| செவ்., 25 செப்., 2018, முற்பகல் 11:53 | |||
Athiyaman Thamuka
தமிழகத்தை தலைமையகமாக கொண்டு இந்திய அளவிலும் ஏன் உலகளவிலும் வளர்ந்த பெருமுதலாளிகள் கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டத்தை இரு நாட்களுக்கு முன் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 'கவின் கேர்' ரங்கநாதன் என்ற பெருமுதலாளி கருணாநிதி குடும்பத்தினரின் சம்பந்தி ஆவார். இந்தியப் பெருமுதலாளிய ஊடக குழுமமான 'இந்து' குழுமத்தின் ஒரு முதலாளியும் முரசொலி மாறனுக்கு சம்பந்தி என்பது ஏற்கனவே பலரும் அறிந்ததே.
இந்த இரு தகவல்களுமே கருணாநிதி யாருக்காக தனது ஆட்சிகளை நடத்தியிருக்கிறார் என்பதற்கு மிகச் சிறு எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்நிகழ்வில் பங்கேற்ற டிவிஎஸ் குழுமத்தின் பொதுப் பேருந்து போக்குவரத்தை கருணாநிதி முதன்முதலாக முதலமைச்சரான புதிதில் நாட்டுடைமையாக்கினார்.
டிவிஎஸ் குழுமத்திற்கு இதனால் கருணாநிதி மீதான கோபம் அன்றிலிருந்து இருந்து வந்தாலும் மோடியை பிரதமராக்கியதற்கு பங்கு இருந்தாலும் இன்று அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஏனைய இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் இதே நிலைமை.
ஏனெனில் இப்பெருமுதலாளிகள் தமிழகத்தை தாம் திடப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்க-அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகள் தமிழகத்தில் அண்மைய ஆண்டுகளாக பெரியளவில் கால் பதிக்கத் தொடங்கியிருக்கி
ன்றனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பெருமுதலாளிகள் அச்சமுறத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற 1. ஸ்பிக் குழும முதலாளி ஏ. சி. முத்தையாவோ அம்பானியினால் வீழ்த்தப்பட்டு அவரது பெட்ரோ இரசாயன உற்பத்தி தொழிற்நிறுவனங்களான ஸ்பிக், TPL போன்றவற்றை நடத்த முடியாமல் நிதி நெருக்கடிக்கு ஆளாகி இன்று பெரும் கடனாளியாகி விட்டார்.
2. 'இந்தியா சிமெண்ட்ஸ்' முதலாளி சீனிவாசன் 1990களின் மத்திய ஆண்டுகளி்ல் நொடிந்து கிடந்தபோது முரசொலி மாறன் 1996ல் மத்திய அமைச்சரான பின் இக்குழுமம் வளரத் தொடங்கி கடந்த இருபது ஆண்டுகளில் முன்னணிக்கு வந்து கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் முகேஷ் அம்பானியோடு மோதினார். அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் சீனிவாசனுக்கு நெருக்கடி விளைந்து சு. சாமி, சோ, வைகோ போன்றவர்களின் வெளிப்படையான ஆதரவைப் பெற்றார்.
3. டிவிஎஸ் குழுமமானது கருணாநிதியின் முதலாவது ஆட்சியினால் தனது பேருந்து பொதுப் போக்குவரத்தை நாட்டுடைமையாக்கியதால் பாதிக்கப்பட்டாலும் சென்னையில் அதன் பெரிய தொழிற்நிறுவனம் இருக்கும் பாடி என்ற பகுதியை நகர எல்லைக்குள் கொண்டு வராமல் இருந்ததால் தொழிலாளர்களுக்க
ு 'நகரப் படி'(city allowance)யை கொடுக்காமல் இருப்பதற்கு ஏதுவாகவே அந்த ஆட்சி இருந்தது.
கருணாநிதி அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து இரு தடவைகள் முதலமைச்சரான பின்னும் டிவிஎஸ் குழுமமானது சட்டவிரோதமான இச்சலுகையை அனுபவிக்கவே செய்தது. அதன் மூலம் தனது மூலதனத்தை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
மேலும் இக்குழுமமானது 1980களில் இரு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியதால் அதனால் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக அவ்வாறே இருந்து வருகிறது.
கருணாநிதி தனது தொடக்க ஆட்சியின்போது தனியார் பொதுப் போக்குவரத்தை நாட்டுடைமையாக்க
ினாலும் அடுத்த ஆட்சிகளில் அதை தொடராததோடு அதற்கு பாதகமான இரு சக்கர வாகன உற்பத்தியையும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கவே செய்தார். இதனால் பெருமளவில் பயனடைந்தது டிவிஎஸ் குழுமம் ஆகும்.
4. டிவிஎஸ் குழுமத்தினை அடியொற்றி/சார்ந்து வளர்ந்து உலகளவில் விரிவடைந்தது அமால்கமேஷன் குழுமம்(டிவிஎஸ் குழுமத்திற்கு உதிரி பாகங்களை சப்ளை செய்தே வளர்ந்தது.)ஆகும். அதன் முதலாளியும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
5. இந்நிகழ்வில் பங்கேற்ற ரபீக் அஹமத்(Farida Group)எனும் முதலாளி உலகளவில் விரிவடைந்துள்ள தமிழக தோல் தொழிற்துறை முதலாளி ஆவார். இதுபோல் இந்நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு முதலாளியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இவர்கள் அனைவருக்கும் திமுக போன்ற மாநில கட்சிகளின் தயவு இன்னமும் தேவைப்படுகிறது. அம்பானி மற்றும் அதானி வகையறாக்களை எதிர்கொள்வதற்கு அவர்கள் இன்னமும் வளர வேண்டியுள்ளது.
மாறன் சகோதரர்கள், வைகுண்டராஜன் போன்றவர்கள் திமுக, அதிமுக போன்ற மாநிலக் கட்சிகளின் தயவின்றி இந்தளவிற்கு வளர்ந்திருக்க முடியாது. இந்திய அளவில் பாஜக ஆண்டாலும் பரவாயில்லை; தமிழக அளவில் திமுக போன்ற கட்சிகள் இன்னமும் இருந்தால் அல்லது ஆண்டால்தான் தம்மை திடப்படுத்திக் கொள்ள முடியும் என இத்தகைய பெருமுதலாளிகள் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஆண்டிருக்காவிட்டால் தமிழக இரு சக்கர வாகன சந்தையி்ல் டிவிஎஸ் குழுமத்திற்கு மாறாக பஜாஜ் குழுமம் ஆண்டிருக்கும்; டிராக்டர் சந்தையில் அமால்கமேஷன் குழுமத்திற்கு மாறாக மஹிந்திரா குழுமம் ஆண்டிருக்கும்; சிமெண்ட் சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ், செட்டிநாடு குழுமம், ராம்கோ சிமெண்ட் ஆகியவற்றிற்கு மாறாக பிர்லா சிமெண்ட் போன்றவை ஆண்டிருக்கும்.
தமிழகத்தைச் சேர்ந்த இப்பெருமுதலாளிகளே திமுகவின் திராவிட நாடு கோரிக்கையை ஆதரித்தவர்கள்; அது அக்கோரிக்கையை கைவிட்டதற்கு பின்புலத்திலும் இருந்தவர்கள்; திமுக ஆட்சிக்கு வந்த பின்னும் அதனுடைய ஒவ்வொரு ஆட்சியிலும் பலன் பெற்று வளர்ந்தவர்களே இவர்கள்.
இக்காரணத்தினாலும் இனியும் அத்தகைய பலனைப் பெற விரும்பியும் திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடு இருப்பதனாலும் கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
Bhaskar Viswanathan Muthu
நேற்று அன்று PM 8:34 மணிக்கு ·

தமிழக நிறுவனம் பெருமுதலாளி கருணாநிதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக