செவ்வாய், 19 ஜூன், 2018

குறும்பர் வரலாறு தெளிவில்லை ஊகம் பழங்குடி


aathi1956 aathi1956@gmail.com

பிப். 14
பெறுநர்: எனக்கு

Re: [MinTamil] Re: தமிழகப் பழங்குடி மக்கள் - குறும்பர்
Sign in - Desktop ↰ வல்லமை
12/24/14
Sign in to reply K. Loganathan
நின்னா சுபா
குறும்பர்கள் பல்லவர்கள் போன்றாரைப் பற்றி இங்கு வரும் சில குறிப்புக்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, பாரசீகத்துடன் தொடர்புடையவர்கள் எனும்போது அங்கு வாழ்ந்த திராவிட மொழி பேசிய ஏலாமியர்களாக இவர்கள் இருக்கலாம் என்றும் படுகின்றது, மேலும் இது சுமேரியத் தொடர்புகளையும் காட்டுகின்றது. பாரசீகத்துன் அண்டை நாடு சுமேரிய என்பதொடு அங்கு வளர்க்கப்பட்ட ஆப்புஎழுத்தே ஏலாமியர்கள் எழுத்தும் ஆகும்
இந்த பல்ல்வர்களே பிறகாலத்தில் வன்னியர்களாக திரிந்து இன்றும் தங்களை சைத்திரியர்கள் என்று கூறிக்கொண்டு தனித்து நிற்கின்றார்கள், பல்லவர்கள் வடமொழிச் சார்புடைய தொல்தமிழர்களில் ஒருசாரார் என்றும் அவர்கட்கு முன்பே சுமேரியாப் பாகுதியிலிருந்து சங்கத் தமிழர் இங்கு வந்திருக்கலாம் அதனைத் தொடர்ந்தே பாரசீகப் பகுதியிலிருந்து இந்தப் பல்லவர் குறும்பர்கள் போன்றோரும் பல கன்னடியர்களும் வந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.
பல்லவர்க்ளைப் பற்றிய ஆய்வு வளர்ந்தால் தமிழர்கட்கும் சுமேரியாவிற்கு உள்ள தொடர்புகள் வெளியாகலாம்.
உலகன்
2014-12-24 5:42 GMT+08:00 Suba.T.
ksuba...@gmail.com >:
பகுதி 3
இதே நூல் நீலகிரி பகுதியில் வசிக்கும் குறும்பர்கள் ஆடுமாடுகளை வளர்க்கும் குறும்பர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என குறிப்பிடுகின்றது. இவர்களது மொழி, உடை, பழக்கம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்கின்றது என்றும் அறிய முடிகின்றது.
இது மட்டுமன்றி டி.வி.மகாலிங்கம் குறும்பர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் திராவிட நாட்டில் தொண்டைமண்டலம் வரை தமது ஆட்சியை கமண்ட், குறும்பப்பிரபு, திராவிடதேசாதிபதி எனும் பெயர்களுடன் நடத்தி வந்தார்கள் என்றும் குறிப்பிடுவதையும், ஆர்.சத்தியநாதய்யர், தாலமியின் குறிப்புக்களிலும் அசோகனின் கல்வெட்டுக்களிலும் அர்த்த சாத்திரத்திலும் இரகுவம்சத்திலும் இடம் பெற்றுள்ள புலிந்தர் என்பவர்கள் குறும்பர்களே என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அறியமுடிகின்றது.
குறும்பர்கள் பல்லவர்களின் பிரதினிதி என்ற வகையில் பரீசிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பழங்குடிகள் என்று அறிஞர் மீனாட்சி எழுதியுள்ளமையும் ஒரு கருத்தாகின்றது. இந்தியாவிற்கு வந்த அவர்கள் வட இந்தியப் பகுதியில் நீண்ட காலம் தங்க முடியாமல் தெற்கு நோக்கி வந்து, காஞ்சிபுரம் வந்து காஞ்சியில் தங்கினர் என்ற குறிப்பு கெஸட்டியரில் காணக்கிடைக்கின்றது. வெங்கய்யாவின் ஆய்வு இதே நோக்குடன் சென்று இம்மக்கள் தென்னிந்தியா வந்து குடியமர்ந்த காலத்தையும் இவர் நிர்ணயிக்கின்றார். வைகுந்தப் பெருமாள் கோயிலில் உள்ள பல்லவ மன்னர்கள் சிற்பத்தில் உள்ள சிகை அலங்காரத்தை ஒத்த கி.பி.2 அல்லது 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக்டீரியன் அரசர்களது சிகை அலங்காரத்தை ஒத்திருப்பதை இதற்கு அவர் ஆதாரமாகக் காட்டுகின்றார். அறிஞர் இராசநாயகம் தென்னிந்தாயாவைச் சேர்ந்தவர்களே என்றும் அல்லது ஈழத்தைச் சேர்ந்த சோழர் நாகர் தொடர்பை உடையவர்கள் என்றும் குறிப்பிடுவது மாறுபடுவதாக உள்ளது.
குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்டவர்கள் என்பதற்கு சான்று தருவதாக மெக்கன்சி சுவடிகள் அமைகின்றன. அவை பற்றிய செய்திகளைத் தொடர்ந்து காண்போம்.
தொடரும்..
சுபா
2014-12-20 11:51 GMT+01:00 Suba.T.
ksuba...@gmail.com >:
பகுதி 2
குறும்பர் எனும் பெயர் கொண்ட பழங்குடியினத்தினர் பூர்வீகத்தைப் பற்றி விளக்கும் தகவல்கள் சில தமிழ் லெக்சிகனில்
பதிவாக்கப்பட்டிருப்பதை இந்த நூல் குறிப்பிடுகின்றது.
குறும்பர் என்பர் குறுனிலமன்னர்
குறும்பர் என்பர் பழமையான சாதியினர்
குறும்பர் என்பர் வேடர்
இடைச்சாதியில் முரட்டுக் கம்பளி நெய்யும் ஒரு பிரிவினர்
குறும்பர் என்பர் பள்ளர் சாதியில் ஒரு பிரிவினர்
தமிழ் இலக்கியங்கள் வெருங்கதை, சீவகசிந்தாமணி, பிங்கல நிகண்டு, புறநானூறு, கூர்ம புராணம், மலைபடுகடாம் ஆகிய நூல்களில் குறும்பர் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன என்ற குறிப்பையும் காண்கின்றோம்.
வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற வேள்விக் குடி செப்பேட்டிலும் காட்டுக் குறும்பு சென்றடைய நாட்டுக் குறும்பிற் செருவென்றும் என்று குறும்பர்கள் குறிப்பிடப்படுவதையும் குறிப்பிடவேண்டும்.
ஆயினும் 1891ம் நூற்றாண்டின் புள்ளி விபர அறிக்கை என்பது..
குறும்பர் அல்லது குறுபா என்போர் பழங்கால குறும்பர்கள் அல்லது பல்லவர்கள். ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுமையும் வலிமையாக இருந்து குறிப்பாக ஏழாம் நூற்றாண்டில் ஆட்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த பல்லவ மன்னர்கள் இனத்தோர் இவர்கள் என்று குறிப்பிடுகின்றது. 7 அல்லது 8ம் நூற்றாண்டின் ஆதொண்டை என்ற சோழ அரசனால் குறும்பர்கள் பல்வேறு இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டார்கள். பலர் மலைகளுக்கு ஓடி மறைந்து கொண்டனர். அவர்கள் நீலகிரி, வேநாடு, கூர்க் , மைசூர் ஆகிய இடங்களில் இன்றும் காணப்படுகின்றார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தொடரும்..
சுபா
2014-12-16 21:08 GMT+01:00 Suba.T.
ksuba...@gmail.com >:
மெக்கன்சி சுவடிகளில் தமிழக பழங்குடி மக்கள் என்ற நூல் டாக்டர்.ம.ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு ஆய்வு நூல். இது இரண்டு வகையில் பல அரிய தகவல்களைத் தருகின்ற ஒரு நூலாக அமைகின்றது.
1. மெக்கன்சியின் ஆவணச் சேகரிப்பு தமிழக நிலப்பரப்பில் வாழும் சில பழங்குடி மக்களைப் பற்றி நாம் தற்சமயம் அறிந்து கொள்ள வாய்ப்பை வழங்குகின்றது
2. குறும்பர் பழங்குடி இனத்தோர் பற்றிய பல வரலாற்று சமூக நிலை தகவல்களை அறிந்து கொள்ள இந்த ஆவணக் குறிப்புக்கள் உதவுகின்றன.
இந்த நூலை வாசித்துக் கொண்டிருந்தபோது பழங்குடி மக்களைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. இந்திய நில அளவையாளராக பணியாற்றிய கெர்னல் கோலின் மெக்கன்சி அவர்கள் தாம் தொகுத்த தகவல்களைச் சேகரித்து வைத்ததின் அடிப்படையில் இந்த மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய பல்வேறு தகவல்களை நாம் இன்று அறிந்து கொள்ள முடிவதற்கான் வாய்ப்பு அமைந்திருக்கின்றது என்பதை மறந்து ஒதுக்கி விட முடியாது.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியா முழுமையும் பயணித்தவர் மெக்கன்சி. தன்னோடு உள்ளூரில் மக்கள் பேசும் மொழியில் பரிச்சயமானோரை தனது உதவியாளர்களாக அமைத்துக்குக் கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று சமூகவியல், மக்கள் வாழ்வியல் வரலாறு, மொழி, இலக்கியம் என பல தகவல்களைத் தொகுத்தவர் மெக்கன்சி.
அந்த வகையில் குறும்பர் எனப்படுவோர் ஒரு வகை பழங்குடி மக்கள் என்பதோடு அவர்களைப் பற்றிய தகவல்களும் மெக்கன்சி ஆவணத் தொகுப்பில் இடம்பெருகின்றன.. இதனைப் பற்றிய விபரங்களை மெக்கன்சி சுவடிகளில் தமிழக பழங்குடி மக்கள் என்னும் தலைப்பிலான இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது. இதில் காணப்படும் தகவல்களை நான் இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். குறும்பர் பழங்குடி இனத்தோர் பற்றிய வரலாற்று சமூக தகவல்களை வழங்க விரும்புவோர் இந்த இழையில் பங்களிக்க வரவேற்கின்றேன்.
மெக்கன்சி ஆவணத் தொகுப்பில் உள்ள தமிழ்ச் சுவடித் தொகுப்பில் 10 சுவடிகளில் குறும்பர் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்த 10 சுவடிகளில் 7 சுவடிகள் மூல சுவடிகள். ஏனைய மூன்று சுவடிகள் மூல சுவடியிலிருந்து படியெடுக்கப்பட்டவை.
தொடரும்...
சுபா
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com -மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.com -அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
http://tamilheritagefoundation.
blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:
http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to
minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
mintamil+u...@googlegroups.com .
For more options, visit https://groups.google.com/d/optout .
8/27/15
Sign in to reply N. 
Sent from my Samsung Galaxy smartphone.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக