| சனி, 22 செப்., 2018, முற்பகல் 8:53 | |||
தமிழர் கோவிந்த ராசு ராசு ▶
தமிழரின் குரல்
கோவிந்தராசு தமிழர் தமிழர்:
குமரிக்கடலில் மூழ்கியிருக்கிறது தமிழர் வரலாறு
-ஒடிசா பாலு வியப்பு தகவல்
-
தமிழகத்தின் தென் திசையில் உள்ள குமரிபெருங்கடலில் தமிழர் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளாக படிப்படியாக மூழ்கியிருப்பதாக கடல்சார் பண்பாட்டு ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
உலக நிலப்பரப்பு தற்போது எவ்வாறு உள்ளதோ, அதனை வைத்தே நிலப்பரப்பு கணக்கிடப்படுகிறது. ஆனால், பூமியானது 1 லட்சத்து 7 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை நீள் வட்டப்பாதையில் சற்று சாய்ந்து சுற்றுவதாலும், தன்னைத் தானே ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுவதாலும் பூமியின் சுழற்சியினால் கடற்கரையில் மாற்றம் ஏற்படுகிறது. இதில், அடிக்கடி ஏற்படும், நில அதிர்ச்சியாலும் நிலம் மாற்றம் அடைகிறது. அதனுடன், பூமிக்கு 100 கிலோ மீட்டர் ஆழத்திலும், கடலுக்கு 40 கிலோ மீட்டர் ஆழத்திலும் நெருப்பு குமிழ் இருப்பதால், பூமியின் அச்சில் மாற்றம் ஏற்பட்டு, நிலப்பரப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. இதில், பூமியானது சூரியனுக்கு அருகில் செல்லும் போது, கடல் மட்டம் அதிகரிப்பதும், வெகுதொலைவில் செல்லும்போது கடல் மட்டம் உள்வாங்குவதும் அவ்வபோது நிகழ்வதுண்டு. இதுபோன்ற காரணங்களால், உலகம் முழுவதும் பல நிரப்பரப்புகள் கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மற்றும் எரிகற்கள் விழும்போது ஏற்படும் மாற்றத்தின் விளைவால் லெமுரியா எனப்படும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியதாக கடல்சார் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகில் முதல் முதலில் 1863ம் ஆண்டு ஹெக்கல் என்பவர் மடகாஸ்கர் முதல் இந்தியா வரையிலான நிலப்பரப்புகள் குறித்து விளக்கும் போது நில வழி பாலம் இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இதில், சிலேட் என்பவர் 1864ம் ஆண்டு மடகாஸ்கர் முதல் இந்தியா வரையிலான இரு பகுதிகள் கொண்ட நிலப்பரப்பை லெமுரியா என பெயரிட்டார். அதாவது, மடகாஸ்கரில் லெமு என்ற தேவாங்கு உள்ளது. அதேபோன்று, தமிழ்நாட்டின் ஊட்டியில் லெமு என்ற தேவாங்கு உள்ளது. மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்ற கருத்தாக்கத்திற்கு முன்னோடியாக, குரங்கு தேவாங்கில் இருந்து வந்தது என்ற கருத்தாக்கம் உள்ளது. இதனை முன்னோட்டமாக கொண்டு, இரு பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை லெமுரியா என குறிப்பிடப்பட்ட
ுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1922ம் ஆண்டு தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, லெமுரியா என்ற ஐரோப்பியர்களின் பெயர் குறித்து ஆலோசனை நடத்தி, குமரிக்கண்டம் என பெயரிட்டனர்.
உலக அளவில் 1916ம் ஆண்டு லெமுரியா கண்டம் குறித்து ஆலோசனை செய்த ஆல்பட் வெஜ்னர் உள்ளிட்ட வரலாற்று அறிஞர்கள் லெமுரியா கண்டத்தை கண்டத்திட்டு என அழைத்தனர். உலகில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலால் பிரிந்த நிலம் என வர்ணித்தனர். இதனையடுத்து, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 40 நாடுகள் 1959ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை இந்திய பெருங்கடலுக்குள் மூழ்கிய நிலப்பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், முதல் கட்ட ஆய்வை வெளியிட்டது. இதில், அந்தமான் முதல் ஆஸ்திரேலியா வரையிலும், தமிழ்நாடு முதல் மடகாஸ்கர் வரையிலும் உள்ள கடல் பகுதியில் ஏராளமான மலைகள், தீவுகள் உள்ளது என பதிவுசெய்தனர். பின்னர், அலெக்சாண்டர் கோந்தர தேவ் என்பவர் 1971ல் ‘‘மா கடல் மர்மங்கள்’’ என்ற பெயரில் லெமுரியா கண்டம் குறித்து ஒரு நூலை வெளியிட்டார். இதில், இந்திய பெருங்கடல் தீவு பகுதிகளில், கடலில் மூழ்கிய நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் உலக அளவில் நாகரீகத்தின் முன்னோடியாக இருந்தனர் என்ற குறிப்பை முன்வைத்தார்.
இது ஒரு புறம் இருக்க, சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் 1917ம் ஆண்டு மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, தமிழ்நாடு எல்லை பகுதியில் வெறும் 49 நகரங்கள் மட்டும் கடலில் மூழ்கியிருந்தது என சொல்லி கடலின் ஆழம் அறியாமல் மடகாஸ்கர் குமரி பப்பூவா நீயு கினி இடையில் கோடுகள் வரைபடம் வரைந்து அறிவியல் தன்மையற்ற அளவில் பதிவிட்டிருந்தார். அதுபோல்,சுமதி ராமசாமி என்பவர் 1990ம் ஆண்டில் லெமுரியா கோட்பாட்டை மறுத்து, லெமுரியா காலநிலையின் 150 வருடம் குறித்து நூல் வெளியிட்டார். இவர்களின் இதுபோன்ற கருத்தியல் காரணங்களால், குமரிக்கண்டம் என்பது இருந்ததா ? என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. ஆனால், லெமுரியா கண்டம் குறித்த இவர்களது ஆய்வு மேலோட்டமாக உருவாக்கியதே தவிர, கடலில் இறங்கி ஆய்வு செய்தது இல்லை. அதனால், லெமுரியாவை குறுகிய பகுதிகளாக, குறுகிய கால ஆண்டுகளோடு ஒப்பிடுவது சரியான ஆதாரமாகவும், சரியான பதிவாகவும் இருக்காது. அதன் காரணமாகவே, லெமுரியா கண்டம் எனப்படும் குமரிக்கண்டத்தை பற்றிய சரியான ஆய்வுக்கு கடலில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக கடலில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி முதல் மடகாஸ்கர் வரையிலான இந்த ஆய்வில், 72 க
டல்சார் துறையிடம் தொடர்பு கொண்டு, ஆழ் கடல் மீனவர்கள் உதவியுடன், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்ட
து.
இவ்வாறு ஆய்வு மேற்கொண்டதில், கன்னியாகுமரி முதல் தென் பகுதியின் 130 கிலோ மீட்டர் தூரத்தில் 12 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரை நிலப்பரப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டன. அத்துடன், கிரேக்கர்களால் ‘‘மரிக்கானா’’ என அழைக்கப்படும் துறைமுகமானது, கன்னியாகுமரியில் இருந்து 53 கிலோ மீட்டர் தூரத்தில் 44 சதுர கிலோ மீட்டர் நீளம், 22 சதுர கிலோ மீட்டர் அகலத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. முக்கியமாக, தமிழகத்தின் தென் முனை கடல் பகுதியில் மாலத்தீவு, மொரீசியஸ், அந்தமான், காசிமோஸ், லட்சத்தீவு போன்ற தீவுகளில் ஆய்வு செய்ததில், இந்திய பெருங்கடல் பகுதியில் 6 லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் சதுர கிலோ மீட்டர் வரையில் சிறு, சிறு தீவுகள் வெறும் 20 மீட்டர் முதல் 130 மீட்டர் ஆழத்தில் மூழ்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கியங்களில் உள்ள குறிப்புகளை அடிப்படையாக கொண்டும் லெமுரியா கண்டம் குறித்த தகவல்கள் அறிய முடிகிறது. குறிப்பாக, சிலப்பதிகாரம், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு, மார்க்கண்டேய புராணம், சைவ ஆகமம் போன்றவற்றில் மிகத் தெளிவாக லெமுரியா எனப்படும் குமரிக்கண்டம் குறித்த அரிய தகவல்கள் அறிய முடிகிறது. இதில், சிலப்பதிகாரத்தி
ல் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இறக்கும் போது, ‘‘மண்பதை காக்கும் தென்புலம் காவல்’’ என்று சொல்லுவதில் இருந்து, தென் கடலுக்குள் இருக்கும் தீவுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதனுடன், திருவள்ளுவர் வாழ்ந்த கிமு 31ம் ஆண்டு காலக்கட்டத்தில் லெமுரியா கண்டம் நிலப்பகுதியாக இருந்திருப்பதற்கான அடையாளங்கள் வள்ளுவரின் குறளிலும் உள்ளது. அதாவது,
‘‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்றாங்கு
ஐப்புலத்தாறு ஒம்பல் தலை’’
என்ற குறளில் தென்புலத்தார் என தமிழகத்தின் தென் திசையில் வாழ்ந்தவர்களையும், அங்கிருந்து வந்த ஏதிலியர்களையும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து, லெமுரியா எனப்படும் குமரிக்கண்டம் குறித்த இத்தகைய ஆய்வில் தமிழர்கள் தடம் பதித்துள்ளனர் என்பது அறிய முடிகிறது. குறிப்பாக, லெமுரியா கண்டத்தில் வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்பது தமிழ் இலக்கியங்கள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. அத்துடன், கன்னியாகுமரியில் குமரி என்ற கடல் முனை இருப்பது போன்று, மடகாஸ்கருக்கு அருகில் குமரோஸ் என்ற தீவு உள்ளது. அந்த மக்கள் குமரி என்ற மொழி பேசுகின்றனர். மடகாஸ்கரில் உள்ள பழங்குடியினரிடையே 30 சதவிகிதம் தமிழ் மொழி கலந்துள்ளது. அவர்களது திருமண முறை தமிழர் பண்பாட்டை ஒத்து அமைகிறது. மடகாஸ்கரில் மனக்கரை, சாம்பவன், தென்கரை என தமிழ் மொழியில் ஊர்கள் இன்று வரை இருந்து வருகிறது. ஆற்று மணலில் இருந்து தங்கம் பிரிக்கும் முறை தமிழர்களின் முறையை போன்று உள்ளது. தமிழகத்தில் கடல் பயணத்தில் திறன் கொண்ட திரை மீளர்கள் 1,024 திசை அறிந்து பயணம் செய்யும் திறன் கொண்டவர்கள். இவர்கள், தமிழகத்தில் இருந்து மடகாஸ்கர் பயணம் செய்யும் வகையில் ஆமை வழித்தடம் அமைந்துள்ளது.
இதில், குமரி மாவட்டத்தில் உள்ள ஆழ்கடல் மீனவர்கள் சீசெல்ஸ் என்ற தீவு முதல் லட்சத்தீவு வரை சென்று மீன் பிடிப்பதால், அவர்கள் மூலம் கடலில் மூழ்கியுள்ள நிலங்கள் பற்றிய ஆய்வில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, மனிதர்களால் வாழ்ந்து இருக்கக்கூடிய மூழ்கிய கட்டிடப்பரப்புகள் பல இடங்களில் அடையாளப்படுத்த முடிகிறது. அதனுடன்,
தமிழகத்தில் இருந்து மடகாஸ்கர் வரையிலான 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் செய்த ஆய்வில் கடலில் மூழ்கிய கட்டிடங்கள் தமிழகத்தின் அரிக்கம்மேடு பகுதியில் கிடைக்கக்கூடிய செம்பூரான் போன்ற கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது அறிய முடிகிறது. இதேபோன்ற கட்டட அமைப்புகள் சுமேரியா, சிந்து சமவெளி நாகரீகத்திலும் உள்ளது. இவை, இங்கிருந்தே அங்கு சென்றிருக்கும் என்பதற்கான தடயங்களும் லெமுரியா ஆய்வில் அறிய முடிகிறது. உலகம் முழுவதும் தமிழரின் அடையாளங்கள் பரவி உள்ளது போல், வேறு எந்த அடையாளமும் பரவவில்லை. இதுபோன்ற ஒத்துமைகளில் இருந்து, லெமுரியா எனப்படும் குமரிக்கண்டத்தில் தமிழர்கள் வாழ்ந்திருப்பார்கள் என கூற முடியும். ஆதலால், தமிழக அரசு தமிழர்களின் சிறப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்ய குமரிக்கண்டம் குறித்த கடல் ஆய்வை தொடர்ந்து செய்ய வேண்டும். இது போன்ற ஆய்வுகளின் மூலம் கடலில் மூழ்க இருக்கும் தீவுகளை பற்றி புரிந்து கொண்டு அழிவுகளில் இருந்து காப்பற்றலாம் இதன் மூலம், தமிழர்களின் நாகரீகம், வணிகம், வீரம், பண்பாடு, கலாச்சாரம் கடல் மீன் வளம் போன்ற தொன்மை பதிவுகள் உலக அரங்கில் கொண்டு சேர்க்க முடியும் என்றார்.
பாக்ஸ்
* லெமுரியா கண்டம் என்பது இந்தியா முதல் மடகாஸ்கர் வரையிலான ‘‘நில வழி பாலம்’’ என குறிக்கப்படுகிறது.
* குமரிக்கண்டம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கடலால் இழந்த நிலப
்பரப்பை குறிப்பதாக உள்ளது.
* கடல் கொண்ட தென்நாடு என்பது தென் தமிழகத்தின் கடற்கரை ஓரமாக படிப்படியாக மூழ்கிய மனிதன் வாழ்ந்த நிலப்பரப்பை குறிப்பதாக அமைகிறது.
* தென்புலம் என்பது மதுரைக்கு தென் திசையில் மடகாஸ்கர் வரை பரவியுள்ள, கடலுக்குள் மூழ்கியுள்ள தொடர் தீவுகள்

ORISSA BALASUBRAMANIAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக