திங்கள், 28 மே, 2018

தமிழகம் ராணுவமயம் சாகர்மாலா நாசகார திட்டம் ஹிந்தியா மண்ணழிப்பு

aathi1956 aathi1956@gmail.com

பிப். 6
பெறுநர்: எனக்கு

ஆண்டாள் பிறச்சனை முக்கியம் அல்ல
உன்னை அழிக்கவந்த சாகர்மாலா திட்டம்
நடமுறை படுத்த நடக்கும் நாடகமே,

சாகர் மாலா திட்டம் என்ற பெயரில் பி.ஜே.பி. அரசால் கொண்டு வரப்படும் திட்டத்தால் நீல பொருளாதாரம் எனப்படும் கடல் வளமே மக்களிடமிருந்து பறிபோகும் அபாயம்.

(சாகரம் என்றால் கடல் தான். மாலா என்றால் மாலை. ஆக கடல் மாலை )

பாதிக்கப்படப் போவது யார் யார்?

1. கடலில் மீன் பிடிக்கும் 25 கோடி மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் இழப்பார்கள்.
2. 3600 மீனவ கிராமங்கள் தங்களின் கடற்கரை மண்ணிலிருந்து அந்நியப்படுத்தப்படும்.
3. 12 பெரிய மற்றும் 165 சிறிய துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களும் இனி அந்நிய மற்றும் நாட்டு தனியார் முதலாளிகளின் வசமாகும்.

சாகர் மாலா திட்டத்தில் அமையப் போகும், அழியப்போகும் கடல் பொருளாதார மண்டலங்கள்:

4. 4120 சதுர கிலோ மீட்டர் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்படும்.

5. இந்தியாவின் கடற்பரப்பில் உள்ள 1208 தீவுகளும் இனி அந்நிய கார்பொரேட் நிறுவனங்களின் தீவுகளாக மாற்றப்படும். இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட பகுதியாக மாறப்போவது வெகு சீக்கிரம்.

6. சாகர் மாலா என்ற திட்டத்தின் மூலம் அந்நிய தனியார் நிறுவனங்கள் நமது நாட்டின் கடல் வளங்களை கொள்ளை அடிப்பதற்கு நமது அரசாங்கம் ஒதுக்கியுள்ள மக்களின் வரிப்பணம் தொகை 8 இலட்சம் கோடி. அதாவது ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் வரிப்பணமாக கொடுத்துள்ள தொகை 6,400 ரூபாய்.

7. சீன மீன்பிடி வலையையே அனுமதிக்க கூடாது என்று போராட்டம் நடத்தும் மீனவர்களின் வாழ்வாதாரமே பறிபோகும் நிலை. இனி மீன் பிடிக்க கடலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலை ஏற்படப் போகுது.

II. சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக
எதிர்ப்புக்குரல் வலுக்கும் தமிழ்நாடு
படிப்படியாக இராணுவ மயமாக்கப்பட்டு வருகிறது.

1. கூடங்குளத்தில் இராணுவ அணு உலை:

தமிழக கடலோர மக்களின் வாழ்வாதாரமாகிய மீன்பிடி தொழிலை அழித்து,
இதுவரை இரண்டு ஆண்டுகளாக மின்சாரமே உற்பத்தியாகாத அணு உலையில்,
மின்சார உற்பத்தி என்ற பெயரில் இராணுவ பயன்பாட்டிற்காக,
இரசியாவில் நிராகரிக்கப்பட்ட அணு உலை தொழில்நுட்பத்தை வலியத்திணிக்கும்
வல்லாதிக்க இந்திய இராணுவத்தை என்ன சொல்ல?

அணு உலை வெளியேற்றும் அணுக்கழிவு மற்றும் கொதி நீரால் அப்பகுதி மீன் வளமே அழியும் நிலை.

மீனவர்களும் மீன் பிடிக்க செல்ல முடியாத மண்டலமாக தடை செய்யப்பட்ட பகுதிகள்.

தன் சொந்த நாட்டு மக்களை அகதியாக்கி, அநியாயத்தை தடுக்க போராடும் நிராயுதபாணி மக்களை இராணுவம் கொண்டே ஒடுக்குமுறை செய்யும் இக்கொடுமை அரச பயங்கரவாதம் இல்லையா?

மக்களை அச்சுறுத்த இராணுவ விமானங்களும் கூட பயன்படுத்தப்பட்டன.

2. தஞ்சாவூரில் இராணுவ விமான தளம்

தஞ்சாவூர் இராணுவ தளத்திற்காக நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கூட வழங்கப்படவில்லை. அவர்கள் வாழ்ந்த பகுதியில் நுழையக்கூட தடை. இந்தக் கொடுமையை எங்க சொல்ல? காண்க:

தஞ்சாவூர் விமான படைத்தளம்:

3. அரக்கோணத்தில் விமான, கப்பல் இராணுவ தளங்கள்: INS ராஜாளி (Rajali):

அரக்கோணம் கடல் விமான இராணுவ தளத்தில் அமெரிக்க விமானங்கள் எதற்கு? காண்க:

4. கோவை சூலூர் விமான தளம்:

5. தாம்பரம் விமான தளம்

6. இராமநாதபுரத்திற்கு அருகில் உச்சிப்புளியில் கடற்படை விமானத்தளம் INS பருந்து. காண்க:

உச்சிப்புளி விமானப்படை ஓடுபாதை

1982 ல் தமிழ் ஈழத்தை கண்காணிக்க தொடங்கப்பட்ட இந்தத் தளம் பின்னர் தென் இந்தியக் கடல்கள் முழுவதும் கண்காணிக்க விரிவு படுத்தப்பட்டுள்ளது. காண்க: மற்றும்  காண்க:

7. தனுஷ்கோடி:

இவ்வளவு ஆண்டுகள் கேட்பாரற்று கிடந்த தனுஷ்கோடி மீது 2017 ல் இந்திய இராணுவத்திற்கு திடீர் அக்கறை எதற்கு?


20 கி.மீ. நீண்ட, அகல சாலை இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை போடப்பட்டுள்ளது
சாகர் மாலா இராணுவ நோக்கத்திற்காகவே.

8. ஊட்டி வெல்லிங்டனில் ஏற்கனவே இராணுவ பயிற்சி கல்லூரி செயல்படுவது நாம் அறிந்ததே.

நேரடி இராணுவ தளங்கள் தவிர

9. அயல் நாட்டு இராணுவம் போல்
தன் நாட்டு மக்களுக்கெதிராக
தூண்டிவிடப்பட்ட ரௌடிகளாக,
ஆளும் அரசாங்கத்தின் அடியாட்களாக
மாறிப்போன தமிழக காவல் துறையின் அட்டூழியங்களை புதிதாக சொல்லத் தேவையில்லை.

உலகமே வியந்து போற்றிய மிக அமைதியான,
தமிழக இளைஞர்களின் 12 நாள் மெரினா போராட்டத்தை
வன்முறைக்களமாக மாற்ற
அரசியல்வாதிகளால் தூண்டப்பட்ட காவல்துறை எடுபிடிகள்.

திருப்பூர் உதவி துணை காவல் ஆய்வாளர் பாண்டியராஜன் ரௌடியாகவே மாறி ஒரு பெண்ணிடம் தன் வீரத்தைக் காட்டி டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய பெண்ணை ஊனமாக்கிய கொடுமை.

10. மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான விவசாயத்தின் மீது

அடக்குமுறை அரசின் பொருளாதார இராணுவ தாக்குதல்

1. நெடுவாசலில் 

2. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில்
கெயில் நிறுவனத்திற்காக (GAIL) விவசாய நிலங்கள் அழிப்பு

3. இந்தியா முழுவதும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க
தனியார் நிறுவனங்களை கொண்டு வரும்
மத்திய, மாநில (கமிஷன் ஏஜென்ட்) தரகு அரசாங்கங்கள்.


11. மக்களைப் பாதுகாக்காமல்
மக்களுக்கு பேரழிவு தரும் கொடூர அட்டூழியங்களைப் பாதுகாக்க 
என மாற்றப்பட்ட
மக்களின் வரிப்பணத்தில் வாழும் அதிகார வர்க்கம்.

இராணுவம், காவல்துறை யாரை பாதுகாக்க?
1. அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பாதுகாக்க

2. மக்களுக்கு பேரழிவு தரும் டாஸ்மாக் கை பாதுகாக்க

12. சென்னை கடற்கரையில் அந்நிய நிறுவனங்கள் கொட்டிய எண்ணையை அகற்ற மட்டுமல்ல, யார் கொட்டியது என்று கண்டுபிடிக்க முடியாமல், அவர்களுக்கு தண்டனை தராமல் தப்பிக்க விட்ட நமது வெட்கங்கெட்ட அரசுகள். காண்க:

கடலில் கொட்டப்பட்ட எண்ணையை
பி.ஜே.பி. அரசு டிஜிட்டல் முறையில் அள்ளியபோது எடுத்த அரிய புகைப்படம்.

13. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த போது இலங்கை அதை செய்யவில்லை என்றது.

பின்னணியில் அப்போது உருவான தமிழக மக்களின் நெடுவாசல், கதிராமங்கலத்துக்கான ஹைட்ரொ கார்பன் எதிர்ப்பு உணர்வை திசை திருப்ப பி.ஜே.பி. அரசே தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு.

14. இந்திய கடலோர காவல்படை தமிழக மீனவர்களை சுட்டு காயப்படுத்தியதோடு,
இந்தியில் பேசச்சொல்லி அவமானப்படுத்திய அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசின் இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்,



15. குண்டு எங்கிருந்து வந்தது என்று கூட தெரியவில்லை என்று
பொறுப்பற்ற தனமாக சொல்லியிருக்கும் இவரெல்லாம்
உலகில் நான்காவது பெரிய இந்திய படையின்
இராணுவ அமைச்சர் என்று சொல்லிக்கொள்ள வெட்கம் வராதா? காண்க:

16. குமரி மாவட்ட இணையம் என்ற கடற்கரை ஊரில் தற்போதுள்ள மீன்பிடி துறைமுகத்தை அழித்துவிட்டு அதானி என்ற தனியார் முதலாளியின் துறைமுகமாக கொண்டுவர முயற்சிக்கிறது மத்திய பி.ஜே.பி அரசாங்கம்.

அதானி என்ற ஒரு தனி முதலாளிக்காக
கொண்டுவரப்படுகிற ஒரு பேரழிவுத்திட்டம்: இணையம் துறைமுகம்

அதானிக்கும் மோடிக்கும் உள்ள தொழில் உறவு தேர்தல் கால வானூர்தி உறவு.

இணையம் துறைமுகம் எதிர்ப்பு ஏன் என்பது பற்றிய ஒரு காணொளி:
மற்றும் சாகர்மாலா எதிர்ப்பு பற்றிய ஒரு கட்டுரை:

17. சாகர்மாலா திட்டமும் கச்சத்தீவு பகுதியில் பாதிக்கப்படும் தமிழக மீனவர்ளும்

இந்தியக்கடற்பரப்பில் தமிழகப் பகுதியில் மட்டும் மீன்பிடி பகுதி இலங்கை தீவால் சுருங்கி இருப்பதால் இதன் முழு பாதிப்பும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும்தான். இதுபற்றி விளக்கமாக காண:

மற்ற மாநில கடல் பிரதேசத்தில் 370 கிலோமீட்டர் வரை மீன் பிடிக்க உரிமை இருக்கும்போது தமிழர்களுக்கு 10 கிலோமீட்டர்தான். உடனடியாக இலங்கை பகுதி வந்துவிடுகிறது. கீழே உள்ள வரைபடத்தை பார்த்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

கன்னியாகுமரி, கடலூர், நாகப்பட்டினம், சென்னைப்பக்கம் தான் தமிழர்கள் மீன் பிடிக்க இடம் இருக்கிறது. வேதாரண்யம் முதல் உவரி, திருச்செந்தூர் வரை உள்ள மீனவர்களுக்கு பிரச்சினைதான்.

இதில் 30 ஏப்ரல் 2015 தேதியிட்ட தினமலர் நாளிதழ் கச்சத்தீவு கிடைத்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா என்று கேலி பேசுகிறது. நிச்சயமாக தீர பெரும் வாய்ப்பு உள்ளது.
கீழே உள்ள படத்தில் சர்வதேச எல்லை கச்சத்தீவின் காரணமாக எந்த அளவிற்கு தமிழர்களின் கடல்பரப்பை இலங்கை எடுத்துக்கொள்ள உதவி இருக்கிறது என காட்டுகிறது.

கச்சதீவு நம் பக்கம் இருந்தால் நமக்கு தீவு மட்டுமல்ல தீவோடு சேர்ந்து வரும் கடல்பரப்பும் நமக்கு கிடைக்கும். 

அது பல தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும்.

கச்சத்தீவு மூலமாக நமக்கு கிடைப்பது தீவு நிலம் மட்டுமல்ல, மற்றும் கடல் பரப்பு மட்டுமல்ல, கடல் மற்றும் கடல் நிலத்திற்கு அடியிலுள்ள அபிரிமிதமான எண்ணெய் வளம். காவிரி படுகை என்று சொல்லப்படும் பெட்ரோல் எண்ணெய் பகுதியும் நம் கைவிட்டு போகாமல் நம் உரிமை நமக்கே கிடைக்கும்.

சாகர் மாலா திட்டத்தின் ஒரு நோக்கம்
இப்பகுதி காவிரி படுகையில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை
தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கவே.

நம் அனுமதி இல்லாமல் நம் நிலத்தை அந்நியனுக்கு தானமாகக் கொடுத்த இந்தியத் தேசியத்திடம் போராடி மீட்போம். நம் உரிமையை நிலைநாட்டுவோம். தமிழக மீனவர் உயிரைக் காப்போம்.

இவை தவிர சாகர் மாலா திட்டத்தின் மூலம்
மக்களின் வாகன வசதிக்காக போடப்பட்ட
18. சாலைகளையும் கூட இராணுவம் விட்டுவைக்க வில்லை.

ஏற்கனவே தனியார் மயப்படுத்தப்பட்ட சாலைகள் நுழைவு வரி என்ற பெயரில் கொள்ளை அடிப்பது நடக்கும் கொடுமைகள் போதாது என்று இனி இராணுவமும் தங்களின் கட்டுப்பாட்டில் சாலைகளை கொண்டுவந்து மக்களை கொடுமைப்படுத்த போகின்றன.

வாகனம் செல்லும் சாலையில் விமானங்கள் போனால் சாலைகளின் கதி ?

தமிழகத்தில் சென்னை-பாண்டிச்சேரி நெடுஞ்சாலை ஏற்கனவே இராணுவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது. காண்க:

காஷ்மீரின் இராணுவ மயம் எப்படி இசுலாமிய தீவிரவாதமாக மாற்றப்பட்டு காட்டப்படுகிறதோ அதே போல இனி வெகு விரைவில் தமிழகமும் இராணுவ மயமாக்கப்பட்டு, அந்த அரச இராணுவ பயங்கரவாதத்தை மறைக்க தமிழ்த் தேசிய வாத அடக்குதல் எனப் பெயர் திரிக்கப்பட்டு, காஷ்மீர் போல இனி தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதற்கும் கூட முடியாத வகையில் அடக்குமுறை சட்டங்கள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. முன்னதாக விழித்துக்கொள்வது மிக மிக அவசியம், அவசரம்.

19. சீனாவின் முத்துமாலை திட்டமும்
இந்தியாவின் சாகர் மாலா திட்டமும்:

அரசின் மக்களுக்கெதிரான திட்டங்களுக்கு எதிராக எப்போதெல்லாம் மக்களின் எதிர்ப்புகள், போராட்டங்கள் வலுக்கிறதோ அப்போதெல்லாம் இந்திய இறையாண்மை, கடலாமை என்று சொல்லி பயமுறுத்தி அல்லது போருக்கான காரணங்களைச் சொல்லி மக்களை திசை திருப்பும் செயலை செய்யும் மத்திய அரசு இந்த காலகட்டத்தில் சீனாவின் முத்துமாலை கடல் திட்டங்களை சொல்லி மக்களை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள்.

சீனாவின் முத்து மாலை திட்டம் பற்றி மேலும் அறிந்து கொள்ள: (String of Pearls)

சீனாவின் இந்தியப்பெருங்கடல் திட்டங்களும், இந்தியாவின் பதிலடிகளும், அமெரிக்காவின் இராணுவ தளங்களும் பற்றி மேலும் விளக்கமாக காண

ஆனால் இந்திய தனியார் முதலாளிகளும் சீன முதலாளிகளும் கூட்டு சேர்ந்து தொழில் செய்வதெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரியாது என்றும் அவர்களை ஏமாற்றுவது சுலபம் என்றும் நினைத்து கொள்கிறார்களோ என்னவோ?

அப்படியே சீன பொருளாதார பலத்தை பெருக்குகிறது என்றால்
இந்தியாவும் சுயச்சார்பாய் தனது பொருளாதார வல்லமையை பெருக்க வேண்டியதுதானே தவிர பிற அமெரிக்க, ஐரோப்பிய கார்பொரேட் நிறுவனங்களை கொண்டுவந்து
துறைமுகம், கடற்கரை, தீவுகள், தொழில்கள் போன்றவற்றை தாரை வார்ப்பதை
எந்த மூடத்தனத்தில் சேர்ப்பது.

வீட்டிற்குள் புகுந்த எலியைக் கொல்ல
வீட்டையே எரிப்பதற்கு சமமில்லையா இந்த சாகர் மாலா?

20. எல்லா பிரச்சினைகளுக்கும் மையமாக தமிழ்நாட்டை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்

இவைகளைத்தவிர தற்போது சாகர் மாலா திட்டம் வேற:

சாகர்மாலா திட்டம் என்ற பெயரில் பி.ஜே.பி. அரசால் கொண்டு வரப்படும் திட்டத்தால் நீல பொருளாதாரம் எனப்படும் கடல் வளமே மக்களிடமிருந்து பறிபோகும் அபாயம் பற்றிய ஒரு கட்டுரை: காண்க:

இணையம் மற்றும் சீர்காழியில் வர இருக்கும் தனியார் துறைமுகத் திட்டங்களால் ஏற்பட இருக்கும் ஆபத்துக்கள் பற்றிய ஒரு ஆங்கில கட்டுரை:காண்க:

பாரிசாலன் என்பவரின் சாகர் மாலா பற்றிய விளக்க காணொளி: காண்க:

21. தமிழனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல:

இந்தியாவிற்கே, ஏன் விரைவில் உலகிற்கே
நீதியின் உரிமைக்குரலாக உரத்து ஒலிக்கப்போகும் குரல்
தமிழனின் குரலாகத்தான் இருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்பது வெறும் ஒற்றுமையை போற்றும் சங்கப்பாடல் மட்டுமல்ல,
தமிழனின் செங்குருதியோடு சேர்ந்த
பெருமைமிக்க பண்பாட்டின்
ஒட்டுமொத்த மனித குல விடுதலைக்கான
அடங்கமறுக்கும் போர்க்குரல்.

தமிழன்/ரஅ.ஆதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக