| புத., 12 செப்., 2018, முற்பகல் 11:10 | |||
Balan Natchimuthu ▶ தமிழரின் குரல்
கிரேக்கப்படையெடுப்பும் இந்திய வரலாறும்
ஐரோப்பிய கீழ்த்திசை ஆய்வாளர்களில் ஒருவரான சர் வில்லியம் ஜோன்ஸ் (SIR WILLIAM JONES), சந்திரோகோட்டோஸ் என்கிற சந்திர குப்த மௌரியனையும், பாட்னா என்ற பாடலிபுத்திரத்தையும் கண்டறிந்து 1793இல் வெளியிட்டார். இந்தியாவின் சிந்துவெளிப் பகுதிக்குள் அலெக்சாண்டர் நுழைவதற்குமுன் அயோர்நாஸ் என்கிற உயர்ந்த மலைக்குன்றுகளைச் சேர்ந்த அஸ்பசாய், அஸ்கினாய் ஆகிய இரு இனத்தாரோடு மிகக் கடினமாகப் போராடி வெற்றிபெற்றான். பின் அங்கு ஒரு கோட்டை கட்டி ‘சிசிகோட்டோஸ்’(SISIKOTTOS) என்பவனை அதன் தலைவனாக ஆக்கினான். இந்த சிசிகோட்டோஸ் ஒரு கூலிப்படையின் தலைவன் ஆவான். அவன் முதலில் இந்தியர்களிடமிருந்து கட்சி மாறி, பர்சியர்களோடு சேர்ந்து அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டான். அதன்பின் அலெக்சாண்டரது படையோடு சேர்ந்து கொண்டான். அவன் நடந்துகொண்ட முறைகளும் அவனது தலைமைப்பண்பும் கண்டு அலெக்சாண்டர் அவனை தனது ஆழ்ந்த நம்பிக்கைக்கு உரியவனாக ஆக்கிக் கொண்டான். அதனால்தான் அவனை அலெக்சாண்டர் அயோர்நாஸ் கோட்டையின் தலைவனாக ஆக்கினான்.
பிலிப்போஸ் (PHILIPPOS) என்பவனின் தலைமையின் கீழ்தான் சிசிகோட்டோஸ் பணியாற்றி வந்தான். அலெக்சாண்டர் திரும்பியவுடன் இந்த பிலிப்போஸ் வஞ்சகமாகவும் கொடூரமாகவும் கொல்லப்படுகிறான். வரலாற்று ஆசிரியன் ஜஸ்டின் (JUSTIN), அலெக்சாண்டரின் காலத்திற்குப் பின் அவரது சார்பாக ஆண்டுகொண்டிருந்
த பல அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தனர் எனவும் இந்தப் புரட்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் காரணமாயிருந்தவன் சந்திரோகோட்டோஸ்
(SANDROCOTTOS) என்பவன் ஆவான் என குறிப்பிடுகிறார். சந்திரோகோட்டோஸ், அந்ரோகோட்டோஸ், சிசிகோட்டோஸ் ஆகிய பெயர்கள் அனைத்தும் சந்திர குப்தரையே குறிக்கும். அவன் அலெக்சாண்டர் நியமித்த பிலிப்போஸ், அவனுக்குக் கீழிருந்த எடிமோஸ், பெய்த்தான் போன்றவர்களைக் கொன்று, இந்தியாவின் வட மேற்குப் படைகளை ஒன்றிணைத்து அவர்களின் துணையோடு இந்திய அரியணையையும் கைப்பற்றுகிறான்
.
அலெக்சாண்டருக்குப்பின் நடந்த கிரேக்க வாரிசுப் போரில் வென்று வெற்றியாளன் எனத் தன்னை அழைத்துக்கொண்ட செலியுகோஸ் அதன்பின் இந்தியாவின் மீது படையெடுத்து கங்கைச் சமவெளியை அடைந்து சந்திரோகோட்டோசின் தலைநகரான பாடலிபுத்ராவின் அருகே வரை சென்றுவிடுகிறான். ஆனால் சந்திரோகோட்டோசின் படைகளிடம் தோற்று சிந்து சமவெளிவரையும், பின் தன் நாட்டு எல்லைவரையும் விரட்டி அடிக்கப்படுகிறான். அதன்பின்னர்தான் இருவருக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்படுகிறது. 500 போர் யானைகளையும், ஒரு திருமண ஒப்பந்தத்தையும் செலியுகோஸ் பெறுவதாக உடன்பாடு ஏற்பட்டது. உறவு சுமூகமாக இருக்க செலியுகோசும், அவனது மகன் அன்டியோகசும் தூதர்களை இந்தியாவிற்கு அனுப்பி வந்தனர். அவ்வாறு அனுப்பப்பட்டவர்தான் மெகத்தனிசு (MEGASTHENES) ஆவார். இவர் எழுதியதுதான் இந்தியா என்கிற நூலாகும்.
மேற்கண்ட வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் சர் வில்லியம் ஜோன்சுக்கு கிரேக்க இலக்கியங்களிலிருந்து தெளிவாகக் கிடைத்தன. இவைகளோடு சமற்கிருத நூல்களில் இருந்து கிடைத்தவற்றை அவர் ஒப்பீடு செய்து, செலியுகோஸ் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு கி.மு. 305 என அவர் முடிவு செய்தார். இதே காலவரையறையில், வாழ்ந்த இந்திய மன்னரான சந்திரோகோட்டோஸ் என்கிற சந்திர குப்த மௌரியனை இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் புள்ளியாக ஆக்கினார். அதன்பின் மேஜர் ஜேம்ஸ் ரென்னல் (JAMES RENNEL) என்பவரின் துணையால் கங்கையும் எர்ரனாபோஸ் எனப்பட்ட சோண் நதியும் சேரும் இடத்தில் இருந்த இன்றைய பாட்னாதான் அன்றைய பாடலிபுத்ரம் என்பதை ஜோன்சு கண்டுபிடித்தார். ஆனால் பாடலிபுத்திரம் சோணை நதிக்கரையில் உள்ளது என்பதை குறுந்தொகையின் 75ஆம் பாடல் 2000 வருடங்களுக்கு முன்பே குறிப்பிடுகிறது. பண்டைய இந்தியாவின் வரலாற்றில் கிடைத்த இரு மிக முக்கியக் கண்டுபிடிப்புகள
ான இவை மிகச் சரியான மையப்புள்ளிகளாக ஆகியது. இவைகளைச்சுற்றிப் பிற வரலாற்று நிகழ்வுகளையும் அதன் காலத்தையும் இதனோடு ஒப்பிட்டு இந்தியாவுக்கான ஒரு வரலாற்றுச் சித்திரம் வரையப்பட்டது.
கிரேக்கக் குறிப்புக்களின்படி இந்தியாவிலிருந்து கிரேக்கப்படைகள் கி.மு. 317இல் வெளியேறின. கி.மு. 321இல் சந்திர குப்த மௌரியர் மகத அரசராக முடிசூட்டிக் கொள்கிறார். கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர், வெற்றியாளன் செலியுகோஸ் ஆகியவர்களின் படையெடுப்பு ஆண்டுகளைக் கொண்டும், கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளில் இருந்தும் இந்திய வரலாற்றுக்கான காலம் உறுதி செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட டி.டி. கோசாம்பி அவர்கள், கி.மு. 327இல் அலெக்சாந்தர் நிகழ்த்திய பஞ்சாப் படையெடுப்புதான் முதன்முதலாக இந்தியாவுக்கான ஒரு வரலாற்றுக் காலத்தை உறுதிசெய்தது என்கிறார்.
பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 287-292.
4 மணி நேரம் · பொது
சேமி
நீங்கள், தமிழர் கோவிந்த ராசு ராசு மற்றும் 5 பேர்்

Antony Muthupackiam
எல்லாம் சரி அய்யா ஆனால் கி மு 317 ல் இந்தியா என்கிற நாடு இருந்ததா??
அப்படி என்றால் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது கி மு 317 ல் கிரேக்கப்படைகள் மகத நாட்டை விட்டு வெளியேறின என்றுதானே இருக்க வேண்டும்... ஏன் இந்தியா என்று கட்டமைக்கப்படுகிறது??? அப்படி ஒரு பெயர் இருந்து இருந்தால் கண்டிப்பாக நமது புறநானூறு போன்ற இலக்கியங்களில் இடம் பெற்று இருக்கும் அல்லவா???
Aathimoola Perumal Prakash
இன்றைய கண்டகி ஆற்றைத்தான் சோணை என்று குறுந்தொகை குறிக்கிறது.
இதற்கு சான்றாக அது கங்கையுடன் கலக்குமிடத்தில் சோனேபூர் உள்ளது.

தமிழ்ப்பெயர் பட்னா ஐரோப்பியர் கிரேக்கர் படையெடுப்பு வேர்ச்சொல் பீகார் மௌரியர் மோரியர் இலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக