|
பிப். 6
| |||
*திருமலை நாயக்கர் ஏந்திய வாள் தமிழர்களுக்கு எதிரானது!*
செயலலிதா ஆட்சிக் காலத்தில் 2016ஆம் ஆண்டு சனவரி24ஆம் தேதி #தைப்பூசத் திருநாளில் பிறந்தவரென்று கூறப்படுபவரும் மதுரையை ஆட்சி செய்தவருமாகிய திருமலை நாயக்கரின் பிறந்த நாள் விழாவானது அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அப்போதே திருமலை நாயக்கரின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு மதுரையில் உள்ள சில தெலுங்கு மொழி பேசும் சாதிச் சங்கங்கள் “மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சமே, திருமலை மன்னர் சிலைக்கு மாலை அணிவிக்க வாருங்கள்” என்று சுவரொட்டி அடித்து அழைத்தனர் .
2017ஆம் ஆண்டிலும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று வரும் தைப்பூச திருநாளில் திருமலை மன்னர் பிறந்த நாள் விழா சுவரொட்டிகள் மதுரை வீதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
அன்றைக்கு முதல்வர் செயலலிதா தனது அறிக்கையில், திருமலை நாயக்கர் வீர உணர்வு மிக்கவர் என்றும், எதிலும் தொடர்ந்து போராடும் மன வலிமை வாய்ந்தவர் என்றும் தமிழக வரலாறு தெரியாமல் திருமலை நாயக்கருக்கு புகழ்மாலை சூட்டியிருந்தார். அதனையே மன்னர் சிலை மாலை அணிவிப்பு விழாவில் கலந்து கொண்ட சாதி சங்கங்களைச் சார்ந்த தலைவர்களும் வழி மொழிந்து பேசினர்.
உண்மையில், திருமலை நாயக்கரின் வீர உணர்வும், தொடர்ந்து போரிடும் மன வலிமையும் யாருக்கு எதிராக இருந்தது என்பதை செயலலிதா உள்பட பலரும் அறிந்திருக்க வில்லை என்றுதான் தோன்றுகிறது.
திருமலை நாயக்கர் தனது வீரத்தை பறைசாற்றும் வகையில் ஏந்தி நிற்கும் வாளானது தமிழ்ச்சாதிகளான மறவர், பிறமலைக்கள்ளர், நாடார்,பரதவர் ஆகியோருக்கு எதிராகப் போரிட்டு கொலை செய்த வாளாகும். இந்த வரலாற்று உண்மையை மூடி மறைத்து விட்டு, மகாலை கட்டினார், தெப்பக்குளத்தை வெட்டினார் என்று கூறுவதெல்லாம் மேம்போக்கான சில வரலாற்று தகவல்களாகும்.
விசய நகரப் பேரரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில் தமிழக வரலாற்று ஆய்வாளர் கு.ராசய்யன் என்பவர் ‘தமிழக வரலாறு 1565- 1967’ என்ற நூலை எழுதியுள்ளார். அது போல் ஆ.சிவசுப்பிரமணியன் என்பவரும் ‘கிறித்தவமும் தமிழ்ச்சூழலும்’ என்ற நூலில் பிரமலைக் கள்ளர்களை வெளியேற்றிய திருமலை நாயக்கரின் அடாவடி குறித்தும் சில தகவல்களை தந்துள்ளார். அவற்றிலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகளை இங்கு அறியத் தருகிறோம்.
“விசயநகரப் பேரரசின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து நாயக்கர்கள் தங்கள் ஆதிக்கத்தைத் வலுப்படுத்தி தென்கோடிப் பகுதி வரை தங்கள் செல்வாக்கினை நிலை நாட்டிக் கொண்டனர். தெலுங்கு அரசர்கள் தமிழக அரசுகளைப் பணிய வைத்து அம் மண்ணின் மைந்தர்களை அடிமை நிலைக்குத் தாழ்த்தினர்.அதைத் தொடர்ந்து நாயுடுகள், ரெட்டிகள், ராஜீக்கள் போன்ற தெலுங்கர்கள் அலை அலையாகத் தமிழகத்தில் குடியேறத் தொடங்கினர். ராணுவ, நிர்வாக நிறுவனங்களில் தமிழர்களை அகற்றி விட்டு அவர்கள் அமர்ந்து கொண்டனர். பெரும்பாலான இடங்களில் ஆண் இனத்தை அழித்து, பெண்களை அடிமையாக்கி வளம் கொழிக்கும் நிலங்களை அபகரித்துக் கொண்டதாக பல்வேறு கிராமங்களின் பராம்பரியச் செய்திகள் கூறுகின்றன.
எங்கே அடியோடு அழிந்துபோய் விடுவோமா என்றஞ்சிய மக்கள் பலர் வறண்ட நிலப்பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர்.
திரு வேங்கட மலைப்பகுதிகளில் வாழ்ந்த கள்ளர்கள் அழிவினின்றும் உயிர் தப்பி, மேலூர், நத்தம் பகுதியிலுள்ள காடுகளில் குடியேறினர். அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இவ்வாறு வெளியேறியதால் திருவேங்கடத்திலிருந்து சென்னை நகரின் சுற்றுப்புறம் வரையிலுள்ள நிலப்பகுதிகளில் தெலுங்கர்களே எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள் ஆனார்கள். அவர்கள் மேலும் அப்பகுதியில் குடியேறினர். அதன் விளைவாக புகழ் பெற்ற திருப்பதி கோயிலையும், தங்கள் தாயகத்தின் வடபகுதியையும் தமிழர்கள் இழந்தனர்…
ஏசு சபை ஆவணங்களும், ராமப்பையன் அம்மானை போன்ற நாடோடிப் பாடல்களும், ‘நாடார் மன்னரும் நாயக்க மன்னரும்’ போன்ற நூற்களும் தெலுங்கர் அடக்குமுறையினின்றும் தாயகத்தை விடுவிக்க தமிழினத்தவர் மீண்டூம் மீண்டும் நடத்திய போராட்டங்களை பற்றிக் குறிப்பிடுகின்றன.
பரதவர்கள் போர்த்துக்கீஸியர் துணையோடு நாயக்கர்களுக்கு எதிராகப் போராடித் தோற்றனர். தொடர்ச்சியாகப் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்ட நாடாரினத்தவரும் ஒடுக்கப்பட்டனர்.”
(தமிழக வரலாறு, கு.இராஜய்யன் பக்.35,36.)
மேலும் அதே நூலில், 1635இல் சேதுபதி மன்னர் சடைக்கத் தேவர் என்பவர் தெலுங்கர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து திறை செலுத்த மறுத்ததாகவும், திருமலை நாயக்கர் மூலம் அனுப்பப்பட்ட இராமப்பையன் சடையக்கத் தேவரை கைது செய்து மதுரைக்கு கொண்டு வந்ததாகவும், மக்களின் கடும் எதிர்ப்புக்கு திருமலை நாயக்கர் அடிபணிந்து சடையக்கத் தேவரை மீண்டும் சேதுபதியாக ஏற்றுக் கொண்டதாகவும் நூலாசிரியர் கு.ராசஜய்யன் குறிப்பிடுகிறார். இதன் மூலம் திருமலை நாயக்கருக்கு எதிராக தமிழர்கள் மீண்டெழுந்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றதையும் அறிய முடிகிறது.
மதுரை நாயக்க மன்னர்களில் குறிப்பிடத்தக்கவரான திருமலை நாயக்கர் ஆட்சியில் நிகழ்ந்த முக்கிய அரசியல் நிகழ்ச்சி ஒன்றை, பல்தார் டி கோஸ்ட்டா என்ற சேசுசபைத் துறவி போர்ச்சுக்கீசிய மொழியில் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் பதிவு செய்துள்ளதாக ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் ‘கிறித்துவமும் தமிழ்ச்சூழலும்’ நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
“திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டு கொண்டிருக்கும் போது மூன்றாம் ஸ்ரீரங்கன் என்பவன் விஜயநகர மன்னனாக இருந்தான். வயதில் இளைஞனாகவும் குடிப்பழக்கம் உடையனவாகவும் இருந்த அவனுக்கு அடங்கி இருக்க திருமலை நாயக்கர் விரும்ப வில்லை.
அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு நிகழ்வு நடைபெறாத நிலையில், அவனுக்கு எதிராக மூன்று நாயக்க மன்னர்களும் இணைந்து அவனைத் தாக்கி வேறொருவனை மன்னனாக்க வேண்டுமென்று தஞ்சை, செஞ்சி, நாயக்கர்களிடம் திருமலை நாயக்கர் கூறினார். இது நிறைவேறாத நிலையில் அவரது தலைநகரான மதுரையை பிரமலைக் கள்ளர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
மூன்றாம் ஸ்ரீரங்கனின் துணையுடன் மதுரையைத் திருமலை நாயக்கர் மீட்டார். மதுரையை மீட்டதும், அவர்களுக்குத் துணை நின்ற பிராமணர் ஒருவரின் கண்களைப் பிடுங்கி எறிந்ததுடன் அவரின் பூணூலையும் அறுத்தெறிந்தார். பின் முகத்தில் வழியும்படி மலச்சட்டியைத் தலையில் சுமக்கச் செய்ததுடன் கழுதை மேலேற்றி ஊர்வலமாக வரச் செய்து சிறையிலடைத்தார்.
சில மாதங்கள் கழித்து சிறைச்சுவரில் கன்னமிட்டு, அப்பிராமணரைப் பிரமலைக் கள்ளர்கள் மீட்டுச் சென்றனர். இது போன்று தமிழ் நாட்டின் சமுக, அரசியல் பண்பாட்டுச் செய்திகளைக் கூறும் தன்மையில் சேசு சபைக் கடிதங்கள் பல அமைந்துள்ளன.”
திருமலை நாயக்கருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவோர் சாதி கடந்து, மொழி கடந்து நடுநிலையோடு மேற்கண்ட வரலாற்று உண்மைகளை படித்து தெளிவு பெறுவது நன்று.அவரின் இறப்பு பற்றி தேடி படிக்கவும்.
//நன்றி: Karthikeyapandian Kalyanigandhi//

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக