.2-ஆம் நூற்றாண்டு.)
”ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின்...”
திருமூலர் (கி.பி.600)
”சாதி இரண்டொழிய வேறில்லை...”
ஒளவையார் (கி.பி.900)
”சாத்திரம் பலபேசும் சழக்கர் காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்”
அப்பர் (கி.பி.700)
”சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை...”
மாணிக்கவாசகர் (கி.பி.700)
“பறைச்சி யாவது ஏதடா? பணத்தி யாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கம் இட்டு இருக்குதோ...”
சித்தர் சிவவாக்கியார்.
”சிறப்பும் சீலமும் அல்லது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே...?”
கபிலர். கபிலர் அகவல் (13-ஆம் நூற்றாண்டு)
”சாதி சமயங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்றெனவே...”
வள்ளலார் (திருவருட்பா 5805)
”சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..”
பாரதியார் (19-ஆம் நூற்றாண்டு)
”சாதிக்க பிறந்த எவனும்
சாதி பார்க்க மாட்டான்...
(ந.பழநிதீபன் 21-ஆம் நூற்றாண்டு...)
இத்தகைய பிராமணிய எதிர்ப்பு கருத்துகள் தமிழ் மொழியில் கடந்த மூவாயிரம் ஆண்டுகாலமாகவே தொடர்ச்சியாக பதிவாகி உள்ளது.
இத்தகு கருத்துகள் திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற எந்த மொழிகளிலேனும் பதிவாக உள்ளதா..?
அல்லது இத்தகு சிந்தனைகள் தேவமொழியான சமத்கிருதத்தில் பதிவாகி உள்ளதா...?
இதுதான் தமிழனின்
வாழ்வியல்...!
நேத்து வந்த திராவிட் முகம்தான் தமிழனுக்கே கோணம் கட்டிவிட்டானுங்களாம் நல்ல நகைச்சுவை
11 மணி நேரம் · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக