திங்கள், 28 மே, 2018

கேணல் கிட்டு கொலை ஹிந்தியா புலிகள் இழப்பு

aathi1956 aathi1956@gmail.com

பிப். 6
பெறுநர்: எனக்கு


சனவரி-16-தளபதி கிட்டுவின் நினைவு நாள்!

"சமாதானப் புறாவும் பிணந்தின்னி கழுகுகளும்!"

1990- ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் போர் மிகப் பெரும் வெற்றிகளைப் பெற்று முன்னேறி வந்த நேரம் தெற்காசியாவின் வல்லரசாக விளங்கிய இந்திய அரசு, தனது சொந்த புவியியல் அரசியல் நலனுக்காக சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு ஆதரவாக தன்னுடைய அனுபவமிக்க படைப் பிரிவுகளை தமிழீழ மண்ணில் களமிறக்கியது! தமிழீழ விடுதலைப் போரையும் அதன் முன்னணிப் படையான விடுதலைப்புலிகளையும் முற்றாக அழித்துவிட ஆயுததாக்குதலையும் நடத்தியது.

     ஏற்கனவே வாளேந்திய சிங்கமான சிங்களப்  படைகளை தோற்கடித்த புலிப்படை, தூண் ஏறிய சிங்கமான இந்தியப் படைகளையும் படுதோல்வி அடையச் செய்திருந்தது. எனவே தமிழீழ விடுதலைப் போர் சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இலங்கையில் அரசுக்கும் புலிப்படையினருக்குமான போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு சமரசத் தீர்வுக்கு நார்வே உள்ளிட்ட பல நாடுகளும் அய்.நா மன்றமும் கேட்டுக் கொண்டன. புலிகளின் சமாதானத்துக்கான வரைவு அறிக்கையை தருமாறு இந்நாடுகள் கேட்டிருந்தன.

அதன் அடிப்படையில் புலிகளின் சர்வதேச அரசியல் செயலகமும் அதன் தலைவர் தளபதி கிட்டுவும்  ஐரோப்பிய நாடுகளிளும் மேற்கத்திய நாட்டு அரசியல் நிபுணர்களிடமும் சட்ட நிபுணர்களிடமும் விரிவான விவாதங்கள் நடத்தி ஒரு அறிக்கையை தயார் செய்தனர். தேசிய இனங்களின் பிறப்புரிமையான சுய நிர்ணய உரிமையினை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு தன் சகாக்களுடன் ஈழத்துக்கு கிட்டு கப்பலில் பயணத்தை தொடர்ந்தார். வெள்ளைக் கொடியை ஏந்திய அந்த சமாதானப் புறா வங்கக் கடலின் சர்வதேச எல்லையில் சென்று கொண்டு இருந்தது.

தெற்காசியாவின் வல்லரசான இந்திய அரசு தமிழீழத்தில் புலிப்படையினரால் தோற்கடிக்கப்பட்ட அவமானத்தில் பலிவாங்க சமயத்தை எதிர்பார்த்திருந்தது. அத்துடன் சமீப மாதங்களுக்கு முன்பு இந்தியப் படைகளை ஈழ மண்ணுக்கு அனுப்பி வைத்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டிருந்தார். இப்படுகொலைக்கு புலிகளின் தலைமை தான் காரணம் என்று இந்திய அரசு கூறி வந்தது. இந்த சூழ்நிலையில் தான் எப்படியும் புலிப்படை தலைவர்களை கொன்று பழியை தீர்க்க வேண்டும் என்று இந்தியா துடித்து கொண்டிருந்தது. இதற்காக, தனது உளவு அமைப்புகளையும் வெளிநாடுகளில் உள்ள தமிழினத் துரோகக் குழுக்களுடனும் இடைவிடாத தொடர்பைக் கொண்டிருந்தது.

  இச்சமயத்தில்தான் ஒரு இனத்து துரோகி இந்திய அரசுக்கு, கிட்டு ஈழம் நோக்கிச் செல்லும் தகவலை துப்புக் கொடுத்தான். இந்திய கடற்படை கழுகுகள் வங்கக் கடலில் காத்துக் கிடந்தனர், தங்களுக்கு உதவியாக செயற்கை கோளையும் பயன்படுத்தி கிட்டுவின் கப்பல் வருகையை கண்காணித்து வந்தனர்.

சர்வதேச கடல் எல்லையில் வந்து கொண்டிருந்த கிட்டுவின் கப்பலை இந்திய கடற்படை கப்பல்கள் சுற்றி வளைத்தன. கப்பலில் உள்ள தளபதி கிட்டுவும் அவரது சகாக்களும் கப்பலுடன் தங்களிடம் சரணடைய வேண்டும்" என்று தகவல் கூறினர். தளபதி கிட்டுவோ" நான் சர்வதேச கடல் எல்லையில்தான் என்று கொண்டிருக்கிறேன். உங்கள் நாட்டில் என் மீது எந்த வழக்கும் இல்லை, எனவே என்னை சரணடையும்படி கேட்பது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது, எனவே சமாதானத் தூதுவனாக சென்று கொண்டிருக்கும் எங்கள் பயணத்தை தடுக்க வேண்டாம் என்று பதில் கூறினார். ஆனால் இந்திய அரசிடம் தொடர்ந்து ஆணைகளை பெற்று கொண்டிருந்த இந்திய கடற்படை அதிகாரிகள், கிட்டு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை, என்று கூறி கிட்டுவின் கப்பலை இந்தியக் கடல் எல்லைக்குள் வரும் வண்ணம்  நெருக்கி வந்தார்கள்.
கடல் எல்லைக்குள் முன்பே சர்வதேச எல்லையில் தொலைவில் கிட்டுவின் கப்பலை நிறுத்தி கொண்டார்..

கிட்டுவின் கப்பல் இந்தியப் படைகளால் முற்றுகையிடப் பட்டிருக்கும் செய்தி கேட்டு தமிழீழமே பதட்டமும் கவலையும் கொண்டது. தமிழகம் உள்ளிட்ட உலகத் தமிழர் அனைவரும் பதட்டத்துடன் நிலையை கவனித்து வந்தனர். மூன்று நாட்களுக்கு மேல் இந்த நிலமை நீடித்தது தளபதி கிட்டு ஈழத்தில் புலிகளின் தலைமைக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் தொடர்பு கொண்டு கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். புலி தலைமையிடமிருந்து கனத்த இதயத்துடன் பதில் வந்தது.'இப்படிப்பட்ட நேரத்தில் என்ன முடிவு எடுக்க முடியுமோ அதை எடுத்து விடுங்கள்' என்பது தான்.

உடனே கிட்டு வேலையாட்களாக வந்த மாலுமிகளை கடலில் குதித்து நீந்தி அருகில் உள்ள கப்பல்களிடம் சென்றுவிட உத்தரவிட்டார். தடயங்கள், ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது. பின்பு தனது சகாக்களுடன் ஒரே அறையில் இருந்து கொண்டு எரிவாயு சிலிண்டர்களை திறந்து அறை முழுவதும் நிரப்பி, விசக்குப்பிகளை கடித்துக் கொண்டு 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகமே' என முழக்கமிட்டபடியே எரித்துக் கொண்டனர். கிட்டுவின் கப்பல் முழுவதும் எரித்துக் கொண்டனர் கிட்டுவின் கப்பல் வெடித்துக் முழுவதும் பற்றி எரிந்து வெடித்துச் சிதறும் காட்சியை இந்திய கடற்படை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தளபதி கிட்டுவின் சாம்பல் கூட எதிரிகளிடம் கிடைக்க விடவில்லை.

தமிழீழ கடற்கரை கிராமங்களில் குவிந்திருந்த மக்கள் யாவரும் கதறி அழுதனர். இயக்கத்தின் தொடக்க காலம் தொட்டு தன்னுடன் பயணம் செய்த தன் உயிர்த் தோழனின் மறைவு தலைவர் பிரபாகரனை மிகப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.  கிட்டுவின் மறைவு குறித்து பிரபாகரன் அப்போது கூறினார்...' வங்க கடைலிலேயே கிட்டு பலியாகிவிட்டான் என்ற  செய்தியை கேட்டவுடன் என் இதயமே அதிர்ச்சியால் குழுங்கி விட்டது. ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் நம்மை அழ வைத்தவர்களை அழ வைக்கவேண்டிய காலம் இது. என் சுமைகளில பெரும் பகுதி சுமையை கிட்டு தாங்கி கொண்டிருந்தான்' என்று வேதனையுடன் கூறினார். இந்த சம்பவத்தில் இருந்து தான் பிரபாகரன் வைத்திருந்த நீண்டகால கடவுள் நம்பிக்கையும் கைவிட்டார்.

கிட்டுவின் வீரச் சாவுக்கு ஒரு மாதம் முன்புதான் கிட்டு சந்தியாவை திருமணம் செய்திருந்தார். மருத்துவக் கல்லூரி மாணவியான சந்தியாவும் கிட்டுவும் பல வருடங்களாக காதலித்தார்கள், தனது அரசியல் கடமைகளை தொடர்ந்து செய்ய வேண்டியிருந்ததால் திருமணம் தள்ளி போடப்பட்டு அப்போது தான் முடிந்திருந்தது. விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை முழுவதுமே தலைவர் பிரபாகரன் உட்பட தாயக விடுதலைக்காக தங்களையும் தங்களது குடும்பத்தையுமே களத்தில் பலி கொடுத்தவர்கள்தான்.

   நமது தாய் தமிழகம் இன்று வாக்குச் சீட்டு வியாபார வர்த்தக சூதாட்ட அரசியலால் சிதைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள்  புரையோடிப் போன இந்த நோயிலிருந்து விடுபட்டு விடுதலைக்கான மாற்று போராட்ட அரசியலை கையில் எடுத்தாக வேண்டும் என்பதை தான் தளபதி கிட்டுவின் நினைவு நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்.

மாவீரன் கிட்டுவுக்கும் பலியாகிப்போன அவர் தோழர்களுக்கும் வீரவணக்கம்..

    - வைகை கருப்பையா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக